Home » » குறடு சிறுகதை நடந்த கதை குறும்படமானது :16-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளது !

குறடு சிறுகதை நடந்த கதை குறும்படமானது :16-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளது !


 நடந்த கதை - கதை-வசனம்-இயக்கம்-பொன் சுதா

http://youtu.be/H7Pja1ujH9Y

பொன்சுதா ஓர் அறிமுகம்
       
இவரது தந்தையின் பெயர் பொன்னாங்கண் அதுவே  இவரது

பெயர் சுதாகர்   இதுவே பொன்.சுதா -வின் பெயர்க் காரணம்.
.
’நடந்தகதை’ குறும்படத்தின் இயக்குநர்.

திரைத்துறை அனுபங்கள்

திரைத்துறையில் 15 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார்..

ரகசிய போலீஸ் - 1995 - இயக்கம்: இளவரசன் - நடிப்பு: சரத்குமார், நக்மா

அரவிந்தன்  இயக்கம்: நாகராஜ் - நடிப்பு: சரத்குமார், நக்மா, பார்த்திபன்

தை பொறந்தாச்சு - இயக்கம்: கலைமணி- நடிப்பு: பிரபு, கார்த்திக், கெளசல்யா, விவேக்

மற்றும் கீரிடம், பள்ளிக்கூடம், களவாணி, வாகை சூடவா போன்ற படங்களில் கதைவிவாதத்தில் பங்குபெற்றிருக்கின்றார் 

படைப்புகள்

மூன்று கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்..

கவிதை அல்ல காதல் - 1998

நானும் நீயும் நாமான போது - 2008

மழையின் சுவடுகள் - 2009

மூன்றும் கோவை விஜயா பதிப்பகத்தின் வெளியீடுகள்.


நடந்த கதை 

இது அழகிய பெரியவனின் ‘குறடு’ என்ற சிறுகதையின் திரைவடிவம்.

’மறைபொருள்’ குறும்படம் பார்த்து இணையத்தில் அறிமுகமான அருள் சங்கர் இக் குறும்படத்தை தாயாரித்தார்.

சக்கரைகட்டி, சித்து+12, பேசு போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான இராசாமதி இப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

நாடோடிகள் படத்தின் படத்தொகுப்பாளரான ஏ.எல். ரமேஷ் இப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

மக்கள் தொலைக்காட்சியின்  ஈழம், நேதாஜி தொடர்கள் மற்றும் நாயகன் படத்தின் இசையமைப்பாளரான மரியா மனோகர் குறும்படத்தின் இசையமைப்பாளர்.

பேரணாம்பட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது.

கதாநாயகன் கருணாகரைத் தவிர அனைவரும் முதன்முறையாய் நடிப்பவர்கள். பெரும்பாலும் அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.

16 விருதுகளைப் பெற்று இருக்கிறது நடந்த கதை.

பல்வேறு அமைப்புகளிம் சார்ப்பில் தமிழகம் முழுக்க இன்னும் திரையிடப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

http://ponsudhaa.wordpress.com  - என்பது இவரது வலைப்பூ

  நடந்த கதை  விருது விபரம் பின்வருமாறு :-

அன்னைத் தெரசா விருது – சினிக்ஸ் குறும்படப் போட்டி, சேலம் – ஜனவரி 2011

முதல் பரிசு – அம்பேத்கர் சிந்தனை தூண்டலகம் – சிவகிரி – ஏப்ரல் 2011

வெள்ளி விருது – மும்பை IDPA -  அக்டோபர் 2010

இந்திய அளவில் சிறந்த குறும்படம் – ISFFI – சர்வதேச குறும்படவிழா சென்னை – மார்ச் 2010

முதல் பரிசு – கவிதை உறவு குறும்படப் போட்டி – சென்னை - மே 2010

முதல் பரிசு – திருக்குறள் கலைப்பட்டறை குறும்படப் போட்டி – சென்னை -  ஜனவரி 2010

முதல் பரிசு – கூடல் தென்திசை குறும்படப் போட்டி – மதுரை –               ஜனவரி 2010

முதல் பரிசு – பெரியார் திரை குறும்படப் போட்டி – சென்னை –                   டிசம்பர் 2009

முதல் பரிசு - கிராமிய குறும்படவிழா – போளூர் – டிசம்பர் 2009

தமுஎகச 2009 ன் சிறந்த படம் – அக்டோபர் 2010

தமிழ் ஸ்டுடியோ .காம் 2009 & 2010 ன் சிறந்த குறும்படம் – சென்னை - அக்டோபர் 2010

சிறந்த குறும்படம் – நூலாறு 2010 – வேலூர் – செப்டம்பர்

இரண்டாம் பரிசு – நெய்வேலி புத்தக கண்காட்சி குறும்படப் போட்டி- ஜீன் 2010

இரண்டாம் பரிசு - தென்திசை சர்வதேச குறும்படவிழா – மதுரை

செப்டம்பர் 2010

சிறப்பு விருது – தானம் அறக்கட்டளை – மதுரை – அக்டோபர் 2010

அனைவரையும் ஐக்கியப்படுத்தி

இயக்கிய இரண்டு குறும்படங்களிலும்

ஈடிணையிலா சாதனை படைத்துள்ள

பெரியார் வழி நடக்கும்
 பொன்.சுதா

என அழைக்கப்பெறும்

பொன்னாங்கண்.சுதாகர்
0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger