Home » » புதிய ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமக் கொள்கையை அறிவிப்பு !.BSNL ?

புதிய ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமக் கொள்கையை அறிவிப்பு !.BSNL ?

புதிய ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமக் கொள்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதன் கீழ் வழங்கப்படும் உரிமம் 20 வருடங்களுக்கு செல்லுபடியாகும். மேலும் 10 ஆண்டுகளுக்கு அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமம் தொடர்பாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அறிவிப்பு வெளியாகும் என்று முன்னதாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருந்தார்.

எனினும் வெள்ளி இரவே புதிய உரிமக் கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியானது. புதிய உரிமக் கொள்கையின்படி, அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், அதன் மூலம் எந்தவித தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தொலைத் தொடர்பு சேவைகளை வழங்க இயலும்.

இந்த ஒருங்கிணைந்த உரிமத்தின் கீழ், இண்டர்நெட் வழியே மொபைல் மற்றும் லேண்ட் லைன் தொலைபேசி உள்ளிட்ட பல சேவைகளை அளிக்க முடியும். இண்டர்நெட் தொலைக்காட்சி சேவை வழங்கலாம்.

ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை மற்றொரு நிறுவனத்துடன் பங்கிட்டுக் கொள்ளவும் இந்த புதிய ஒருங்கிணைந்த உரிமம் வழி செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டு சேர்வது, ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்குவது போன்றவற்றுக்கான கொள்கை அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கபில் சிபல் கூறினார்.

நன்றி :- தினமணி, 03-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger