Home » » மியூசிக் அகாதெமியின் 2013-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிப்பு

மியூசிக் அகாதெமியின் 2013-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிப்பு

 
சுதா ரகுநாதன்
சென்னை மியூசிக் அகாதெமியின் 2013-ஆம் ஆண்டு "சங்கீத கலாநிதி' பட்டத்துக்கு கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் சுதா ரகுநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மியூசிக் அகாதெமியின் 87-வது ஆண்டு இசை மாநாட்டுக்கு (டிசம்பர் 15, 2013-ஜனவரி 1, 2014) அவர் தலைமை வகிப்பார். மறைந்த இசை மேதைகள் எம்.எல். வசந்தகுமாரி, ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் இசை பயின்றவர் சுதா ரகுநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிய விருது: நாட்டிய கலா ஆச்சார்யா விருதுக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மியூசிக் அகாதெமி நாட்டிய விழா தொடக்க தினத்தன்று (ஜனவரி 3, 2014), இந்த விருது சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு வழங்கப்படும்.

இது தொடர்பாக மியூசிக் அகாதெமியின் தலைவர் என்.முரளி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-


மியூசிக் அகாதெமியின் நிர்வாகக் குழு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) கூடி கீழ்க்கண்ட கலைஞர்களை விருதுக்குத் தேர்வு செய்து 87-வது ஆண்டு இசை மாநாட்டில் கௌரவிக்க உள்ளது. விவரம்:-


சங்கீத கலா ஆச்சார்யா (2 விருதுகள்): டி.பசுபதி (வாய்ப்பாட்டுக் கலைஞர்); கல்யாணி சர்மா (வாய்ப்பாட்டுக் கலைஞர்).
டி.டி.கே. விருதுகள் (இருவர்): டாக்டர் பிரபஞ்சம் சீத்தாராமன் (புல்லாங்குழல் கலைஞர்); தஞ்சாவூர் ராமமூர்த்தி (மிருதங்க கலைஞர்).
இசைக் கலைஞர் விருது: டாக்டர் ஆர்.எஸ். ஜெயலட்சுமி.
பாப்பா வெங்கடராமைய்யா விருது: எச்.கே.நரசிம்மமூர்த்தி.                                  

நன்றி :- தினமணி, 29-07-2013


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger