Home » » யாழ்ப்பாணத்து ஓதுவார்கள் தொடர் அறிமுகம் 7, 8 & 9

யாழ்ப்பாணத்து ஓதுவார்கள் தொடர் அறிமுகம் 7, 8 & 9


  07.சுப்பிரமணியம் குமாரசாமி


தவத்திரு வடிவேற் சுவாமிகளின் மாணவராவார். இணுவில் மேற்கைச் சேர்ந்தவர். இணுவிலிலே அமைவு பெற்ற கந்தசாமியாலயத்தை வழிபாடு செய்தவர்.

யாழிலும், குழலிலும் இனிமையான குரல்வழத்தினைக் கொண்டவர். திருமுறை ஓதுவதிலும் பஜனை பாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார். முருகனிடம் கூடிய ஈடுபாடு கொண்டவர்.

நல்லூர், சந்நிதி போன்ற ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வழிபாடாற்றி வருவார். இவரது இறை சேவையின் பயனாகவே மூத்த புதல்வன் பட்டதாரியாகி கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

  08.பண்ணிசைச் செல்வர் கா.சிவக்கொழுந்து


காளிங்கரின் மூன்றாவது புதல்வர் மு.சின்னத்தப்பிச் சட்டம்பியாரிடம் சமயநூல்க் கல்வியையம், பண்ணிசையையும் கற்றார். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் கற்றவர்.

தனது பண்ணிசைத் திறமையை ஏனையவருக்கும் கற்பித்துக் கொடுத்தார்.

நாடகம் நடிப்பதிலும் வல்லவவர்.

பரமுச்சாமியாரின் பஜனைக்குழுவிற்கு தலமைதாங்கி நெறிப்படுத்தியவர். அம்பாளின் திருத் தொண்டிலும் அதிகளவு பங்கேற்றார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்

தட்டச்சு – க.சுகதீஸ்

--------------------------------------------------------------------------------------------------------------

  09. திருஞானசம்பந்த ஓதுவார்


தித்திக்கும் தீந்தமிழ் பனுவலான திருமுறைகள் சைவமதத்தினருக்கு கிடைத்திருக்கும் அரும்பெரும் பொக்கிசமாகும்.  அந்த இனிய பாடல்கள் முறையான பண்ணோடு பிழையின்றி ஓதப்படும்போது கிடைக்கும் இன்பமே அலாதி.

தேவார இசைமணி தாவடியூர் கே.எஸ்.ஆர். திருஞானசம்பந்தனார் ஒலிப்பேழைகளும் ஒலித்தட்டுக்களும் வெளியிட்டுள்ளார்.  தந்தையாரிடம் பண்ணிசை பயின்றவர்.

 நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பண்ணிசைப் புலவர், பண்ணிசை வேந்தர் என்ற பட்டங்களை வழங்கியுள்ளது.

1984ல் கிருபானந்தவாரியாரால் திருமுறை வித்தகர் பட்டமும்

1999ல் கைதடி சச்சிதானந்த ஆச்சிரமத்தால் அருளிசை அரசு பட்டமும்

இந்து கலாச்சார அமைச்சினால் கலைஞானகேசரி பட்டமும்

சர்வதேச இந்துமத குருபீடத்தால் பண்ணிசை கலாமணி பட்டமும்

இந்துப் பேரவையால் சிவகலாபூஷணம் பட்டமும்

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் கலாபூஷணம் பட்டமும்

வழங்கப்பட்டுள்ளது.
—நன்றி—-
வலம்புரி நாளிதழ், யாழ்
------------------------------------------------------------------------------------------------------------
www.ourjaffna.com

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger