Home » » காரைக்குடியில் தனிநபர் நூல் சேகரிப்பு இல்ல

காரைக்குடியில் தனிநபர் நூல் சேகரிப்பு இல்ல

Karuannam Annam
21 Jul (2 days ago)

to mintamil, vallamai, தமிழ், muththamiz, houstontamil
இரண்டு நாட்களுக்கு முன் காரைக்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலன் அவர்களது தனிநபர் நூல்சேகரிப்பு வீட்டிற்குச் சென்றேன்.

இரண்டு தள வீடு கட்டி வீடு முழுவதும் நூல்கள். 40 ஆண்டு சேகரிப்பு.
ஏறத்தாழ இருபதினாயிரம் நூல்கள்.அடுக்கிவைத்துள்ளார்.

செட்டி நாட்டு மரபு பழைய பொருட்கள், மற்ற பழைய பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் பணி நிறைவுக்குப் பின் ஏற்பட்டு  Hall, இரண்டு அறைகள் முழுக்க அரிய பொருட்கள் சேகரித்துவைத்துள்ளார்.
.
தான் அடுத்துள்ள சிறிய வீட்டில் வசித்துவருகிறார். CECRI யில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். வைணவப் பெருந்தகை. சிகை வளர்த்து அம்சமாகத் திகழ்கிறார். குழந்தை போன்ற ஆர்வத்துடன் நூல்களையும், பொருட்களையும் காட்டுகிறார்.

நூலகத்தில் 1812ல் பதிப்பக்கப்பட்ட திருக்குறள், நாலடியார், சங்க இலக்கியம் முழுத்தொகுதி, மகாபாரதமும் வால்மீகி இராமாயணமும் வடமொழி மூலம் - அடி நேர் தமிழ் உரையுடன்  பலதொகுதிகள், உவேசா நூல்கள், சித்திரம்,சிற்பம் கலைநயத்தைச் சித்தரிக்கும் நூல்கள், விஞ்ஞானம் மருத்துவம், தலபுராணம் என்று அரிய சேகரிப்புக்கள் உள்ளன.
அச்சில்லாமல் பெயிண்டால் வரையப்பட்ட தாவரம், விலங்கின் வரலாறு புத்தகமும் 3D டைனோசர் புத்தகமும் வெறெங்கும் காணமுடியாதவை.
பழம்பொருட்களில் பாக்குவெட்டிகள், செய்கோன் சித்திர வேலைப்பாடு மரவைகள், மரப்பாச்சிப் பொம்மைகள், எழுத்தாணிகள், தந்தம் கொம்புகளால் உருவான பொருட்கள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், உலோகம்,மரம்,பளிங்குப் பொருட்கள், ஜப்பானிய மரஉறை வாள் என விரிகிறது.
நான் கூறியுள்ளது நூறில் ஒன்றுதான்
.
வேறொரு சிறப்பு அம்சம் நூல்கள் அகில உலக தசமப் பகுப்பாய்வின்படி அடுக்கப்பட்டுள்ளன, எந்தத் துறை சார்ந்த புத்தகத்தையும் இரண்டு நிமிடத்தில் எடுத்துவிடலாமென்றார்.

9.02.2006 தினமலர் இதழில் படத்துடன் அரைப்பக்கச் செய்தி வந்துள்ளது. தாங்கள் பதிவிடும் பயனுள்ள செய்திப் பகிர்வுகளில் நூல் நிலையங்கள் பற்றிய பதிவொன்றில் தனிநபர் சேகரிப்பாளர்களில் புதுக்கோட்டை ஞானாலாயா கிருஷ்ணமூர்த்திக்கு அடுத்து ஸ்ரீவித்யா ராஜகோபாலன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டேன்
.
நூல்நிலையமாக அறிவித்துச் செயல்படவில்லை. ஆனால் ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பெடுத்துச் செல்கிறார்கள். நேரில் வருபவர்களுக்கு ஆர்வத்துடன் எடுத்துக் காட்டி விளக்குகிறார். 
 
40 ஆண்டுகள் நூல்சேகரிப்புக்குப் பின் கடந்த 5 ஆண்டு பராம்பரியப்பொருள் சேகரிப்பு ஒரு விலைமதிப்பில்லாத சிறந்த சேகரிப்பாக உருவாகிறது. 
 
காரைக்குடியிலேயே பலருக்கு தெரியவில்லை என்பது உண்மையே. பொதுவாக நூலகங்களுக்கும், மியுசியங்களுக்கும் செல்லும் ஆர்வலர் தொகை குறைவே. தனிநபர் சேகரிப்பு, அவர் ஒருவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மட்டும் உள்ளது என்கிறபோது சிரமங்களும் உண்டு. 
 
 ரோஜா முத்தையா சேகரிப்பு நூல்கள் உரிய இடம் பெற்றதுபோல சேகரிப்பாளருடன் தக்க ஆர்வலர் சேர்கிறபோது மிளிரும்.

காரைக்குடிக்கு வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் அவரது இல்லமும் குறிப்பிட்ட இடமாக அமையுமென்பது உறுதி.

முகவரி:
ஸ்ரீ வித்யா ராஜகோபாலன்,
38, சிதம்பர அக்ரஹாரம், முத்துப்பட்டிணம்
காரைக்குடி 1
தொடர்பு எண்ணுக்குத் தனி மடலில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger