Home » » நிமிர வைக்கும் நெல்லை - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

நிமிர வைக்கும் நெல்லை - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

பொதிகை - பொருநை - கரிசல் கட்டளை 
சென்னை - 600 041
விற்பனை உரிமை, பாரதி புத்தகாலயம்
2 குயவர் வீதி, சென்னை-600 015
                                                            நல்லாசைகள்
‘மகத்தான அறிவு வேண்டும்.
அழியாத நெஞ்சுறுதி வேண்டும்
கல்விகள் வேண்டும்
கீிர்த்திகள் வேண்டும்
சூழ்ந்திருக்குமூரார் தேசத்தார்,
உலகத்தார்
எல்லோரும் இன்பத்துடன்
வாழும்படி
நாம் செய்ய வேண்டும்
இவை நல்லாசைகள்”

                                                         - அமரகவி பாரதியார்

அணிந்துரை

ஆர்.நல்லகண்ணு, கி.ராஜநாராயணன், டாக்டர். இரா.கிருச்ஹ்ண மூர்த்தி, மாலன், வாஸந்தி,”திருநெல்வேலிறை குரு மகா சந்நிதானம் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீ.ஞானசம்பந்த தேசிகர்,  நாங்குநேரி ஸ்ரீ கல்யாண் வானமாமலைராமானுஜ ஜீயர் சுவாமிகள் தினகரன் நிர்வாக ஆசிரியர் குமரன், எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான், ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்

ஆசிரியர் அறிமுகம் 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தை பதித்து வருகிறார். இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச்செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். "உரிமைக்கு குரல் கொடுப்போம்" "மனித உருமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்க கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். 

கரிசல்காட்டின் கவிதைச்சோலை பாரதி (2006 ), தமிழ்நாடு (50) -(2006 ),
மனித உரிமைச் சட்டங்க்களும் சில குறிப்புகளும் (199), உரிமைக்குக் குரல்கொடுப்போம் (1995 ) - மேலும் சில நூல்களை எழுதியுள்ளார்

தெற்குச் சீமை என்ற நெல்லை மாவட்டம் 

அன்றைய நெல்லை மாவட்டம், இன்றுள்ள நெல்லை  தூத்துக்குடி மாவட்டங்களையும், விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர் ஆகிய வட்டங்களையும் உள்ளடக்கியது. நெல்லையில் பாயும் தாமிரவருணி வதியை மெகஸ்தனிஸ் தாப்பிரப்பணே என்று குறிப்பிடுகின்றார்.சைவம், வைணவம், இராமாயணமும் நெல்லையும், கிறிஸ்துவமும் நெல்லையும், இஸ்லாம், பெளத்தம், சமணம், சித்தர்கள் என்னும் தலைப்புக்களில் அரிய செய்திகளைத் தருகின்றார். 

இலக்கியங்க்களில் நெல்லை, பொருநை குறித்த சிறப்புக்கல், பாரதி பொருநை குறித்த வர்ணனைகளும் காணப்படுகின்றன. மாவட்ட வரலாறும் தொல்லியல் தடயங்க்களும்,  அதனைத் தொடர்ந்து நெல்லையில் உல்ள வெவ்வேறு சமூகங்க்களைப்பற்றியும் குறிப்பிடுகின்ரார்.

கான்சாகிப், மாவீரன் பூலித்தேவனார், அஞ்சா சிங்கம் கட்டபொம்மன், தியாக தீபமான சுவ்தரலிங்கம், இளசநாடு எனும் எட்டயபுரம், முண்டாசுக்கவி பாரதி, ஹெப்ரான்  கலெக்டராக வந்தபோது ஏற்பட்ட பெருவெள்ளம், கொள்ளைநோய் முதலியவற்றையும் விட்டுவைக்கவில்லை.

வ.உ.சிதம்பரனார், நெல்லைச் சதிவழக்கு,  நீதிமன்ற நடவடிக்கைகள்,  லோன் கொலை வழக்கு, பூச்சிக்காடு கள்ளுக்கடை தீயிட்ட வழக்கு,  மாவடிப் பண்ணை மரம் வெட்டும் போர், என்று இன்றைய தலைமுறை அறிந்திராத பல தகவல்களைத் திரட்டித் தருகின்றார். நெல்லையில் காந்தியத்தின் தாக்கம் எவ்வாறிருந்தது என்பதையும் குறிப்பிடுகின்றார்.

இலக்கிய கர்த்தாக்கள், வாட்டுப்புறப் பாடல்கள், இசைகலஞர்கள், நுண்கலைகள், சுற்றுச் சூழல், கிருஷ்ணாபுரம் கலைச் சிற்பங்க்கல், சில முக்கியப் புள்ளிகள் பகுதியில்  மீண்டும் தமிழறிஞ்சர்கல், ஜமீன்தார்கள் என எல்லோரையும் பட்டியலிடுகின்றார்.

அரசியலும் , தொழிற்சங்கமும், நேதாஜின் ஐ.என்.ஏ, சர்வோதயா , பூதான இயக்கங்க்கள், விடுதலைக்கு முன்னும்,பின்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுவுடைமை இயக்கங்க்கல், திராவிட இயக்கங்கள். காயிதே மில்லத் பற்றிய குறிப்பு, சுதந்திரா கட்சி, கல்கியின் முயற்சியால் பாரதி மண்டபம் உருவான விபரம் எல்லாம் காணப்படுகின்றது.

கரிசல் பூமி குறித்து கி.ராஜநாராயணன், வாஸவ்தி, கோ.கேசவன், வண்ண நிலவன், அ.மார்க்ஸ் ஆகியோரது கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

அக்காலத்தில் நடைமுறையிலிருந்த வில்வண்டி, கிராமப்புறத் தெய்வங்க்களின் திருவிழா, ஊர்க் கூட்டம், தைப் பொங்க்கல் சந்திப்பு, இளவட்டக்கல், நள்ளிரவு துணி ஏலங்க்கள், விளக்குத் தூண்கள், மாட்டுத் தாவணிகளும், சந்தைகளும்  குறித்தெல்லாம் குறிப்பிடுகின்றார்.

நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தைப்பற்றியும், அதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் சொல்லி நூலை முடிக்கின்றார்.

தென்காசி   காசி விஸ்வநாதர்கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்து நீண்ட நாட்களாக மொட்டைக்கோபுரமாகவே இரு்ந்து வந்தது/ 

எம்ஜிஆர் காலத்தில், அண்மையில் மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் தலைமையில் அமைக்கப்பட்ட திருப்பணிக்குழு கோபுரத்தைக் கட்டி முடித்தது. சிவந்தி ஆதித்தனார் இப்பணியில் ஈடுபடக் காரணமாயிருந்த
பின்வருமாறு.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் பற்றிய பாடல் :-

ஆராயினும் இந்தத் தெங்காசி
மேஷம்பொன் ஆலயத்து
வாராத தோர்குற்றம் வந்தால், அப்
போதங்கு வந்து அதனை
நேராக வியோழித்துப்புரப்
பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே.  

நிமிர வைக்கும் நெல்லை- எனும் இப்புத்தகம் நெல்லை மாவட்டத்தைப்பற்றிய பல உண்மைகளையும், சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றது.

நெல்லையையும், பாளையங்க்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சனார் பாலம் கட்டப்பட்ட சுவையான பகுதி  கி.ரா. முன்னுரையில் கொஞ்சம் குறிப்பிடுகின்றார்.  குகன் ஓர் புத்தகத்தில் முழுமையாக எழுதியுள்ளார். எமது வலைப்பதிவிலும் முன்னர் பதிவாகியுள்ளது. அது முழுமையாக இடம்பெற்றிருந்தால். இன்னும்  நன்றாக அமைந்திருக்கும்.

மேலும் வெள்ளையர் காலத்தில் போடப்பட்ட கீரியாறுத்திட்டம், இன்றளவும் யாராலும் அணுகப்படாமல் சுமார் 400 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சங்கரன் கோவில், சாத்தூர், விருதுநகர் வட்டங்கள் முப்போகும் பொன்விளையும் பூமியாக மாறும். 

யாருக்கும் பயன்படாமல் கேரளாவில் கடலில் கலக்கும் ஆற்று நீரைத் திசை திருப்பிவிடவேண்டும். நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பும் உண்டு. செலவு அதிகம் ஆகும் என்று அரசியல்வாதிகள் பதிலளித்துக் கைகழுவிவிட்ட திட்டம் இது. எமது இளமைக்காலத்தில் கீரியாறு திட்டத்தைக் கொண்டு வந்தே தீருவோம் என்றே எல்லோரும் வோட்டுக் கேட்பார்கள். கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது எல்லோருமே மறந்து விட்டனர்.

சேதுசமுத்திரத் திட்டம் கூட பலனளிக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. கீரியாற்றுத் திட்டம் பலந்தராமல் போகாது. இவை போன்றவற்றை எல்லாம்
சேர்த்து மறுபதிப்பாக ஆசிரியர் வெளியிடல் வேண்டும்.

இப்புத்கத்தில் உள்ள சுவையான பகுதிகளில் சில தனித்தனி கட்டுரைகளாகப் பதிவிடப்படும். 

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் தலைமையில்
புனரமைக்கப்பட்ட தென்காசி நெல்லையப்பர் கோபுரம்
 
  0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger