Home » » " வெளிக்கரு - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் , கட்டடக்கலை வல்லுநர் ,கல்லல்

" வெளிக்கரு - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் , கட்டடக்கலை வல்லுநர் ,கல்லல்
                "’சத்யமேவ ஜயதே’ - முண்டக உபநிடதம் என்ன சொல்கிறது ?  
இது ஒரே ஒரு கேள்விதான் ?
பல  வினாக்கள்  நூலில்  உள்ளன

                                         வெளிக்கரு

தமிழ் இளைஞர்களின்
கலைப்பும் குலைத் துடிப்பும்

ஆசிரியர்
பெருந்தச்சன்
தென்னன் மெய்ம்மன்

வெளியீடு
மாநாகன் பதிப்பகம்
எண், 1 /70. வடக்கு நான்காவது தெரு,
கல்லல், சிவகங்கை மாவட்டம்
முதற் பதிப்பு கி.பி.2009

நூல்கிடைக்குமிடம்
3729, பன்னிரண்டாவது தெரு,
மேடவாக்கம் முதன்மைச் சாலை
கோவிலம்பாக்கம்
சென்னை- 600 117
ரூ.350/-

ஆசிரியர் அறிமுகம்:-
முகப்பு அட்டையின் உள்பக்கம், சென்னைப் பல்கலைகழகம், 09- 06 - 1985 -இல் சு.ராதாகிருஷ்ணன் கோயில் கட்டிடக் கலையியல் தேர்வில் முதல் வகுப்பில் அறிவியல் இளையர்  பட்டம் பெற்ற சான்றிதழின் நகல் அச்சேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 TAMILNADU
 GOVERNMENT GAZETTE
 Published by Authority,
 Chennai,  Wednesday,  May 14, 2008
 VAIKASI 1,  Thiruvalluvar Aandu, 2003


அதன்படி, 30 -07 - 1961-இல் சிவகங்க்கை மாவட்டத்தில் பொன்.சுப்பிரமணியன் மகனாகப் பிறந்து, சென்னை-117, மேடம்பாக்கத்தில் வசித்துவரும் சு.இராதாகிருஷ்ணன், தனது பெயரை  08 - 05 - 2008 - இல்தென்னன் மெய்ம்மன் என்று  பெயர்மாற்றம் செய்து கொண்ட அறிவிப்பின் நகல் அச்சேற்றப்பட்டுள்ளது.

1975-ல்  சென்னை வள்ளுவர் கோட்டம் நிறைவுப் பணி வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது,  மாமல்லபுரம் சிற்பக்கலைப் பயிற்சி மையத்தில் மாணாக்கரனாவர். எட்டாண்டுகள் தொடர்ந்த பயிற்சிக்குப்பின், கோயில் கட்டடக் கலைப் பட்டப் படிப்பில் முதல் மாணாக்கனாகத் தேறி தங்கம் வென்றார். வழங்கியவர், அப்போதைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம்.
இவர் பிறந்த ஊர் கல்லல், சிவகங்கை மாவட்டம்.

செருமன்நாட்டுப் பேராசிரியர் இயான்தனம் ( JOHN DUNHAM )  இவரது 21-வது வயதில் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துச் சென்றார்.

“அவன் எ4ன் சொத்து, திருப்பிக் கொடுத்துவிடு; இந்த நிறுவனத்தையே அவனுக்காகத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்”  எனக் கேட்டுக் கல்லூரியின் தலைமை 60 நாட்களில் திரும்ப வரவழைத்து இணை விரிவுரையாளராகப் பணியமர்த்திக் கொண்டது.                                                

1986- ஆம் ஆண்டுவரை மாமல்லபுரம் சிற்பக்கலை மற்றும் கட்டடக் கலைக் கல்லூரிக்குத் தலைமைப் பொறுப்பு. ஆனந்த குமாரசாமியின் கட்டுரைகளையும், மொழிஞாயிறு பாவாணர் கட்டுரைகளையும் படித்ததால் இவர் மன மாற்றமடைந்து, அரசுப் பதவியை உதறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் இவர் பயின்ற நிறுவனம் தேங்கி நிற்கிறது. ( இந்நூல் வெளியான ஆண்டு 2009 ) உறிஞ்சப்பட்டு உறைந்து நிற்கிறது. ஒரு முதல்வரை நேர்முகத் தேர்வின் வழியே தேர்ந்தெடுக்க அரசுக்கு நிமிர்வு இல்லை. 
ஈராயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் இயல்பாகத் தலையெடுத்த ஒரு நிறுவனம், தனது தலைமைக்கு ஒரு நேர்முகத் தேர்வைத் தவிர்க்கவேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டது எத்துணை வெட்கக் கேடு ? 
கையூட்டும் கயமையும் கலைபயிற்சிக்குத் தேவை வென்று நாட்டுவது, இக்கால இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தனது தந்தையார் பொன்னழகு சுப்பிரமணியன் அகவை முதிர்ந்து அழ்வெளி நிறைந்த 08 - 07 2005 - அன்று, நெடுந்தொலைவில், தனியனாய்த், தன்னியலாய் இவர் எழுதிக்கொண்டிருந்த ஒரு கட்டுரை " வெளிக்கரு " அதனை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பாக இஇந்த நூலை ஆக்கி அவரது திருவடிகளுக்கே படையலிடுகிறேன் என்று எழுதியிருப்பதைப் படிப்போர் விழிகளில் கண்ணீர்த் துளிகள் நிச்சயம் தோன்றும்.

"....வெட்டவெளி ஒரு பிளவு. அதனை மீண்டும் பிளக்க முடியாது. ஆனால் அளக்க முடியும் என்பதை அறிந்தவன் தமிழன்.

பிளக்க முடியாத முழுமையான அந்தப் பிளவை, பிளக்க முடியாத ம்முழுமையான அதன் பண்பின் தெளிந்த தன்மையைக் கொண்டே அளந்து அளவு கோலாக்கிக் கொண்டவன் தமிழன், பிளக்க இயலாத ஒன்றைத்தான் அளக்க இயலும் என்பதை நன்கு விளங்க்கிக் கொண்டவனும் அவனே ".

அறிவியல் நெறிகளால் கலை நெறிகளைத் தீண்ட முடியும். மீறிக் காயப் படுத்த முடியும். ஆனால், கலைநெறிகளால் அறிவியல் நெறிகளை அலுங்காமல் கடக்கமுடியும். அடக்கி ஒடுக்க முடியும் ஒடுக்கி மீட்டு எடுக்க முடியும் முழுமையாக.

கறிக்கோழிகளை உருவாக்குகிற கூலிக் கல்வி முறையின் நச்சுக்கைகள், கலைப் பயிற்சியைக் காயப்படுத்திவிட்டன. கொழுப்பை மொய்க்கிற ஈக்கள் போல, அழகுணர்வே இல்லாதவனை அழகுபடுத்த அலைகிறார்கள். அவனது கொழுப்பில் ஓர் இழுப்பு வேண்டிப் பொய்க்கிறார்கள்.

உயிர்மேச்சலைத்தேடி மேய்ச்சற் பெருவெலி முதிர்வசைவைக் கூர்கூர்ந்தவன் வயிற்றுப்பாட்டு மேய்ச்சல் வேண்டி இண்டு இடுக்குகளில் தீனி தேடி அலைகிறான்.

பொம்மைகளின் போக்கிடம் கலைக்கூடங்களே அன்றி கருவறைகள் அல்ல என்பதை உணராதிருக்கிறான். கையில் அள்ளிய சோற்றையும் தின்றுவிட்டுத் தன் விரல்களையும் வலியின்றித் தின்னும் தன்னுணர்வற்ற கொடு நிலையில் உள்ளவனை என்னவென்பது ?

தாழ்ந்த உண்மைகளைச் சுமந்துகொண்டு யாரும் தலைமை ஏற்க வேண்டாம். அச்சம் அற்ற நிமிர்வே மேன்மை. தமிழ் இளைஞர்கள், கலை நெரீகளை வயப்படுத்த வேண்டிய கூடுதல் முழுப்பொறுப்பு உடையவர்களாக இருக்க வேண்டும்.தமிழ் வளர்ச்சியும், தமிழர் கலைகளின் வளர்ச்சியும், தமிழர் கலைகளின் வளர்ச்சியும் நின்ற சுவல் மீது வேயப்பட்ட பொன்  கூரையாக மிளிரும்.

முகப்பு, முற்றம், சுற்றுக்கட்டு, காவல், பெருங்கேள்வி  - என்ற நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் இடம் பெற்ற செய்திகளும், வரலாறும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்."ஸ்தபதி" என்ற சொல் தமிழில் "பெருந்தச்சனாக" மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

 எஞ்சியவற்றை நூலில் காண்க.                                            

 ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “                                                                   

பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்  ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்திலேயே தொடர்ந்து பணியாற்றியிருந்தால்,

இங்குள்ளவர்கள் "அவன் எங்கள் சொத்து" என்று மீண்டும் அழைத்துக் கொள்ளாதிருந்தால்,

இன்று உலகம் போற்றும் பெருந்தச்சனாகத் திகழ்ந்திருப்பார்.

இவரது திறமையைத் தமிழக அரசு முழுமையாகப் ப்யன்படுத்திக் கொள்ளவேண்டும். .


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger