Home » » ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்

ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்




சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "எர்த் அவர் 2014' பிரசார நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கையெழுத்திடுகிறார் இசையமைப்பாளர் அனிருத். உடன் (இடமிருந்து) கிராண்ட்ஃபோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.கே.ரங்கநாத், உலகளாவிய இயற்கை அமைப்பு நிதியத்தின்(டபிள்யுடபிள்யுஎஃப்) இந்தியாவுக்கான இயக்குநர் ஹிமான்சூ.

உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என உலகளாவிய இயற்கை அமைப்பு நிதியத்தின் (டபிள்யுடபிள்யுஎஃப்) இந்தியப் பிரிவுக்கான இயக்குநர் ஹிமான்சூ வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:  தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மீதான தனிநபர் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த "எர்த் ஹவர் 2014' என்ற பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளோம்.

அதன்படி வரும் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 8.30மணி முதல் 9.30 மணி வரை நகரின் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து வைக்க பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.

இதற்கு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் தேவையற்ற விளக்குகளை அணைத்து விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மரபுசாரா எரிசக்தி மூலம் வீடுகளில் உள்ள மின் சாதனங்களை இயக்க வேண்டும். வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக வரும் 23-ஆம் தேதி திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை 42 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக "எர்த் ஹவர் 2014' பிரச்சார நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் கையெழுத்திட்டார்.

தினமணி

1 comments:

  1. அங்கு தேவை தான்... இங்கு ஒரு வாரமாக 3 மணிநேரம் ஆரம்பித்து விட்டது...!

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger