Home » » 10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் அக்.,24 முதல் விற்பனை !

10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் அக்.,24 முதல் விற்பனை !



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாவங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 24) முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வினாவங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.

2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.

3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.

5. விழுப்புரம் - இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.

6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்.

7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில், நாகப்பட்டினம்.

8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை.

10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.

11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.

12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.

15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி, ரத்னா திரையரங்கம் எதிரில், திருநெல்வேலி.

16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்.

18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.

21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை, ராசிபுரம்.

22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.

23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.

25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.

26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

27. கோவை - நல்லாயன் உயர்நிலைப் பள்ளி, பெரிய கடை வீதி, கோவை.

28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு.

29. உதகமண்டலம் - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.

30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.

31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம்,திருப்பூர்.                                 

தினமணி - 23 -10 -2013                                





1 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றி

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger