Home » » பெரொஸ் காந்தி.- பா.முருகானந்தம்

பெரொஸ் காந்தி.- பா.முருகானந்தம்


ராஜீவ்-ரத்னா-பிர்ஜிஸ் நேரு காந்தி-பெரொஸ் காந்தி.


ஆகஸ்டு 20, 1944. காலை 8.22. 6.5 பவுண்டு எடையுடன் குழந்தை பிறந்தது.

அன்னை கமலாவின் நினைவாக "ராஜீவ் ரத்னா" என்று பெயர் வைப்பதில் உறுதியாக இருந்தார்,இந்திரா.

"நீ விரும்பியதைப்போல் 'ராஜீவ் ரத்னா' என்பது முதல் பெயராக இருக்கட்டும்.
இரண்டாவது பெயராக 'பிர்ஜிஸ்'என்று வைத்துக்கொள்.

இதில் எங்காவது நேரு என்ற பெயரைச் சேர்க்க முடியுமா? எனக்குத் தெரியும் மூன்றாவது பெயராக பெரொஸின் குடும்பப் பெயரான "காந்தி" என்றுதான் வைக்க முடியும்.

காந்தி-நேரு என்று வைத்தால் அபத்தமாக இருக்கும்.என்ன செய்வது, என் ஆசைக்கு அளவேது?"து சிறையிலிருந்து நேரு இந்திராவுக்கு எழுதியது.

தனது கணவர் பெரோஸ் காந்தியின் கருத்து கேட்கப்படாமலேயே, இந்திரா வைத்த பெயர்தான்"ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி"

காந்தி என்பது பெரோஸ் காந்தியின் குடும்பப் பெயர்.
மகாத்மா காந்திக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.பெரோஸ் அப்பாவின் பெயர், ஜெஹாங்கீர் ஃபேர்தூன் காந்தி.
அப்பாவழித் தாத்தாவின் பெயரிலிருந்துதான் ராஜீவுக்கு காந்தி பெயர் கிடைத்தது.

அதுசமயம்அலகாபாத் காங்கிரசிஸ் கட்சிக்கு ஆலோசனை சொல்வதே பெரோஸுவின் வேலை.

நேருவின் கண்க்கில் தரப்பட்ட மாதச் சம்பளம், ரூபாய் 100.

பெரோஸ் பார்ஸி இனத்தவர்.
பார்ஸிகளின் பூர்வீகம் பாரசீகம். இன்றைய ஈரான்.
நேரு காஷ்மீர் இந்துக் குடும்பத்தவர்.பெரோஸ்-இந்திரா காதல்திருமணம்,தனது பிடிவாதத்தாலும், மகாத்மா காந்தியின் ஆதரவாலும்தான் காதலில் இந்திரா வெற்றிபெறமுடிந்தது.

"பெரோஸ் ஒரு மிகச்சிறந்த புரட்சி வீரன். இவனைப்போல் எனக்கு ஏழு பேர் கிடத்தால் போதும்; நான் இந்தியாவிற்கு ஏழே நாட்களில் விடுதலை வாங்கிக் கொடுத்து விடுவேன்" பெரோஸ் அன்னையிடம் மகாத்மாகாந்தி சொன்ன வார்த்தைகள்..

ரேபலி தொகுதியின் உறுப்பினராக 1955-ல், பெரோஸின் பாராளுமன்ற முதல்
முழக்கம்தான், டால்மியா-ஜெயின் கம்பெனியின் தில்லுமுல்லுகளை
அம்பலப்படுத்தியது.பாரத் இன்சூரன்ஸ்கம்பெனியின் பொதுமக்கள்பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.இராமகிருஷ்ண டால்மியா பின்னர் கைது செய்யப்பட காரணமாக அமைந்தது.01-09-1956-ல்,பம்பாயில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) துவங்கிட ஆதாரமானது.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும்,காங்கிரசின் செயல்பாடுகளில் ஏற்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் தயங்கியதே இல்லை,பெரொஸ் காந்தி.
"முந்த்ரா டீல்" ஊழலைப்பற்றிக் காரசாரமாகப் பாராளுமன்றத்தில் விவாதித்தார்.

அப்பழுக்கற்ற நீதிபதி எனப் பெயர்பெற்ற எம்.சி.சக்லா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்திடக் காரணமாயிருந்தார்.
முந்த்ராவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.
நேருவின் ஆணயால் நிதி அமைச்சர் டி.டி.கே. என்ற டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

மத்தாய் நோக்கி,நேருவின் அந்தரங்கச் செயலர்,கேரளத்துக்காரர்.
அதிகார பலத்தால் சொத்துக் குவித்தார். பெரும் பணக்காரர் ஆனார்.
பெரோஸ் தனது பத்திரிக்கையுலக நண்பர் நிகில் சக்கரவர்த்தியுடன் களத்தில்புகுந்தார்.

ஆதாரங்களைத் திரட்டினார். பத்திரிக்கைகளில் வெளிவரச் செய்தார்.
குற்றம் நிரூபணமானது. மத்தாயைப் பதவி நீக்கம் செய்தார்,நேரு.

பெரோஸ் இறந்தபோது கூடிய கூட்டம் நேருவிற்கே பெருவியப்பினைத் தந்தது. 

"அவரின் மறைவுடன் என் வாழ்வின் அத்தனை வண்ணங்களும் போயின" என்று சொன்னார், இந்திரா காந்தி. தன் வாழ்வின் அடுத்த சில ஆண்டுகள் வெள்ளை நிற உடைகள் மட்டுமே அணிந்தார், இந்திரா.

அலகாபாத் ஆனந்த பவனிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது,பெரொஸ் சமாதி.அநாதையாக காலத்தின் மவுன சாட்சியாக இருந்து வருகின்றது.

பெரோஸின் 90-வது ஆண்டு விழாவை இந்திய அரசு,'சுதேசி அபியான் நிவாஸ்' என்றுகொண்டடியது.

பெரோஸ் திறமையான பாராளுமன்றவாதியாக முத்திரை பதித்தவர். ஊழல்வாதிகளின் தகிடுதத்தங்களை அம்பலத்திற்குக் கொண்டு வந்தார். ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வாங்கித்தருவதில் அவர் காட்டிய அசாத்தியத் துணிச்சல் மற்றும் வேகம் மெச்சத்தக்கது.

இலஞ்ச ஒழிப்பு இயக்கத் தலைவர்களுக்கு ஓர் வேண்டுகோள். பெரொஸ் நினைவுநாளை இலஞ்ச ஒழிப்பு தினமாகக் கொண்டாட வேண்டும்.

இக்கட்டுரைக்குக் காரணம் இந்திராவுடன் காந்தி பெயர் சேர்ந்தது எப்படி என்ற சிந்தனை!

தேடியதில் கிடைத்தது, பா.முருகானந்தம் எழுதிய, பெரோஸ் காந்தி என்ற புத்தகம்.

மைலாப்பூர் டி'சில்வா சாலையில் உள்ள அவென்யூ பிரஸ் 2007-ல் வெளியிட்டது.

முருகானந்தம் எழுதிய முதலாவது புத்தகம். தமிழுக்குப் புதுசு.நன்றியும் பாராட்டும். சொல்ல வேண்டியது, தமிழர் கடமை.

----------------------------------------------------------------------------------------------------------------
'ஆர்த்தி'1975-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்ப்படம்.அதில் வந்த பெண் அரசியல்வாதி இந்திரா போன்றே இருந்ததால் தடை செய்யப்பட்டது. ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நாளே இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது..
---------------------------------------------------------------------------------------------------------------
ஃபெரோஸ் காந்தி (பெரோஸ் ஜகாங்கிர் காந்தி)
உறுப்பினர் இந்திய நாடாளுமன்றம்
தொகுதி - {{{constituency_}}}
பதவியில் :- 1952-04-17 – 1957-04-04

இந்தியா நாடாளுமன்றம் உறுப்பினர்
தொகுதி - Rae Bareli[2]
பதவியில் 1957-05-05 – 1960-09-08

பின்வந்தவர்     Baij Nath Kureel

அரசியல் கட்சி     இந்திய தேசிய காங்கிரசு

பிறப்பு     செப்டம்பர் 12, 1912
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு     செப்டம்பர் 8 1960 (அகவை 47)

புது தில்லி, தில்லி, இந்தியா
சமாதி     பார்சி மக்கள் நினைவிடம், அலகாபாத்

தேசியம்     இந்தியர்

வாழ்க்கைத்
துணை     இந்திரா காந்தி

பிள்ளைகள் சஞ்சய் காந்தி,, ராஜீவ் காந்தி சமயம்     சரத்துஸ்திர சமயம்

 http://ta.m.wikipedia.org/

இக்கட்டுரை கூகுள் தமிழாக்கக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரோஸ் காந்தி (ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி) (12 செப்டம்பர் 1912 – 8 செப்டம்பர் 1960) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகை எழுத்தாளராக இருந்தவர் ஆவார், மேலும் த நேசனல் ஹெரால்டு மற்றும் லக்னோவில் இருந்து வெளிவந்த 'த நவ்ஜிவன்' செய்திப் பத்திரிகைகளின் வெளியீட்டாளராகவும் இருந்தார்.[3]

இவர் மாநிலத்துக்குரிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார் (1950—52), மேலும் இந்திய மக்களவையின் உறுப்பினராகவும் பிறகு இருந்தார். 1942 இல், இவர் இந்திரா நேருவைத் (இவர் பின்னர் இந்தியாவின் பிரதமரானார்) திருமணம் முடித்தார், மேலும் இவர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தின் பகுதியாக ராஜிவ் காந்தி (இவரும் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்தார்) மற்றும் சஞ்ஜய் காந்தி என்ற இருமகன்கள் பிறந்தனர்.[4]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் ஊழலை ஒழிக்க விரும்புவர்கள் பெரோஸ் காந்தியிடமிருந்து
இயக்கத்தைத் தொடங்கவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

























0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger