Home » » பிப்., 10, 11ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் - பொதுமக்கள் என்ன செய்தல் வேண்டும் ?

பிப்., 10, 11ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் - பொதுமக்கள் என்ன செய்தல் வேண்டும் ?



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் , கிளை மேலாளர்கள், அதிகாரிகள், பழைய தனியார் வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், கிராமப்புற வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், அன்னிய வங்கிகளின் ஊழியர்கள்  பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.  

 8-தேதிக்குப்பின் கையிருப்பு காலியாகிவிடும் ஏ.டி.எம் மையங்களில் மீண்டும் பணத்தை நிரப்பி வைப்பார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்க்க வேண்டாம். முன்னெச்சரிக்கை உணர்வோடு தற்போதே தேவையான பணத்தை எடுத்துவைத்துக்கொள்வது நல்லது.வங்கிகளில் மேலாளர்கள் உட்பட அனைவருமே வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால்  காசோலைகள் , வரைவோலைகள் மற்றும் அவசரப் பரிவர்த்தனைகள் எவற்றிற்குமே வாய்ப்பில்லை. மொத்தத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவர் என்பது திண்ணம்..

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger