Home » » ரூ.2.5 கோடிக்கு ஏலம் போகும் ஐன்ஸ்டீனின் கடிதம்

ரூ.2.5 கோடிக்கு ஏலம் போகும் ஐன்ஸ்டீனின் கடிதம்




அமெரிக்காவின் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய இரு கடிதங்கள் 4 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 45 லட்சம்) வரை ஏலம் போகும் என "நியூயார்க் போஸ்ட்' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

1938-ஆம் ஆண்டு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஹெர்பர்ட் ஈ சால்ஸர் என்பவர் இயற்பியலில் ஒப்பிணைவு குறித்த ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் உள்ள பிழை குறித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்து, ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒரு கடிதத்தையும், செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றொரு கடிதத்தையும் ஐன்ஸ்டீன் அனுப்பியிருந்தார். இரண்டாவது கடிதத்தில், சால்ஸர் கூறியதுதான் சரி என்றும், தான் தவறு செய்திருந்ததாகவும் பெருந்தன்மையுடன் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
பிற்காலத்தில், கணிதவியல் வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் திகழ்ந்த சால்ஸர், 2006-ஆம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில், அவரிடமிருந்த ஐன்ஸ்டீனின் இரு கடிதங்களும் வரும் நவம்பர் 7-ஆம் தேதி நியூயார்க்கிலுள்ள கர்ன்ஸீ ஏல மையத்தில் ஏலத்துக்கு வரவிருப்பதாகவும், அவை 4 லட்சம் டாலர் வரை விலை போகக்கூடும் என்றும் "நியூயார்க் போஸ்ட்' பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.                    

தினமணி - 21-10-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger