Home » » "ஞானத்தாழிசை" 4-வது பாடல் உரை ஐந்தருவி சுவாமி சங்கரானந்தா,

"ஞானத்தாழிசை" 4-வது பாடல் உரை ஐந்தருவி சுவாமி சங்கரானந்தா,


 "நான் ஆத்மாவே" என்று உணரச் செய்வதே சித்தநெறியின் சாரம்.

"நான் உண்மையில் இந்த சரீரம் அன்று;
இந்த மனமும் அன்று;
என்னைப் பொறுத்தவரையில் பாவமும் இல்லை; புன்ணியமும் இல்லை.
அவ்விதமாயின் உண்மையில் நான் யார் ?
அகண்ட சச்சிதானந்தமாய் என்றும் எதிலும் நிலைபெற்று விளங்கும் ஆத்மாவே நான்.
இந்த ஆத்மாவே எல்லாச் சரீரங்களிலும் தன்னைத் தோற்றுவிக்கிறது'
இதனை உணர்ந்தவனே ஜீவன் முக்தன்.

Image

"ஞானத்தாழிசை" -மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது 4-வது பாடல்

"வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகியநாதத் தொனிவிந்தின் செயல்கண்டு
களிப்பெற்றனை தயவுற்றனை பிறவிக்கட லென்னும்
களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒலிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே"

Image

"ஞானத்தாழிசை" 4-வது பாடல் :-விளக்கவுரை:- சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி
சிவயோகியானவன் சிதாகச வெளியாகிய ஒளியில் விந்தின் தச நாதங்க்களை அனுபவித்து, அன்பு வடிவமாகி, அமுதத்தை உண்டு, பிறவி எனும் தளையற்று பசி, , தாகமற்று, ஓதலைத் தவிர்த்து நாளும் கோளும் அற்று இறுதியில் தன்னை மறந்த நிலையில் அவதூதனாய் இருக்கிறான்.

நிர்வாண வட்டத்தினுள் அதாவது, சுழு முனையுள் மனமடங்கும்போது சூரியன், சந்திரன்,நட்சத்திரங்கள், தீ, தீப ஒளி, மின்னல், வெளி, விந்து, முக்கோணம், நவரத்தின ஒளி, வானம், தாமரை மலர், நீலம் மஞ்சள் - சிவப்பு வண்ணங்கள் போன்றவை தோன்றும். அவை மட்டுமன்றி, சங்கநாதம்,வீணையினொலி, மணிநாதம், புல்லாங்க்குழல் இசை, மிருதங்க்க ஒலி, பேரிகை ஒலி, இடி முழக்கம் போன்ற நாதங்களையும் கேட்கலாம்.

சிலவேளகளில் திவ்விய மணத்தினை நுகற்வதாலேற்படும் ஆனந்தத்தையும் அமுத ரசத்தினையுப் பருகும்போதேற்படும் உள்ளக் கிளர்ச்சியினையும் அனுபவிக்கலாம். மேற்கூறியவற்றுனுள் ஏதேனும் ஒன்றை அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெறும்போது மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.அவ்வானந்த அனுபவத்தை விவரிக்குந் திறன் நம் சொற்களுக்கு இல்லை.

இம் மனம் சில வேளைகளில் அமுத ரசத்தையோ, மற்றும் சில வேளைகளில் சூரிய ,சந்திர ஒளி, மணிநாதம் போன்றவற்றையோ பற்றிக்கொண்டு தன்னை மறந்து , வியப்பில் ஆழ்ந்து பேரின்பப் பெருங்க்கடலுள் மூழ்குகிறது. அதாவது சச்சிதானந்தக் கடலினுள் மூழ்குகிறது. இத்தகைய மோன நிலையில் புலங்களும் மனமும் அடங்க்கும்போது அதனைத் தொடர்ந்து பலகாலம் இப்[பேரதிசயத்தைக் கண்ணுற்றவனாக இப்பேரானந்தப் பெருங்கடலினுள் மூழ்கியவனாக நிர் விகல்ப சமாதியில் ஆழ்ந்து விடுகிறான் யோகி.

"சத்தியார்கோவில் இடம் வலம் சாதித்தால்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம்
நித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதானந்தி ஆணையே.:"

என்று திருமூலர் கூறியிருப்பதும் இங்கு எண்ணி இன்புறத்தக்கது.
Image

கிடைக்குமிடம்:-சங்கராஸ்ரமம்,
ஐந்தருவி, குற்றாலம் P.O.
திருநெல்வேலி மாவட்டம்
627 802
---------------------------------------
04633 -- 291166
----------------------------------------

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger