Home » » வெளிநாட்டு நன்கொடை ஏன்?

வெளிநாட்டு நன்கொடை ஏன்?

மத்திய புலனாய்வு துறை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெற்று, அவற்றை தவறான முறையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும் முறையிலும் பயன்படுத்தி வருகின்றன என்று குற்றம் சொல்லியிருக்கிறது. இதைப்பற்றி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது எதிர்பார்ப்பையும் கவலையையும் தெரிவித்துள்ளன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை தடுக்கவும், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும், அரசின் சில தவறான செயற்பாடுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர்க்கும் நோக்கத்துடன், மத்திய புலனாய்வு துறையின் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு துறையின் மீது சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்திய அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 950 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்து வருகிறது. மேலும், பல தனியார் நிறுவனங்களும். பொது மக்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகின்றன. தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் செய்கையை ஊக்குவிப்பதற்காக வருமான வரிச் சலுகையும் மத்திய அரசு அளித்துவருகிறது, 

இத்தகைய நன்கொடைகள் பெறுவது போதாதா? மேலும் வெளி நாட்டிலிருந்து பணம் பெறுவது அவசியமா என்று எழும் மக்களின் சந்தேகத்தை தவிர்க்க இயலாது. இத்தகைய நிலையில், வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசின் புலனாய்வு துறை தொடர்ந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை இருக்கலாம் என்று பலரும் எண்ணத்தான் செய்கின்றனர். மகாத்மா காந்தி, நேர்மையானவர்கள் கவனமாகவும் செயற்படவேண்டும் என்று கூறினார். இது இன்றைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிகவும் பொருந்தும்.

இந்தியாவில் தற்போது சுமார் 20 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக மத்திய புலனாய்வு துறை கூறியுள்ளது. அதாவது, 600 நபர்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற கணக்கில் நாடெங்கும் பரந்து, விரிந்து மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்துள்ளன, அவற்றில், சுமார் 44.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற, மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளன. சுமார் 22.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் வெளி நாட்டுலிருந்து பெற்று வருகின்றன, 

கடந்த 2011 - 12ஆம் ஆண்டில் மாத்திரம். வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் ரு 11,250 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவிலிருந்து மாத்திரம் சுமார் 3,500 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது, நாடெங்கிலும் பரவலாக பணிசெய்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை, மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ தகுந்த முறையில் கண்காணிக்கவில்லை என்பதே உண்மை. 

உதாரணமாக, மாநில அரசின் அனுமதி பெறாமலே பல சிறார் பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன என்ற நிலை, விபத்துகள் நடக்கும் போதுதான் தெரிய வருகின்றன. சமீபத்தில் பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட துர்பாக்கிய சம்பவம், அரசு அங்கிகாரம் பெறாமல் நடந்து வந்த சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டதே என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றன என்ற போதிலும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் சந்தேகம் எழுப்பும் நிலையிலேயே உள்ளன. அவை தங்களது வரவு, செலவு விவரங்களை சரிவர வெளிப்படுத்துவதில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் பலர் தங்களுக்கு வேறு எந்த விதமான வருமானம் பெற்றுத்தரும் வேலையோ அல்லது தொழிலோ இல்லாத நிலையிலும் செல்வச் செழிப்புடனும் வசதியுள்ள அலுவலகங்களையும் கொண்டு செயற்படுவது, அடிக்கடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்வது, அவர்களது செய்றபாடுகளை பற்றி சந்தேகம் எழ வழி வகுக்கின்றன. இவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் நன்கொடை தொகையை தவறாக சொந்த நலனுக்கே ஒரளவு செலவு செய்கிறார்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
 
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆடம்பரமாக கூட்டங்களையும் விழாக்களையும் நடத்தும்போது இத்தகைய ஐயப்பாடு மேலும் வலுவடைகிறது. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நன்கொடை பெறுவதற்காகவே ஆலோசகர்களையும் தரகர்களையும் நாடுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல ஏற்றத்தாழ்வுகளும் லஞ்ச ஊழல்களும் மலிந்து காணப்படும் இன்றைய சூழ்நிலையில். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பாடுபட பல வாய்ப்புகளும் தேவைகளும் கூடிக்கொண்டு வருகின்றன. நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணிகள் மிகவும் தேவை.

அதே சமயத்தில். தன்னலமாக செயற்படுவோரையும் அரசியல், மதம், ஜாதி போன்ற அமைப்புகளின் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் செயற்படுவோரையும், வெளிநாட்டு நிறுவனங்களின் கை கூலியாக செயல்படுவோரையும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம். இந்த நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வரவு செலவுகளும், செயற்பாடுகளும் மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு வருவதும் மிகவும் அவசியம். மேலும், வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றினால், அது வரவேற்கத் தக்கதே.

மத்திய புலனாய்வு துறை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெற்று, அவற்றை தவறான முறையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும் முறையிலும் பயன்படுத்தி வருகின்றன என்று குற்றம் சொல்லியிருக்கிறது. இதைப்பற்றி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது எதிர்பார்ப்பையும் கவலையையும் தெரிவித்துள்ளன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை தடுக்கவும், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும், அரசின் சில தவறான செயற்பாடுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர்க்கும் நோக்கத்துடன், மத்திய புலனாய்வு துறையின் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு துறையின் மீது சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்திய அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 950 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்து வருகிறது. மேலும், பல தனியார் நிறுவனங்களும். பொது மக்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகின்றன. தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் செய்கையை ஊக்குவிப்பதற்காக வருமான வரிச் சலுகையும் மத்திய அரசு அளித்துவருகிறது, இத்தகைய நன்கொடைகள் பெறுவது போதாதா? மேலும் வெளி நாட்டிலிருந்து பணம் பெறுவது அவசியமா என்று எழும் மக்களின் சந்தேகத்தை தவிர்க்க இயலாது. 

இத்தகைய நிலையில், வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசின் புலனாய்வு துறை தொடர்ந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை இருக்கலாம் என்று பலரும் எண்ணத்தான் செய்கின்றனர். மகாத்மா காந்தி, நேர்மையானவர்கள் கவனமாகவும் செயற்படவேண்டும் என்று கூறினார். இது இன்றைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிகவும் பொருந்தும்.

இந்தியாவில் தற்போது சுமார் 20 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக மத்திய புலனாய்வு துறை கூறியுள்ளது. அதாவது, 600 நபர்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற கணக்கில் நாடெங்கும் பரந்து, விரிந்து மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்துள்ளன, அவற்றில், சுமார் 44.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற, மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளன.

 சுமார் 22.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் வெளி நாட்டுலிருந்து பெற்று வருகின்றன, கடந்த 2011 - 12ஆம் ஆண்டில் மாத்திரம். வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் ரு 11,250 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவிலிருந்து மாத்திரம் சுமார் 3,500 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது, 

நாடெங்கிலும் பரவலாக பணிசெய்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை, மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ தகுந்த முறையில் கண்காணிக்கவில்லை என்பதே உண்மை. உதாரணமாக, மாநில அரசின் அனுமதி பெறாமலே பல சிறார் பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன என்ற நிலை, விபத்துகள் நடக்கும் போதுதான் தெரிய வருகின்றன. 

சமீபத்தில் பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட துர்பாக்கிய சம்பவம், அரசு அங்கிகாரம் பெறாமல் நடந்து வந்த சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டதே என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றன என்ற போதிலும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் சந்தேகம் எழுப்பும் நிலையிலேயே உள்ளன. அவை தங்களது வரவு, செலவு விவரங்களை சரிவர வெளிப்படுத்துவதில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் பலர் தங்களுக்கு வேறு எந்த விதமான வருமானம் பெற்றுத்தரும் வேலையோ அல்லது தொழிலோ இல்லாத நிலையிலும் செல்வச் செழிப்புடனும் வசதியுள்ள அலுவலகங்களையும் கொண்டு செயற்படுவது, அடிக்கடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்வது, அவர்களது செய்றபாடுகளை பற்றி சந்தேகம் எழ வழி வகுக்கின்றன. இவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் நன்கொடை தொகையை தவறாக சொந்த நலனுக்கே ஒரளவு செலவு செய்கிறார்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
 
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆடம்பரமாக கூட்டங்களையும் விழாக்களையும் நடத்தும்போது இத்தகைய ஐயப்பாடு மேலும் வலுவடைகிறது. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நன்கொடை பெறுவதற்காகவே ஆலோசகர்களையும் தரகர்களையும் நாடுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல ஏற்றத்தாழ்வுகளும் லஞ்ச ஊழல்களும் மலிந்து காணப்படும் இன்றைய சூழ்நிலையில். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பாடுபட பல வாய்ப்புகளும் தேவைகளும் கூடிக்கொண்டு வருகின்றன. நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணிகள் மிகவும் தேவை.

அதே சமயத்தில். தன்னலமாக செயற்படுவோரையும் அரசியல், மதம், ஜாதி போன்ற அமைப்புகளின் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் செயற்படுவோரையும், வெளிநாட்டு நிறுவனங்களின் கை கூலியாக செயல்படுவோரையும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம். இந்த நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வரவு செலவுகளும், செயற்பாடுகளும் மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு வருவதும் மிகவும் அவசியம். மேலும், வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றினால், அது வரவேற்கத் தக்கதே. 

எஸ்.எஸ். வெங்கட்ராமன், கருத்துக்களம், தினமணி

0 comments:

Post a Comment

Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger