Home » » ரத்த சரித்திரங்களான தியாகிகள் தினங்கள்! இந்தியா, ஈரான், அல்பேனியா, மியான்மர், ஆர்மேனியா, வியட்நாம், பனாமா, பங்ளாதேஷ், லெபனான்-சிரியா.

ரத்த சரித்திரங்களான தியாகிகள் தினங்கள்! இந்தியா, ஈரான், அல்பேனியா, மியான்மர், ஆர்மேனியா, வியட்நாம், பனாமா, பங்ளாதேஷ், லெபனான்-சிரியா.
இந்தியா

30-01-2011-சர்வோதய தினம்! துப்பாக்கிக் குண்டுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பலியான நாள். இந்தியாவில் தியாகிகள் தினமாக நடைமுறையில் உள்ளது. மறந்துவிட்ட ம்ஹாத்மாவை தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செய்யும் நாள்.

சுதேசி என்ற ஸ்வதேஷி, சுய ஆளுமை என்ற ஸ்வராஜ், எல்லோருக்கும் நன்மை என்ற சர்வோதயா, ஆத்ம வலிமை என்ற சத்யாகிரகம் இவையே காந்திஜியின் அஹிம்சைக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவங்கள்.

மலர்த் தூவலுடன் நின்று விடாமல், இன்றையச் சூழலில் காந்தியப் பாதையின் அவசியத்தையும், பயன்படுத்திடும் புதிய வழி முறைகளையும் சிந்தித்துச் செயல்பட்டால் இந்தியாவின் சுய ஆளுமை நிலைக்கும்.

ஈரான்

KHORRAMSHAJHR ஈரான் நாட்டின் ஓர் துறைமுக நகரம். ஈராக் நாட்டவரால் அபகரிக்கப்பட்ட நகரம். இதனை மீண்டும் தன்வசப்படுத்திய நிகழ்வு. (26-10-1980) ஆண்டுதோறும் அக்டோபர்,26- ஈரானியரது தியாகிகள் தினம்!

அல்பேனியா

QEMAL STAFA- அல்பேனியாவின் செண்பகராமன் பிள்ளை/ நேதாஜி என்று அழைக்கலாம்.அல்பேனிய இளைஞர் தலைவர். அல்பேனியாவில் பொதுவுடைமைக் கட்சியினை நிறுவியவர். அல்பேனிய தேசிய விடுதலை இயக்கப் போராளி. இத்தாலிய பாஸிச இயக்கத்தினரால் கொல்லப்பட்டவர். அல்பேனியத் தலைநகர் TIRANA-வில் ஓர் வீட்டில் கொலை நிகழ்வு.05-05-1942. அல்பேனிய நாட்டின் தியாகிகள் தினம் மே, 5.

மியான்மர்(பர்மா)

பர்மிய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எழுவர் உட்படப் பலர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான நாள், 19-07-1947. மியான்மர் நாட்டின் தியாகிகள் தினம் ஜூலை,17.

BANGALATHESH-பங்ளாதேஷ்
DHAKA மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டது, ஓர் ஊர்வலம், 21-02-1952-ல்! பெங்காலி தேசிய மொழியாக்கிடுவ்தே அவர்களது குறிக்கோள். வழக்கம்போல் காவலரின் துப்பாக்கிச் சூடு. ABDVS SALAM, RAFIQ UBBIN AHAMED, SOFIUR RAHMAN, ABDUL BARKAT, ABDUL JABBAR -உள்ளிட்ட பலர் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி. தாய் மொழிப் போராட்டம் துவக்கப்பட்ட நாள். பங்க்ளாதேஷின் தியாகிகள் தினம், பிப்ரவரி,2. மொழிப்போர் நாளாகவும் நினைக்கப் படுகின்றது.

UNESCO- ஐக்கிய நாடுகள் அமைப்பு, அனைத்துலக தாய்மொழி நாளாக பிப்ரவரி 21-ஐ, அமுல்படுத்தியது. 17-11-1999-ல் யுனெஸ்கோ இதற்கான தீர்மனத்தை ,பங்களாதேஷ் உட்பட 28 நாடுகள் ஆதரவுடன் எதிப்பு எதுவுமின்றி நிறைவேற்றியது.

அர்மேனியா (ARMENIA)

OTTOMAN EMPIRE TURKEY 1915-1923 காலக் கட்டத்தில் அர்மேனியர் மீது இனப்படு கொலைத் தாக்குதலை நிகழ்த்தியது. இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைமையில் ,அன்றைய் ஆர்மேனியர்கள் உலகம் முழுவதும் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர். பலியானோர் எண்னிக்கை இரண்டு மில்லியனுக்கும் மேல் என்பது தகவல்.ஒட்டோமன் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து அர்மேனிய அறிவுஜீவிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள், 24-04-1915. வரலாறு ரெட் சண்டே என்று கட்டியம் கூறுகின்றது ஆர்மேனியர்களது தியாகிகள் தினம், ஏப்ரல்,24.

இலங்கைத் தமிழர்களைப்போல் உலகம் முழுவதும் அர்மேனியர் பரவி உள்ளனர். அர்மேனிய இனப்படுகொலை நிகழ்வுகள் அவர்களின் நெஞ்சில் அழிக்க முடியாத வடுக்களாகத் தலைமுறைக்கும் தொடர்கின்றன.

இன்றளவும் 21-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அருங்க்காட்சியகங்கள், நினைவுத்தூண்கள், கட்டிடங்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.(1938-2010 வரை.) கடைசியாக 2010-ல் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் கீழே உள்ளது.In 2010 was erected in Mislata (Valencia) in Spain the first monument commemorating the Armenian genocide. The sculpture, three meters high, is in the gardens of the Garden of Sendra, in the old town.


வியட்நாம்

ஹோஸிமின் நாடு என்று போற்றப் படுவது. அமெரிக்காவின் நீண்ட கால ராணுவ நேரடித் தாக்குதலால் சீரழிக்கப்பட்ட நாடு. அமெரிக்காவின் போரினைத் தனது கொரில்லா யுத்த தந்திரத்தால் எதிர் கொண்ட நாடு.

புலியை முறத்தால் விரட்டியடித்த வீரத் தமிழ் மங்கை அந்தக் காலத்தில் நிச்சயம் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தை வலுவாக்கிய மகளிரைக் கொண்ட நாடு.

அமெரிக்காவைப் புறந்தள்ளிய நாடு. வீர வியட்நாமின் போர்த்தியாகிகள் தினம், ஜுலை,27. ஜூலயைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் தெரியவில்லை.

ஒர் திரைப்படத்திற்கு வியட்னாம் வீடு என்று பெயர்வைத்ததன் மூலம், வீரத்தின் விளைநிலமாம் வியட்னாமியரின் வாழ்வாதாரத் தற்காப்புப் போர் கொச்சைப்படுத்தப் பட்டது. வியட்நாம் யுத்த பூமியாக்கப்பட்டதே அன்றி, வியட்நாமியர் கலவரம் எதுவும் செய்யவில்லை.

தமிழகத்தில் சிலர் வியட்நாம் வீடு திரைப்படத்தின் பெயரை மாற்ற முயன்றும் வெற்றிபெற முடியவில்லை.


இந்திரா அரசின் அவசரகாலப் பிரகடனத்தை ஆதரித்துச் சேர்ந்தும் செயலாற்றிவிட்டுப் பல ஆண்டுகளுக்குப்பின் எமர்ஜென்சியை ஆதரித்தது தவறு என்று நேஷனல் கவுன்சிலில் தீர்மானம் போட்டது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

அதே போன்று, வியட்நாம் வீடு படத்தின் பெயரை இப்பொழுது கூட மாற்றிக் கொண்டு அதன் தயாரிப்பாளர்கள் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம்.

வியட்னாம் வீடு சிவாஜி நடித்த வெற்றிப் படமும் கூட.

தலைமுறையையே நாசமாக்கித் தமிழ்ப் பண்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் சாராய சுனாமிக்கே அடிமையாகிவிட்ட தமிழன், திரைப்படப் பெயரிலா அக்கறை காட்டுவான்? டெலிவிஷப் பெட்டிகள் முன்னால் அமர்ந்து வேடிக்கை பார்க்கவே அவனுக்கு நேரம் போதவில்லையே ?

பனாமா-PANAMA
மத்திய அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள குடியரசு நாடு. பனாமா கால்வாய் 1904-1914 காலத்தில் அமெரிக்க ராணுவப் பொறியாளர்களால் கட்டப்பட்டது. 1979-வரை panama canel zone அமெரிக்காவின் நிர்வாகத்தில் இருந்தது. அதன் பின்னர் 1999 வரை அமெரிக்க-பனாமா கூட்டு நிர்வாகம். 1964 ஜனவரி 9-லிருந்து பனாமா குடியரசின் நேரடி நிர்வாகம். என்ணற்ற போராட்டங்கள். சிக்கல்கள்.உடன்பாடுகள் இறுதியில் இறையாண்மை உறுதிப்பாடு. இவர்களது தியாகிகள் தினம், ஜனவரி,9.

லெபனான், சிரியா


டெமாஸ்கஸ் பெருநகரத்தில் சிரியாவின் தேசியவாதிகள் பலருக்கு நிறைவேற்றப்பட்டது மரண தண்டனை. ஒட்டோமன் ஆக்கிரமிப்பாளர்களால்! 06-05-1916. இவ்ர்களது தியாகிகள் தினம் , மே, 5.


இந்து மதவெறியன் கோட்சேவின் குண்டுக்குப் மகாத்மா பலியான நாள், ஜனவரி,30. தியாகிகள் தினமாகவும், சர்வோதய தினமாகவும் சிந்திக்கப்படுகின்றது. இதே போன்று பிற நாடுகளில் ...தேடியதன் விளைவே இந்தப் பதிவு.

அர்மேனியர்கள் இனப்படுகொலைக்கு ஆளானது இலங்கைத் தமிழர்களை நினைவூட்டுகின்றது.

முள்ளி வாய்க்கால் உலகத் தமிழர்களிடம் ஏற்படுத்திய கொதிப்புணர்வின் குறியீடு என்று முழங்குகின்றது, தென் ஆசிய செய்தி மடல். அவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த 19 தியாக தீபங்களுக்கு தஞ்சைத் தரணியில் வருகின்ற மே மாதம் 17- திகதி நினைவுச் சின்னம் அமைக்கின்றது, பழ.நெடுமாறனைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பு.(17-05-2011).

அர்மேனியர்களைப் பின்பற்றி நெஞ்சங்களை ஆற்றுப்படுத்திட உலகம் எங்கும் எழுப்பப்போகும் நினைவுச் சின்னங்களின் ஆரம்பம்தான் தஞ்சை என்ற எண்ணமே இதயத்தில் தோன்றுகின்றது.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger