Home » » வேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் !

வேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் !

அடுத்து ஒரு சாமியார் ரெடி!


வேலூரையடுத்த காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மகா-தேவமலை இருக்கிறது. இந்த மலையின் குகையில் சாமியார் ஒருவர் இருக்கிறார். 30 வருடங்களாக மலையின் குகைக்குள் இருந்த இச்சாமியார், அய்ந்து ஆண்டு-களுக்கு முன்பாக வெளிச்சத்துக்கு வந்தார்.

இவர், தன்னை மகானந்த சித்தர் என்று அழைத்துக் கொள்கிறார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சித்தர் குளிப்பாராம். நிமிடத்திற்கு ஒருமுறை தன் உடல் முழுதும் விபூதியை தடவிக் கொள்வாராம். தங்கியுள்ள குகையில் தலைகீழாகத் தொங்குவாராம்.

அவர் உறங்-கும்போது அய்ந்து தலை நாகம் ஒன்று அவர்மீது புரண்டு விளையாடுமாம், உணவு உண்பதில்லை, வெறும் தண்ணீர் மட்டுமே குடிப்பார் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் பேசிக் கொள்வார்களாம்.

அப்படிப்பட்ட சித்தர் இப்போது ஏ.சி. அறைக்குள் இருந்து வருகிறார். கோயி-லுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார். மலைமீது ஏகப்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு வரு-கின்றன. எந்த ஒரு கட்டடத்துக்கும் முறையான அனுமதி வாங்கப்பட-வில்லை என்று ஒரு பேச்சு இருக்கிறது.

சாமியாரைத் தரிசிக்க மத்திய, மாநில அமைச்சர்களும் அவரது குடும்பத்-தினரும் வரத் தொடங்கிவிட்டார்கள். வேலூர் மாவட்டத்திலிருக்கும் பல செல்-வந்தர்கள், சாமியாரை தரிசித்துவிட்டு, ஏகப்பட்ட அரிசி மூட்டைகளை அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பசு மாடுகளை தானமாக வழங்கு-கிறார்-கள். சாமியார்பற்றி பலவித தகவல்கள் கிடைக்க, என்னதான் நடக்கிறது என்-பதை அறிய நாம் அங்கு சென்றோம்.


மகாதேவமலை மீது உருவாகிக் கொண்டிருக்கும் மாளிகை போன்ற கட்டடம் காண்பதற்கு, மலைப்பாக இருந்-தது. காரணம், அத்தனை பிரமாண்ட-மாக உருவாகிக் கொண்டுள்ளது அந்த கட்டடம். நாம் அங்கு போனபோது சித்தர், மலை உச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு வி.அய்.பி.க்களை அழைத்துக்கொண்டு போயுள்ளதாக கூறினார்கள்.

நாமும் மலை உச்சிக்கு போனபோது மகானந்த சித்தர், வி.அய்.பி. பக்தர்களுக்கு கோயிலை சுற்றிக்காட்டி அதன் பெருமைகளை கூறிகொண்டிருந்தார். நம்மை அறிமுகப்படுத்தி கொண்டதும், என்னா நிருபரே! என்ன எழுதப்போறீங்க. போய் பாருங்க..

இந்தக் கோயிலை கட்டுவது எல்லாம் நான் மட்டுமே. வேறு யாரும் இல்லை. நான் மட்டுமே பிச்சை எடுத்துத் தான் இதை கட்டுகி-றேன் என்றவர் நம்மிடம் பேசிக்-கொண்டே கட்டடத்தின் ஓரத்திற்கு போய் இங்குதான் லிப்ட் வரப்பேகுது என காட்டினார்.

வாங்க அறைக்கு போகலாம் என அழைத்து சென்றவர் வழியில் ஓரிடத்தில் பெரிய பாறையையும் அதன் கீழுள்ள கதவுகளையும் காண்பித்து, இதுதான் நான் இருந்த குகை என்றார்

அந்தக் குகை வாசலில் புதர் மண்டி கிடந்தது. கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று பார்த்தால், சிறிய தொட்டி போன்ற அமைப்பு கொண்ட ஓர் இடம் உருவாக்கப்பட்டு, அதில் சாம்பல் குவியலுக்கு மத்தியில் லேசாக நெருப்பு கனன்று கொண்டிருந்தது. என்ன அது? என்று சித்தரிடம் கேட்டதற்கு, நான் ஒரு நாளைக்கு இரண்டு தடவை நெருப்புப் படுக்கையில் படுப்பேன். அதுதான் எனது படுக்கை என்றார்.

இதே பக்கத்திலுள்ள மலையை உடைத்து காங்குப்பம் கிராம மக்-களுக்கு இரண்டாயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப் போகிறேன். அதுவும் பிச்சையெடுத்துதான் கட்டுவேன். வீட்டுக்கு 9 லட்சம் ரூபாய் என்று பட்ஜெட் போட்டிருக்கிறேன் என்றார்.


வீடுகட்ட பணம் ஏது? அறக்கட்-டளை வைத்திருக்கிறீர்களா? என்-றோம்.
என்னிடம் அறக்கட்டளையும் கிடையாது. ஆட்டுகுட்டியும் கிடை-யாது. இங்கு வரும் வி.அய்.பி.க்களிடம் பிச்சையெடுக்கிறேன்.

நான் இதுவரை 75 ஆயிரம் ஊமைகளை பேச வைத்துள்ளேன். மக்கள் எல்லா கெட்ட பழக்கங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். நாங்கல்லாம் சின்னபுள்ளைங்களா இருக்குறப்போ சாப்பாடு கிடைக்காது. அக்கம் பக்கம் போய் கூழ் வாங்கிக்குடிப்போம். அரசாங்கம் இன்றைக்கு 1 ரூபாய்க்கு 1 கிலே அரிசி தருகிறது. துணிமணி தரு-கிறது. அதை வைத்து சாப்பிட்டு, உடுத்திக்கொண்டு சம்பாதிப்பதைச் சேர்த்துவைக்க வழிசெய்துள்ள அரசு நன்றாகத்தான் உள்ளது.

வேறு என்ன. என்னைப் பத்தி மத்த விஷயங்களை மக்கள் கிட்டே கேளுங்க என்றார். சித்தருக்கு மிகவும் வேண்டப்பட்ட ரைஸ்மில் மார்கு என்-பவரிடம் பேசியதில், அவரது பூர்-வீகம்-பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. அவர் தருமபுரியைச் சேர்ந்-தவர் என்பது தெரியும்.

முதலில் இங்கு இருந்தவர் தேவானந்தம் என்பவர்தான். குகைக்குள் அவர் அடக்கமாகிவிட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் ரிஷிகேஷிலி-ருந்து லிங்கம் ஒன்றை கொண்டு வந்-தார். அதை காளஹஸ்தி வழியாக மகா-தேவமலைக்கு கொண்டு வந்தார்.

அவருக்குப் பிறகு பூஜை செய்ய வந்தவர் தான் இந்த சித்தர். எனக்குப் பின்னே ஆண்டியொருவர் வருவார். அவர் கோயிலை நிறைவாக கட்டி ஊருக்கு நல்லது செய்வார் என்று சொன்னது போலவே, இந்த மகானந்தர் வந்து சேர்ந்து கோயிலைக் கட்டிக் கொண்டுள்-ளார்.

அதிகாரிகள் மற்றும் வசதி படைத்-தவர்கள் தரும் நன்கொடைகளை கெண்டு இந்தக் கோயிலை பராமரிப்பு செய்கிறார். அதே சமயம் தனக்குச் சீடராக யாரையுமே அவர் ஏற்றுக்கொள்ள-வில்லை என்றார்.

இம்மலையில் எழுப்பப்பட்டு வரும் கட்டடங்களுக்கு அரசு அனுமதி பெறப்-பட்டிருக்கிறதா என்று, காங்குப்பம் ஊராட்சி கவுன்சிலர் சிதம்பரத்திடம் கேட்டோம். கோயிலில் நடக்கும் திரு-விழாவின்போது கூப்பிடுவார்கள். மற்ற-படி அங்கு நடப்பது எதுவும் எனக்குத் தெரியாது என்று ஒதுங்கிக் கொண்டார்.

மகாதேவமலையில் இருக்கும் கோயிலை இந்து அறநிலையத்துறை நிருவகித்து வருகிறது. இந்து அற-நிலை-யத்துறை அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்டபோது, முறைப்படி அனுமதி வாங்கிய பின்னர்தான் அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

முக்கியப் பிரமுகர் ஒருவர் வாரந்தோறும் இச்சாமியாரி-டம் வந்து செல்வதால், கட்டடப் பணிகள்பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியவில்லை என்று சொல்கின்றனர் கிராம மக்கள். இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மையைத் தெரியப்படுத்தவேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்-கின்றனர்.

- பி.ஆர்.ஆனந்த்ராஜ்   (தமிழக அரசியல் இதழிலிருந்து )

http://viduthalai.periyar.org.in/20100512/news09.html

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger