Home » » 500 ரூபாய்க்குச் சாப்பிட்டால் 1 கிலோ வெங்காயம் இலவசம் !

500 ரூபாய்க்குச் சாப்பிட்டால் 1 கிலோ வெங்காயம் இலவசம் !



500 ரூபாய்க்கு சாப்பிட்டால் 1 கிலோ வெங்காயம் இலவசம்: ஜார்கண்ட் உணவகம் கவர்ச்சி அறிவிப்பு

ஜாம்ஷெட்பூர், ஆக. 24-

வெங்காயத்தை உரிக்கும் போது கண்ணீர் வடித்த காலம் போய், வெங்காயத்தின் விலையை கேள்விப்படும் போதே கண்ணீர் வடிக்க வேண்டிய காலகட்டத்தில் ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள ஓர் உணவகம் ‘500 ரூபாய்க்கு மேல் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்’ என கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு பிரியாணி ஓட்டல் 10 நாள் உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று (23-ம் தேதி) தொடங்கி வரும் (செப்டம்பர்) மாதம் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரியாணி-கபாப் திருவிழாவில் 500 ரூபாய்க்கும் அதிகமாக பில்தொகை வரும் அளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு தலா 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அந்த ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உணவு திருவிழாவின் நிறைவு நாளான செப்டம்பர் 3-ம் தேதி தகுதிபெற்ற அனைத்து அதிர்ஷ்டசாலிகளுக்கும் (?) ஒரே நேரத்தில் பரிசு (வெங்காயம்) வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

500 ரூபாய்க்கு சாப்பிட்டால் 1 கிலோ வெங்காயம் இலவசம்: ஜார்கண்ட் உணவகம் கவர்ச்சி அறிவிப்பு                                                                                                  
நன்றி :-மாலைமலர், 24-08-2013

 

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger