முள்ளிவாய்க்காலில்(2009)
 – ம் ஆண்டு  2 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட நமது தொப்புள்கொடி உறவான 
ஈழத்தமிழர்களை இழந்தோம்.. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை(2013) மூட 
முனையும் …இன்றைய அனைத்து கூட்டுச்சதியை முறியடித்து துரோகிகளையும் ,துணை 
நிற்பவர்களையும் மக்கள் மன்றத்தில் தண்டிப்போம்!
 நடப்பவை அனைத்தையும் ‘அறிந்து’கொண்டு 
அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். பின்னிரவு நேரத்திற்குள்ளாகத் தகவலை 
ரகசியமாககொண்டுசென்று, அருகில் இருந்த முக்கிய நபர்களையும், அனைத்துக்கட்சி
 நிர்வாகிகளையும் ‘முக்கியக் கூட்டம்’ என்ற பெயரில் வரவழைத்துவிட்டார்கள். 
நேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற விஷயமாக இருக்கும் என்று அங்கே 
சுற்றியிருந்த மத்திய உளவு நிறுவன ஆட்கள் கேட்புகளும் சாதாரணமாக 
இருந்துள்ளனர். இப்படியாக….அவசரக்கூட்டம் என்றுகூடி, அங்கேயே விஷயத்தைப் 
போட்டுடைத்து பட்டென்று திறப்பு விழா  என அறிவித்து நடத்தி 
முடித்துவிட்டார்கள். எல்லாமும் சரி. மத்திய அரசுக்கு ஏன் இவ்வளவு வேகம். 
ஒன்றுமில்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்குமுன்பாக
 இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பது சரியில்லை. சர்ச்சையை 
உருவாக்கும். அதுவரை தடுக்க வேண்டும். அல்லது தாமதப்படுத்த வேண்டும் என 
சிங்கள அரசு வேண்டிக்கொண்டது. வேண்டுதல் என்ன? மிரட்டியது. அதை இந்தியா 
நிறைவேற்றப் பார்த்தது. இதுதான் ரகசிய விளையாட்டு. இப்போதைக்கு இது போதும்.
 மற்றபடி 8,9,10.தேதிகளில்  வழக்கமான நிகழ்ச்சி நடக்கும்…
நன்றி : காந்தன் மலை சாமி.




 
0 comments:
Post a Comment