Home » » கோத்தபாய ராஜபக்ச புதுடெல்லி விஜயம்! இலங்கை அரசாங்கம் அதிருப்தி தெரிவிப்பு!

கோத்தபாய ராஜபக்ச புதுடெல்லி விஜயம்! இலங்கை அரசாங்கம் அதிருப்தி தெரிவிப்பு!

கோத்தபாய ராஜபக்ச புதுடெல்லி விஜயம்! இந்திய தூதுவரிடம் இலங்கை அரசாங்கம் அதிருப்தி தெரிவிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஒக்ரோபர் 2013, 04:04.56 PM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புது டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த வாரத்தில் கோத்தபாய இந்தியாவிற்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 30ம் திகதி முதல் காரைக்காலைச் சேர்ந்த 32 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக இந்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரிடம் இலங்கை அரசாங்கம் அதிருப்தியை வெளியிட்டது

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கை அரசாங்கம் அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த அதிருப்தி வெளியிடப்பட்டதாக பிரதி கடற்றொழில் அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/show-RUmrzARbMYfr1.html

இலங்கையின் கடற்பகுதிக்குள் நாள்தோறும் 2500 முதல் 3000 இந்திய

மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

பெரும்பாலும் இந்திய மீனவர்கள் இரவு வேளைகளிலேயே இலங்கை

கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாகவும் பிரதி அமைச்சர்

சுட்டிக்காட்டியுள்ளார். -27 -10 -2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger