Showing posts with label தமிழ்ச் சுரங்கம். Show all posts
Showing posts with label தமிழ்ச் சுரங்கம். Show all posts

கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8



"எளிய தமிழில் எல்லோரும் பயில'' என்ற உயரிய நோக்கத்துடன், கம்ப்யூட்டர் கல்விப் பிரிவில் செயல் பட்டு வரும், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் ஜிம்ப் புரோகிராமின், இன்றைய மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஜிம்ப் 2.8 குறித்து வழிகாட்டி நூல் ஒன்றை, ""கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதனை எழுதிய ஆசிரியர் ஜெ.வீரநாதன்.

ஏ4 அளவில், 142 பக்கங்களில் அமைந்துள்ள இந்த நூல், ஜிம்ப் சாப்ட்வேர் தொகுப்பிற்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. போட்டோ எடிட் செய்வதனைத் தொழில் முறையில் மேற்கொள்வோர் பலரும் பயன்படுத்துவது அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் சாப்ட்வேர் தொகுப்பினையே. போட்டோ ஷாப் குறித்தும் இதே ஆசிரியர் நூல் எழுதியுள்ளதால், இந்நூலின் தொடக்கத்திலேயே, மிகத் தெளிவாக, இரண்டு சாப்ட்வேர் தொகுப்புகளையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். 


இந்த புரோகிராமில் கூடுதலாகக் கிடைக்கும் வசதிகளைப் பட்டியலிட்டுள்ளார். ஜிம்ப் குறித்த அறிமுகப் பக்கங்களுக்குப் பின், அதன் டூல்ஸ் பற்றி, மூன்று பிரிவுகளில் விளக்கங்கள் தரப்படுகின்றன. தொடர்ந்து மெனுக்கள், கட்டளைகள், வண்ணங்கள் எனப் பல பிரிவுகளில், இந்த தொகுப்பின் செயல்பாடுகள், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுடன் இந்நூல் மற்றும் இந்த மென்பொருள் குறித்த சி.டி. ஒன்று இலவசமாகத் தரப்படுகிறது. விருப்பமிருந்தால் பெற்றுக் கொள்ளலாம்.

ஜிம்ப் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதால், இணையத்திலிருந்து நாம் தரவிறக்கம் செய்யக் கூடியதனை, இந்நூலாசிரியரே நமக்கு இந்நூலுடன் சிடியாக, இலவசமாக வழங்குகிறார். எனவே, நாம் இந்த மென்பொருளைப் பெற இணையம் செல்ல வேண்டியதில்லை. மென்பொருள் சி.டி.யில் உள்ள தனி போல்டரில் அதன் செட் அப் பைல்கள் இரண்டுடன் தரப்பட்டுள்ளது. 

இன்னொரு போல்டரில், அனிமேஷன் காட்சிகள் சில எடுத்துக்காட்டுகளாய் தரப்பட்டுள்ளன. இந்த சிடியில், இந்நூல் முழுமையாக பி.டி.எப். பார்மட்டில் தரப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கம்ப்யூட்டரில் ஜிம்ப் மென்பொருளை இயக்குகையில், தனியே நூலினைப் புரட்டிப் பார்க்க வேண்டியதில்லை. இது பி.டி.எப். வடிவில் தரப்பட்டுள்ளது. பி.டி.எப்.பைல்களைப் படிப் பதற்கான அடோப் அக்ரோபட் ரீடர் பதிப்பு 5 முழுமையாகத் தரப்பட்டுள்ளது. 

அதனை இந்த சிடியில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளலாம்.
இந்த சிடியில் தரப்பட்டுள்ளவற்றில் ஒரு சிறப்பான அம்சம் இதில் தரப்பட்டுள்ள வீடியோ விளக்கங்களாகும். ஓர் ஆசிரியர் வகுப்பறையில் விளக்கும் வகையில், மென்பொருள் இயக்கத்தின் சில செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நான்கு வீடியோ பாட பைல்கள் உள்ளன.
 
மேலே சொல்லப்பட்ட சி.டி.யுடன் சேர்ந்து இந்த நூல் ரூ.190 விலையிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, முதல் தளம், போலீஸ் கந்தசாமி வீதி, இராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045. தொலைபேசி எண் 0422 2323228 / 98422 13782.                                                                                              

தினத்தந்தி


 

காஞ்சிபுரம் : தளிர்களைக் காக்கும் வேர்கள்!


நாளிதழ்களையும் ஊடகங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பிரபலமானவர்களின் கரிசனத்தோடு எத்தனையோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் விளம்பர வெளிச்சம் படாமல், பத்தாண்டுகளுக்கும் மேலாக குழந்தைத் தொழிலாளர்களையும் படிப்பை இடையில் நிறுத்திவிடும் குழந்தைகளையும் கண்டெடுத்து, அவர்களின் படிப்பைத் தொடரும் சேவையில் ஈடுபட்டு வருகிறது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘வேர்கள்’ தன்னார்வ அமைப்பு. இதன் நிறுவனர், அறங்காவலர் நளினி மோகன். கல்வியால் பல தடைகளைத் தகர்த்து, வங்கிப் பணியில் இருப்பவர்.

“கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தான், வாய்ப்பு மறுக்கப்படுபவர்களுக்கு அதைக் கொடுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்” என்கிறார் நளினி.

வேர்கள் தன்னார்வ அமைப்பு மண்ணில் ஊன்றியது முதல் ஒத்த எண்ணமுள்ள நண்பர்களின் பொருளாதார உதவியாலும் அர்ப்பணிப்பு உணர்வாலுமே பணியைத் தொடர்ந்துவருகிறது என்கிறார் நளினி.

2000த்தில், குழந்தைத் தொழிலாளர் களுக்கான திருவிழா ஒன்றை வேர்கள் அமைப்பு நடத்தியது. 300க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கல்வி குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட 20 பேர், பள்ளி செல்லும் விருப்பத்துடன் எங்களை அணுகினர். அவர்கள் மேல் கடன் இருந்தது. பெற்றோர்களிடமும், முதலாளிகளிடமும் பேசி, அவர்களை பள்ளியில் சேர்த்தோம் என்கிறார் அமைப்பின் காப்பாளர் சுந்தர்.

அவர்களுக்கு உதவ கல்வி உறுதுணை மையமும் அமைக்கப்பட்டது. ஒரு தன் னார்வ ஆசிரியர் எழுத்துக்கள், வார்த்தை களை அறிமுகப்படுத்தி, விளையாட்டு முறையில் பயில அவர்களுக்கு உதவினார். குழந்தைகள் பள்ளிக்குப் போனதில் சில நன்மைகளும் விளைந்தன. புதிய பள்ளிச் சூழல், நண்பர்கள், பழக்க வழக்க மாறுதல்கள் ஏற்பட்டன. காலம்காலமாக ஏய்த்துவந்த முதலாளிகளைக் குழந்தைகள் கேள்வி கேட்டனர்.

அதே நேரம், குழந்தைகளுக்கு வீட்டில் சில சிரமங்களும் இருந்தன. இதுவரை வருமானம் தந்து வந்த நபரால் இனி வருமானம் இல்லை என்பதும், வருமானம் குறையும்போது ஏற்படும் எரிச்சல்களும் குடும்பத்தில் எழுந்தன. அப்போதும் வேர்கள் கல்வி உறு துணை மையம், மாணவர்களுக்குப் பக்கபலமாக நின்றது. மாணவர்களிட மும் பள்ளி ஆசிரியர்களிடமும், பெற் றோர்களிடமும் தன்னார்வலர்கள் தொடர்ந்து பேசி வந்தனர்.

இடைநிற்றல் குறைந்தது

இந்த 20 மாணவர்கள், அடுத்த ஆண்டு அவர்கள் தெருவில் படிக்காமல் வேலைக்குப் போகும் பிற குழந்தைகளை வேர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்த மாணவர் களே அவர்கள் வீட்டில் பேசி கல்வியின் அவசியத்தை புரியவைத்தனர்.

படித்து முடித்து மீண்டும் தறி வேலைக்கோ, அப்பள வேலைக்கோ தானே அவர்கள் வர வேண்டும். அப்புறம் எதற்குப் படிப்பு? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது என்கிறார் சுந்தர்.

"குழந்தைமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதையும் அவர்களுக்குப் புரிய வைப்பதில் சிரமம் இருந்தது. பள்ளி செல்லும்போது உலகை, மனிதர்களை குழந்தைகள் கற்கிறார்கள். எழுத்து எல் ேலாருடனும் தொடர்புகொள்ள உதவும் ஒரு ஊடகம் என்பதை குளுக்கோஸ் ஏற்றுவதுபோல் பெற்றோர்களுக்கு உணர்த்தினோம்" என்கிறார் அவர்.

இப்போது வேர்கள் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் 400. 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் இதில் இருக்கிறார்கள். எங்களால் படிப்பைத் தொடர்ந்த மாணவர்களில் இன்றைக்கு சிலர் வழக்கறிஞராகவும் தனியார் நிறுவனங் களில் பொறுப்பான பதவிகளிலும் இருக்கிறார்கள். அவர்களும் வேருக்கு நீர் வார்க்கிறார்கள். அவர்களைப் போன்ற தளிர்களைக் காப்பாற்ற!” என்கிறார் சுந்தர்.

தி இந்து 

மார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்


முழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் .
http://tamilspeak.com/?p=2642                 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப்
                                                                  பாடல்கள்    
 
                                 ஆண்டாள் திருக்கல்யாணம்,  படம் தினமலர்


http://tamilspeak.com/?p=2649                 - திருப்பாவை ஒன்று முதல் நான்கு பாடல்கள்
                                                                  பாடுபவர் நித்யஸ்ரீ 

http://tamilspeak.com/?p=2672                  - திருப்பாவை ஐந்து முதல் எட்டுப் பாடல்கள்
                                                                    பாடுபவர் நித்யஸ்ரீ :

http://tamilspeak.com/?p=2677                   -திருப்பாவை ஒன்பது முதல் பதின்மூன்று
                                                                   பாடல்கள் பாடுபவர் நித்யஸ்ரீ : 


http://tamilspeak.com/?p=2681                     திருப்பாவை பதினான்கு முதல் பதினெட்டுப்
                                                                    பாடல்கள் :  பாடுபவர் நித்யஸ்ரீ

http://tamilspeak.com/?p=2685                      திருப்பாவை பத்தொன்பது முதல்
                                                                     இருபத்திரண்டு பாடல்கள் பாடுபவர் நித்யஸ்ரீ

:  http://tamilspeak.com/?p=2688                   திருப்பாவை இருபத்துமூன்று முதல்
                                                                     இருபத்தாறு பாடல்கள்பாடுபவர் :நித்யஸ்ரீ 


http://tamilspeak.com/?p=2691                      திருப்பாவை இருபத்தேழு முதல் முப்பது
                                                                      பாடல்கள் பாடுபவர் நித்யஸ்ரீ                            


    
நன்றி. tamilspeak.com 

மனித உரிமைகள் மீறப்பட்டது உண்மை! ஒப்புக்கொண்டது இலங்கை அரசு

http://news.lankasri.com/show-RUmrzARbMYfoy.html


[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஒக்ரோபர் 2013, 04:04.07 AM GMT ]


உலகில் உள்ள எல்லா நாடுகளையும் போலவே இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் அதனைs சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன.

அதன் காரணத்தினால் சர்வதேச நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை.

இருப்பினும் அமர்வுகளில் பங்கேற்க தவறும் நாடுகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக் கூடும்.

அதற்கமைய இந்திய பிரதமர் மன்மோகன் இந்தியாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எனவும், ஆசியாவிற்கும் தலைவர்.  அவர் இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு இந்திய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger