Home » » வானவில் குறித்துப் பல்வேறு நாட்டினரின் பல்வேறு நம்பிக்கைகளும் உண்மையும் !

வானவில் குறித்துப் பல்வேறு நாட்டினரின் பல்வேறு நம்பிக்கைகளும் உண்மையும் !


கிரேக்க நாட்டினர், வானத்திற்கும் பூமிக்குமாக ( IRIS )  ஐரிஸ் எங்கின்ற தேவதூதர் அமைத்த பாதைதான் வானவில் என்கிறனர்.

சீனர்களோ இடி, மின்னல், மழைக்குப் பிறகு வானத்தில் பெரிய ஓட்டை விழுந்து விடுகிறது. அதைக் கடவுள் பல அழகிய நிறங்க்களைக் கொண்ட கற்களை வைத்து அடைத்து விடுகிறார். அதுதான் வானவில் என்கிறார்கள்.

இந்திரன்தான் வானவில்லை வில்லாக வளைத்து மின்னல்களை அம்புகளாக எய்கின்றான் என்பது  இந்துக்களின் நம்பிக்கை.

வடக்கு ஐரோப்பிய நாடுகளிலோ, கடவுளின் இருப்பிடத்துக்கும் மனிதர்களுடைய வீடுகளுக்குமிடையே கட்டப்பட்ட பாலம் எங்கின்றனர்.

ஜப்பான் நாட்டிலோ இறந்துபோன முன்னோர்கள் வானவில்லின் வழியாகப் பூமிக்கு வருகின்றர் என்கிறார்கள்.

பைபிளில், நோவாவுக்கு இறைவன் இந்த வானவில்லைக்காட்டி அதன் மூலம் இனி பூமியில் பெரும் வெள்ளத்தை உண்டாக்கமாட்டேன் என்று சொன்னதாக உள்ளது.

ஐரிஷ் ( irish )  புராணங்கள் வானவில்லின் ஒரு முனையில் ஒரு பெரிய பானை நிறைய தங்க்கம் இருக்கிரது. அதை லெப்ரி சான் ( LEPRE CHAUN ) என்கிற மந்திரவாதி பாதுகாத்து வருகின்றான் என்கிறது.

அரேபியர்களோ, வானவில் என்பது ஒரு அழகிய வேலைப்பாடுடைய வானத்து விரிப்பு. இதைத் தெர்குக் காற்று உருவாக்குகின்றது என்று சொல்கின்றனர்.

பெரு நாட்டைச் சேர்ந்த இங்கா ( INCA ) பழங்குடியினர் சூரியக் கடவுளின் பரிசு இந்த வானவில் என்று கூறிவருகின்றனர்.

ஆனால், சூரியக் கதிர்கள் மழை மேகத்தின் மீது மோதி, பிரதிபலிப்பதனால்தான் வானவில் உண்டாகின்றது என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளதாக வரலாறு வரையறுக்கின்றது.

வானவில்லின் அழகே அதனுடைய வண்ணங்களில்தானே இருக்கிரது ? 1666-ஆம் ஆண்டு நியூட்டன் ஒரு வெள்ளையான ஒளிக்கதிரானது பிரிசம் ( PRISM )  வழியாக உள்ளே நுழைந்து வெளியே வரும்போது பல வண்ணங்களாக மாறுகிறது என்பதை நிரூபித்து வானவில்லின் தோற்றம்பற்றி நிலவி வந்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நியூட்டனின் இந்தக் கண்டுபிடிப்பு ஆங்கிலக் கவிஞர் கீட்ஸுக்கு ( KEATS ) எரிச்சலைத் தந்திருக்கிறது. பல பேருடைய கற்பனை சக்தியை நியூட்டன் கெடுத்துவிட்டாரே - வானவில் ஒரு வெள்ளை ஒளிக்கதிர் என்று சொல்லிவிட்டாரே என்று அங்கலாய்க்கின்றார்.

எது எப்படியோ வானவில்லைக் காணும் பொழுதெல்லாம் மழையைக் கண்ட மயிலின் தோகையாய் நம் மனங்கள் ஆனந்தத்தில் விரிகின்றன என்பதுதானே உண்மை.


ஸ்டாபேஷ் நீர் வீழ்ச்சி
(  STAUBHACH FALLS )
சாந்தகுமாரி சிவகடாட்சம் தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற அனுபவங்களை பயணக் கட்டுரையாக,
மாதம் இருமுறை வெளிவரும் குமுதம் சிநேகிதியில் எழுதி வருகின்றார். அக்டோபர் 16-31-2013  தீபாவளி மலரில், ஸ்டாபேஷ் நீர் வீழ்ச்சி குறித்து எழுதிய கட்டுரையில் மேற்படி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்டாபேஷ் நீர்வீழ்ச்சி 300 மீட்டர் உயரத்தில் இருந்து விழும்பொழுது காற்றின் வேகத்தில் தூறல்களாக எல்லாத் திசைகளிலும் சிதறி விழுகின்றது. அந்தத் தருணத்தில் சூரியனின் கதிர்கள் அவற்றில் படுவதால் அங்கே அழகிய வானவில் தோன்றிவிடுகின்றது. இதனைக் கண்ட மகிழ்ச்சியின் தேடலில் கட்டுரையாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் திரட்டிய தகவல்களின் தொகுப்பே இந்த வலைப்பதிவு.

நன்றி :- குமுதம் சிநேகிதி , மாதம் இரு முறை - அக்டோபர் 16 - 31 -2013 தீபாவளி மலர்  - ( இரு மலர்கள் )                             

1 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_7.html?showComment=1394170736456&m=1#c2285551787432289175
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger