Home » » அகம், புறம்

அகம், புறம்

சங்ககாலப் பாடல்கள் அகம், புறம் என இரண்டு பொருள்-கூறுகளாகப் பாகுபடுத்தப்பட்டிருந்தன.
வெளிப்படையாகப் பேசமுடியாமல் மனம் என்னும் அகத்துக்குள் அடங்கிக் கிடக்கும் ஆண் பெண் உறவு தொடர்பான செய்திகளைக் கூறுவது அகப்பொருள்.
அகப்பொருள் அல்லாதவை புறப்பொருள்.

படத்தில் இடப்புறம் காணும் அங்கை போன்றது அகப்பொருள். வலப்புறம் காணும் புறங்கை போன்றது புறப்பொருள்.

தொல்காப்பியம் அகப்பொருளில் உள்ள திணைகள் 7, புறப்பொருளில் உள்ள திணைகள் 7 எனப் பகுத்துக் காட்டுகிறது.

அகப்பொருளிலில் அன்பால் உறவு கொள்ளும்  5 திணைகள் உள்ளன. இவற்றைத் தொல்காப்பியம் அன்பின் ஐந்திணை என்று குறிப்பிடுகிறது.

இவற்றில் பாலைத்திணை படத்தில் காட்டப்பட்டுள்ள பெருவிரலின் இயக்கம் போலச் செயல்படுவது. ஏனைய 4 விரல்கள் போல் நானில ஒழுக்கங்கள் அமையும்.

அங்கையை மூடிப் பொருளை மறைக்க முடியும். புறங்கையை மூடமுடியாது.

கைக்கிளை என்னும் ஒருதலைக் காமமும், பெருந்திணை என்னும் பொருந்தாக் காமமும் கை என்னும் ஒழுக்க நெறியில் அடங்குவன அல்ல.

அகம் 7 என்றால் புறமும் 7 தானே.

புறப்பொருள் வெண்பாமாலை தன்னிச்சையாக அகப்பொருளைப் பற்றிக் கருதிப்பார்க்காமல் புறத்திணையை 12 எனப் பாகுபாடு செய்து இலக்கணம் செய்து அந்த இலக்கணத்துக்குப் பண்டைய இலக்கியங்களில் மேற்கோள்கள் முழுமையாகக் கிடைக்காமையால் மேற்கோள் பாடல்களை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ளது. 


1 comments:

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger