Home » » 1,00,000 - க்கும் மேற்பட்டோர் YOUTUBE-இல் பார்த்தது : "மறைபொருள்" குறும்படம் !

1,00,000 - க்கும் மேற்பட்டோர் YOUTUBE-இல் பார்த்தது : "மறைபொருள்" குறும்படம் !


மறைபொருள் - பொன்.சுதா

http://youtu.be/O9Ukt5-rXls

100000 பார்வைகளைத் தாண்டிய மறைபொருள் குறும்படம்

இவரது  மறைபொருள் குறும்படம் வெளியாகி மக்கள் கவனத்தைப் பெற்றது.

பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.

மக்கள் பார்வைக்காக யூ டியூப்பில் 8 மாதத்திற்கு முன் படம் பதிவிடப் பட்டது.

8 மாத முடிவிற்குள் 1,19,027 பார்வைகளைப் பெற்றுள்ளது.                                    


பொன்சுதா ஓர் அறிமுகம்
       
இவரது தந்தையின் பெயர் பொன்னாங்கண்  இவரது

பெயர் சுதாகர்   இதுவே பொன்.சுதா -வின் பெயர்க் காரணம்.
.
’நடந்தகதை’ குறும்படத்தின் இயக்குநர்.

திரைத்துறை அனுபங்கள்

திரைத்துறையில் 15 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார்..

ரகசிய போலீஸ் - 1995 - இயக்கம்: இளவரசன் - நடிப்பு: சரத்குமார், நக்மா

அரவிந்தன்  இயக்கம்: நாகராஜ் - நடிப்பு: சரத்குமார், நக்மா, பார்த்திபன்

தை பொறந்தாச்சு - இயக்கம்: கலைமணி- நடிப்பு: பிரபு, கார்த்திக், கெளசல்யா, விவேக்

மற்றும் கீரிடம், பள்ளிக்கூடம், களவாணி, வாகை சூடவா போன்ற படங்களில் கதைவிவாதத்தில் பங்குபெற்றிருக்கின்றார் 

படைப்புகள்

மூன்று கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்..

கவிதை அல்ல காதல் - 1998

நானும் நீயும் நாமான போது - 2008

மழையின் சுவடுகள் - 2009

மூன்றும் கோவை விஜயா பதிப்பகத்தின் வெளியீடுகள்.

இவரது முதல் குறும்படம் ‘ மறைபொருள்’ 2007 ல் வெளிவந்தது. அதனை

இவ்வலைப்பூவின் துவக்கத்தில் கண்டு ரசிக்கலாம். பாராட்டலாம்.

பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசு வென்றது - 2008

இலண்டனில் விம்பங்கள் குறும்படப் போட்டியில் சிறந்த குறும்படமாகத்
தேர்வு பெற்றது. - 2007

சென்னை மேட் குறும்படப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

கனடா, ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்டது.

கலை வழி மாற்று நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றது.

மக்கள் திரையிடலாக பலமுறை இன்றும் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இணையத்தில் யூடூப்பில் 10 மாதத்தில் 2,00,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

http://ponsudhaa.wordpress.com  - என்பது இவரது வலைப்பூ

அனைவரையும் ஐக்கியப்படுத்தி

இயக்கிய இரண்டு குறும்படங்க்களிலும்

ஈடிணையிலா சாதனை படைத்துள்ள

பெரியார் வழி நடக்கும்

பொன்.சுதா

என அழைக்கப்பெறும்

பொன்னாங்கண்.சுதாகர்








0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger