Home » » தொண்டுளங் கொண்டவரா ? சித்தர்களின் மருத்துவத்தில் நம்பிக்கை உண்டா ? வருக !. இணைக! அரிய வாய்ப்பு !

தொண்டுளங் கொண்டவரா ? சித்தர்களின் மருத்துவத்தில் நம்பிக்கை உண்டா ? வருக !. இணைக! அரிய வாய்ப்பு !
இப்போது சித்தர் - சித்தர் நெறி - சித்த மருத்துவம் போன்றவை  மக்கள் சிந்தனையில் அழமாக இடம்பெறத் துவங்கிவிட்டன. பசுமை, இயற்கை என்று பேசிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

திருமணம் போன்ற நிகழ்வுகளில் குறுஞ்ச்செடிகளையும், விதைகளையும் வழங்கத் துவங்கிவிட்டனர். அதுபோன்று இணையத்தில்  பல்வேறு வலைப்பூக்கள் உலா வந்தாலும், வாழ்வின் செழுமைக்கு உதவுபவை  மிகச் சிலவே ஆகும்.

அவ்வகையில் மிகவும் உபயோகமான பதிவுகளை

இயற்கை உணவு உலகம்  

http://naturalfoodworld.wordpress.com/
என்ற வலைப்பூவில் காண இயலும். தினந்தோறும் சென்றுபார்த்தாலும் புதிய பதிவுகள் இருப்பது அரிது. பழைய பதிவுகளையே திரும்பத் திரும்பப் படித்தாலும் எப்படி இந்த வலைப்பதிவரால் மட்டும் இவ்வாறு ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு உதவ முடிகின்றது. நம்மால் இயலவில்லையே என்ற ஏக்கம்தான் ஏற்படும்.

 தீர்க்க இயலாத நோய்களைத் தீர்த்து வைத்திருப்பதோடு, குணமானவர்களின் பேட்டிகளையும், நோயின் கொடூரங்களையும் படத்துடன் விளக்கிக் காட்டியிருப்பது பெரும் வியப்பினையே தரும்.

அண்மையில் சர்க்கரை அலோபதி வணிகம் என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. 57 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியாது என்று தெரிந்தும் தொடர்ந்து சிகிச்சை அளித்துவரும் அலோபதி டாக்டர்களின் இயலாமையையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. குறிப்பாகச் சொல்லப்போனால் சர்க்கரை வியாதி. மாத்திரையில் ஆரம்பித்து மாத்திரைகளாகி இன்சுலின் ஊசியில் கொண்டுபோய் சாகும்வரை தொடரும்.

ஆனால், இயற்கை உணவு உலகம் வலைப்பூவிற்குச் சென்று மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால், சித்த மருத்துவ முறையின் மூலமாகவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திட இயலும் என்பதை அனுபவரீதியாக உணர இயலும்.

நமது சித்த வைத்திய முறை எல்லோருக்கும் சென்றடையவேண்டும் என்று மேற்படி இயற்கை உணவு உலகத்தின் தளத்தினர் விருப்பம் தற்போது மேலோங்கி வருகின்றது.

அவ்வகையில் குணப்படுத்த இயலாத 7 வகை நோய்களைக் குணப்படுத்தி, அவர்களின் பேட்டிகளையும் தொடர்ந்து வெளியிட உள்ளார்கள். ஆர்வலர்களைத் நமது ஆயூர்வேதத்திற்குள் கொண்டுவரவும் விரும்புகின்றனர். விருப்பமுடையோர் பின்வரும் விண்ணப்பத்தை நிரப்பி உடன்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அன்புப்பி வைக்கலாம். நல்லோர் குழுமத்துடன் ஐக்கியமாகிப் பயமின்றியும் வாழலாம்.

7 பெரிய நோய்களுக்கு நம் சித்தர் பெருமக்களின் அருளால் கிடைத்த மூலிகைகளை கொண்டு குணப்படுத்தியதோடு அவர்களில் ஒவ்வொருவரின் பேட்டியையும் விரைவில் நம் வலைப்பூவில் வெளியிட இருக்கிறோம். சில அரிய காயகல்ப முறைகளை வெளியே சொல்ல அனுமதி இல்லாதகாரணத்தில் வரும் காலத்தில் நம் வலைப்பூ வாசகர்களில் சேவை உள்ளம் கொண்டோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. தங்களுடைய முழுமையான  தகவல்களைக் கொடுத்து ஆர்வமுடையோர் இயற்கை உணவு உலகத்தில் இணையலாம்.
Name / பெயர் :
Age / வயது :
M/F / ஆண் / பெண் :
Email / இமெயில் :
Business / Job / தொழில் / வேலை :
Phone / தொலைபேசி / அலைபேசி :
Country / நாடு :
Address / முகவரி :
இயற்கை உணவு உலகம் பற்றி தாங்கள் கூற விரும்பும் தகவல்கள் :
மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தையும் எழுதி  
என்ற இமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

நன்றி : இயற்கை உணவு உலகம்.
   http://naturalfoodworld.wordpress.com/

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger