Home » » நரோராவில் ஏற்பட்ட தீ விபத்து போல், பாரதத்தின் புதிய அணு உலைகளில் ......?

நரோராவில் ஏற்பட்ட தீ விபத்து போல், பாரதத்தின் புதிய அணு உலைகளில் ......?

சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>
17:00 (1 hour ago)

to tamilmantram, vallamai, mintamil, vannan, Iyamperumal, KANDASAMY, Govindasamy
Boxbe This message is eligible for Automatic Cleanup! (jayabarathans@gmail.com) Add cleanup rule | More info




 
டர்பைன் ஜனனி வெடி விபத்தின் காரணங்கள்! கற்ற பாடங்கள்! 

யந்திர சாதனங்கள் யாவும் முறிவதற்கு முன்பு, தமது தனி ஊமை மொழியில் குறி சொல்லும்! பழுதான டர்பைன் சுழற் தட்டுகளின் அதிர்வுகளைக் கண்காணிக்கப் பல உளவிகள் [Vibration Probes] உள்ளன! சுழற் தட்டுகள் முறிந்த நரோரா டர்பைன் மாடல், முந்தைய கல்பாக்க அணுமின் நிலையங்களிலும் நிறுவன மானது! ஏற்கனவே கல்பாக்கத்தில் அந்த மாடல் டர்பைன் இயங்கும் போது, அதிர்வுப் பிரச்சனைகள் [Vibration Problems] இருந்ததாக அறியப் படுகிறது! நரோரா கீழ் அழுத்த டர்பைனில் எதிர்பார்க்கப் பட்ட, அதே பிரச்சனைகள் சரிவரக் கண்கணிக்கப் படாது போனால், அநேக சுழற் தட்டுகள் ஒரே சமயத்தில் முறிந்து போகும் வரை முற்ற விட்டதாக அறியப் படுகிறது! 

விபத்துக்கு முன்பு நரோரா ஆட்சி அறையில் எச்சரிக்கை செய்த டர்பைன் அதிர்வு மானிகளை [Vibration Monitors], இயக்குநர் புறக்கணித்ததாக அறியப் படுகிறது! ஜனனியில் வெப்பம் தணிக்கும் ஹைடிரஜன் வாயு கசிவதைக் கண்காணிக்கும் உளவிகளும், எச்சரிக்கை ஏற்பாடுகளும் அமைக்கப் பட்டுள்ளன! ஆகவே மின்சார ஜனனியில் ஹைடிரஜன் வாயுக் கசிவின் [Hydrogen Gas Leakage] எச்சரிக்கைகள், டர்பைன் இயக்குநர் கவனத்தைக் கவராதது ஆச்சரியமாக உள்ளது! இவ்விரண்டு எச்சரிக்கைகளை இயக்குநர் கவனமாகக் கையாண்டிருந்தால், டர்பைன் வெடி விபத்து நேர்ந்திருக்காது! நிலையம் முடமாகி மின்சக்திப் பரிமாறாமல், செப்பணிடுவதில் இரண்டாண்டு காலம் வீணாகிப் போயிருக்காது! பல கோடி ரூபாய்ச் செலவை இழுத்து விட்ட நரோராவின் கோர விபத்துக்கு மனிதத் தவறுகளும் யந்திரப் பழுதுகளுமே காரணம்!

1. 'சாதனத் தரக் கட்டுப்பாடுத் திட்டம் ' [Equipment Quality Assurance Program] அணுமின் நிலைய அமைப்புக் கலாச்சாரமாக [Quality Culture] டிசைன், உற்பத்தி, நிறுவகம், சோதிப்பு, இயக்கம், பராமரிப்பு [Design, Manufacturing, Construction, Commissioning, Operation & Maintenance] ஆகிய அனைத்து நிலைகளிலும் புகுத்தப் பட்டது! 

2. இரட்டை அணுமின் நிலைய அமைப்புகளில் தீப்பற்றி அழிக்காதவாறு, மின்சாரம் பரிமாறும் வயர்களும், கேபிள்களும் பிரிக்கப் பட்டுத் தீக் கவசக் குகைகளில் அமைக்கப் பட்டன! அணுமின் சாதனங்களுக்குத் தனித் தனியாக இரட்டை மின்சார வினியோகக் கேபிள்களைப் பதித்து, ஒன்றில் பழுது ஏற்பட்டால், அடுத்த வழியில் மின்சக்தி கிடைக்குமாறு பிரிக்கப் பட்டது.

3. அபாய காலத்தில் ஆட்சி அறையில் இயக்குநர் பணி புரியமாறு மாற்றங்கள் செய்யப் பட்டன.

4. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சாரப் பரிமாறலும் துண்டிக்கப் பட்டு, நீடித்த நிலைய இருட்டடிப்பு [Extended Station Blackout] சமயத்தில், அணு உலைப் பாதுகாப்பு, கொதி உலைக்கு நீரனுப்பல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஆய்வு முறை வழிகள் தயாரிக்கப் பட்டன.

5. இயக்கத்திற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய டர்பைன், ஜனனிகளின் கண்காணிப்பு, செப்பணிடும் சோதனைகள் [Pre-Service, In-Service Inspections] எதுவும் புறக்கணிக்கப் படாமல் சரியான சமயத்தில் முடிப்பதற்குக் கட்டாய விதிகள் நிலைநாட்டப் பட்டன.

6. அணு உலை நீராவி ஆக்கும் ஏற்பாடுகளைத் தவிர்த்து [Outside the Nuclear Steam Supply Systems] பொதுத்துறைச் சாதன ஏற்பாடுகள் [Conventional Systems] எவை யெல்லாம் அணு உலைப் பாதுகாப்பைப் பாதிக்கலாம் என்பது ஆராயப் பட்டது.

7. தீ அணைப்பு நீர், தீயை அணைக்கப் பயன்படும் போது, அதே சமயத்தில் அணு உலை வெப்ப நீக்கப் பாதுகாப்புக்கும், கொதி உலைக்கு அபாய கால நீர் அனுப்பவும், மற்றும் பாதுகாப்புக்கு உடந்தையான ஏற்பாடுகளுக்கும் வேண்டிய நீர் செலுத்தவும், தீ அணைப்பு நீர் ஏற்பாடு [Fire Figting System] உதவுமா வென்று ஆராயப் பட்டது.

நரோரா விபத்தைப் போல் மீண்டும் பாரத அணுமின் நிலையங்களில் நிகழுமா ?

அணு உலைப் பாதுகப்புக்குச் சுயக் கட்டுப்பாடு முறைகள் எத்தனை இருந்தாலும், இயக்கத்தின் போது மனிதக் குறுக்கீடுகள் எழுவதைத் தடுக்க முடியாது! மனிதர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் கைத் தவறுகளையோ [Physical Errors], அல்லது சீர் தூக்கிப் பார்த்துச் சிந்திக்கும் மூளைத் தவறுகளையோ [Judgemental Errors] யாராலும் கட்டுப் படுத்த முடியாது! கைத் தவறுகளைக் கண்காணிப்புகள் மூலம் குறைக்கலாம்! ஆனால் ஆட்சி அறை எச்சரிக்கைக் காட்சிகளை உடனே ஆராய்ந்து, சீக்கிரம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் மூளைத் தவறுகளை எவராலும் தடுக்க முடியாது! 

நரோராவில் ஏற்பட்ட தீ விபத்து போல், பாரதத்தின் புதிய அணு உலைகளில் மீண்டும் நேர்ந்திட வழியில்லை! ஆனால் வேறுவித விபத்துகள், மானிடத் தவறுகளால் தூண்டப் பட்டு அணு உலைகளில் நேரலாம்! மனிதத் தவறுகளைப் பயிற்சி முறைகள் மூலமும், தொடர்ந்த கண்காணிப்புகள் மூலமும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்! அடிக்கடி நினைவூட்டும் இயக்குநர் பயிற்சிகளும், அனுபவ இயக்குநரின் கண்காணிப்பும் அணு உலைகளில் அபாயங்கள் நிகழப் போவதை நிச்சயமாகத் தடுக்க முடியும்! அடுத்து யந்திரச் சாதனங்கள் தயாரிப்பின் போது புரியும் முக்கிய பணியான 'தரக் கட்டுப்பாடுகள் ' [Quality Controls] பழுதுகள் முதலிலே ஏற்படாமல் தடை செய்யும்! ஆரம்ப நிலை யந்திரத் தரக் கட்டுப்பாடும், மனிதத் தவறுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் நடத்தும் முற்போக்குப் பயிற்சி முறைகளும், அனுபவ இயக்குநர் கண்காணிப்பும் கடைப்பிடிக்கப் பட்டால், விபத்துக்கள் நேராமல் பாரதத்தில் அணுமின் உலைகளில் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும்!
*****************
சி. ஜெயபாரதன்

1 comments:

  1. தரக் கட்டுப்பாடும், பயிற்சி முறைகளும் கடைபிடிக்கப்படும் என நம்புவோம்

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger