Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

நாத்திகம் பி.இராமசாமி ( 24-02-1932 - 24-09-2009 )

"நாத்திகம்" பி. இராமசாமி

"நாத்திகம்" பி. இராமசாமி (1932 - செப்டம்பர் 24, 2009) தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று மிகச் சிறந்த பகுத்தறிவுப் பிரச்சாரகராகவும், காமராசரின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். நாத்திகம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

1932ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த மேல்ஆழ்வார் தோப்பில் பிச்சைக்கனி – பூவம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தவர் இராமசாமி. 17 வயதில் சென்னைக்கு வந்த இராமசாமி பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றிருக்கிறார். நாத்திகம் இராமசாமிக்கு ஆறு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். இதில் இரண்டு திருமணங்கள் சாதி மறுப்பு திருமணமும் கூட.
பத்திரிகையாளராக

1958 செப்டம்பர் 18 ஆம் நாளன்று பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காக நாத்திகம் பத்திரிகையை துவங்கினார். ஆரம்பத்தில் தினசரியாக இருந்து, பின்னர் பத்திரிகை வார இதழாக தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. 51 ஆண்டுகளாக நாத்திகம் பத்திரிகையை அவர் பல நட்டங்களுக்கிடையில் விடாது நடத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களையும் விடாது அம்பலப்படுத்துதல், திரைப்படம், தொலைக்காட்சி, பண்பாட்டு சீரழிவுகளை சாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது இந்த எழுத்துப்பணி இறக்கும் வரை வரை இடைவெளியில்லாமல் நிறைவேறியது.

பெரியாரின் தொண்டனாக விளங்கிய இவர் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தலைவர் காமராசரின் சாதனைகளையும், பகுத்தறிவுக் கட்டுரைகளையும் தான் நடத்திவந்த நாத்திகம் இதழில் வெளியிட்டு வந்தார்.

இலக்கியவாதியாக

சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார், நாத்திகச் சிங்கம் பகத் சிங், இதுதான் பார்பன ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி கொடுமைகள், RRS இந்து பாசிசம், சங்கர மடத்துக்கு சவுக்கடி 1,2,3, சங்கர மடம் பற்றிய உண்மைகள், பெரியார் சிறு கதை தொகுப்பு, சு.சமுத்திரமும் கடலூர் வீரமணியும் போன்ற எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கை தமிழருக்காக இலக்கிய வழியிலும் கொள்கை வழியிலும் நம்பிக்கையாக இருந்தார்.

தமிழக அரசின் பெரியார் விருது, இலக்கிய விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார். இவர் நாத்திகம் பிக்சர் என்ற சினிமா நிறுவனம் தொடக்கி மாதவி வந்தாள் என்ற படத்தை எடுத்தார்.

மறைவு

இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 2009, செப்டம்பர் 24 மாலை காலமானார்.

http://ta.wikipedia.org/wiki/நாத்திகம்_பி._இராமசாமி

இத்தாலி மொழியில் புலமை பெற்ற தமிழ்த் தலைமுறை வாழும் மாநிலம் இரிசினோ !

 
இத்தாலி மொழியில் புலமை பெற்ற தமிழ்த் தலைமுறை வாழும் மாநிலம் இரிசினோ (சுவிற்சர்லாந்து).
300 இல்லங்கள், தமிழர் தொகை 1200.

20 வயது வரை உள்ள தமிழ்த் தலைமுறையினர் அனைவரும் இத்தாலி மொழி பயின்றவர், அவர்களுட் பலர் அம்மொழியில் புலமையாளர்.

அவர்களுள் பலர் தமிழிலும் புலமையாளர். 10ஆம் வகுப்பு வரை தமிழைப் பாடமாகப் படிக்கின்றவர். தேர்வு எழுதி, அதில் வரும் மதிப்பெண்கள் மாநிலத் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்துக் கூட்டலாகும். மேற்படிப்புக்கு இம் மதிப்பெண் கூட்டல் உதவும்.

இரிசினோ மாநிலத்தில் மூன்று தமிழ்ப் பள்ளிகள், 300 மாணவர்கள். வார இறுதி ஞாயிறு தமிழ்ப் பள்ளி நாள்.

19.10.2013 நன்பகல் 1400 மணிக்கு இரிசினோ மாநிலத் தலை நகர் உலுகானோ நகரில் வாணி விழா.

பிற சொல் கலவாமல் தமிழைப் பேசுவோருக்காக ஒரு போட்டி. 15-18 வயது இளையர் கலந்தனர்.

இசை, நடனம், பேச்சு, கிண்டல் உரை என மழலைகள் தொடக்கம் இளையோர் வரை கலந்துகொண்ட பல்சுவைத் தமிழ் நிகழ்ச்சிகள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் மக்களால் தேர்வான ஒரே ஒரு தமிழர். வாவு மாநிலத்தின் உலவுசோன் மாநகராட்சி உறுப்பினர் திரு. நமசிவாயம். சுவிற்சர்லாந்தின் முதல் தமிழிதழ் உதயதாரகை. தொடங்கியவர் நமசிவாயம். இலங்கையின் திரைப்படம் குத்துவிளக்கு. அதில் கதாநாயகனாக நடித்தவர் அச்சுவேலி கதிரிப்பாய் தம்பிப்பிள்ளை நமசிவாயம்.

உலுகானோ வாணி விழாவின் சிறப்பு விருந்தினர் நமசிவாயம். விழாவுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

படங்கள் பார்க்க.  

மதுரையில் 19,500 மனைகளுடன் துணை நகரம்: ஜெயலலிதா உத்தரவு

 மதுரையில் 586.86 ஏக்கர் நிலத்தில், 19,500 மனைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த துணை நகரத்தை உருவாக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் திட்டங்களில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக முன் கட்டுமான தொழில்நுட்பத்தை அதாவது Prefab Technology என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, கட்டட பாகங்களான தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் தண்ணீர் மூலம் Curing செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்படும். கட்டுமான பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் இயந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு, கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும். 24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடிக் கட்டடங்களை இத்தொழில்நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டி முடிக்க இயலும்.

முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற இந்த நவீன தொழில்நுட்பம் முதற்கட்டமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் கட்டப்பட உள்ள 1,500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயன்படுத்தவும், இத்திட்டத்தினை செயல்படுத்த 379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நகரத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் தற்பொழுது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையினைக் கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையத்திற்கு அருகில் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிப்பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒரு ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரத்தை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த துணைக்கோள் நகரத்தில் குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும்.

முதற்கட்டமாக, இந்த துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, கழிவுநீர், வடிகால் வசதி, மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்காக 120 கோடி ருபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.                                                                                                                      

தி இந்து -20-10-2013

வானவில் குறித்துப் பல்வேறு நாட்டினரின் பல்வேறு நம்பிக்கைகளும் உண்மையும் !


கிரேக்க நாட்டினர், வானத்திற்கும் பூமிக்குமாக ( IRIS )  ஐரிஸ் எங்கின்ற தேவதூதர் அமைத்த பாதைதான் வானவில் என்கிறனர்.

சீனர்களோ இடி, மின்னல், மழைக்குப் பிறகு வானத்தில் பெரிய ஓட்டை விழுந்து விடுகிறது. அதைக் கடவுள் பல அழகிய நிறங்க்களைக் கொண்ட கற்களை வைத்து அடைத்து விடுகிறார். அதுதான் வானவில் என்கிறார்கள்.

இந்திரன்தான் வானவில்லை வில்லாக வளைத்து மின்னல்களை அம்புகளாக எய்கின்றான் என்பது  இந்துக்களின் நம்பிக்கை.

வடக்கு ஐரோப்பிய நாடுகளிலோ, கடவுளின் இருப்பிடத்துக்கும் மனிதர்களுடைய வீடுகளுக்குமிடையே கட்டப்பட்ட பாலம் எங்கின்றனர்.

ஜப்பான் நாட்டிலோ இறந்துபோன முன்னோர்கள் வானவில்லின் வழியாகப் பூமிக்கு வருகின்றர் என்கிறார்கள்.

பைபிளில், நோவாவுக்கு இறைவன் இந்த வானவில்லைக்காட்டி அதன் மூலம் இனி பூமியில் பெரும் வெள்ளத்தை உண்டாக்கமாட்டேன் என்று சொன்னதாக உள்ளது.

ஐரிஷ் ( irish )  புராணங்கள் வானவில்லின் ஒரு முனையில் ஒரு பெரிய பானை நிறைய தங்க்கம் இருக்கிரது. அதை லெப்ரி சான் ( LEPRE CHAUN ) என்கிற மந்திரவாதி பாதுகாத்து வருகின்றான் என்கிறது.

அரேபியர்களோ, வானவில் என்பது ஒரு அழகிய வேலைப்பாடுடைய வானத்து விரிப்பு. இதைத் தெர்குக் காற்று உருவாக்குகின்றது என்று சொல்கின்றனர்.

பெரு நாட்டைச் சேர்ந்த இங்கா ( INCA ) பழங்குடியினர் சூரியக் கடவுளின் பரிசு இந்த வானவில் என்று கூறிவருகின்றனர்.

ஆனால், சூரியக் கதிர்கள் மழை மேகத்தின் மீது மோதி, பிரதிபலிப்பதனால்தான் வானவில் உண்டாகின்றது என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளதாக வரலாறு வரையறுக்கின்றது.

வானவில்லின் அழகே அதனுடைய வண்ணங்களில்தானே இருக்கிரது ? 1666-ஆம் ஆண்டு நியூட்டன் ஒரு வெள்ளையான ஒளிக்கதிரானது பிரிசம் ( PRISM )  வழியாக உள்ளே நுழைந்து வெளியே வரும்போது பல வண்ணங்களாக மாறுகிறது என்பதை நிரூபித்து வானவில்லின் தோற்றம்பற்றி நிலவி வந்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நியூட்டனின் இந்தக் கண்டுபிடிப்பு ஆங்கிலக் கவிஞர் கீட்ஸுக்கு ( KEATS ) எரிச்சலைத் தந்திருக்கிறது. பல பேருடைய கற்பனை சக்தியை நியூட்டன் கெடுத்துவிட்டாரே - வானவில் ஒரு வெள்ளை ஒளிக்கதிர் என்று சொல்லிவிட்டாரே என்று அங்கலாய்க்கின்றார்.

எது எப்படியோ வானவில்லைக் காணும் பொழுதெல்லாம் மழையைக் கண்ட மயிலின் தோகையாய் நம் மனங்கள் ஆனந்தத்தில் விரிகின்றன என்பதுதானே உண்மை.


ஸ்டாபேஷ் நீர் வீழ்ச்சி
(  STAUBHACH FALLS )
சாந்தகுமாரி சிவகடாட்சம் தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற அனுபவங்களை பயணக் கட்டுரையாக,
மாதம் இருமுறை வெளிவரும் குமுதம் சிநேகிதியில் எழுதி வருகின்றார். அக்டோபர் 16-31-2013  தீபாவளி மலரில், ஸ்டாபேஷ் நீர் வீழ்ச்சி குறித்து எழுதிய கட்டுரையில் மேற்படி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்டாபேஷ் நீர்வீழ்ச்சி 300 மீட்டர் உயரத்தில் இருந்து விழும்பொழுது காற்றின் வேகத்தில் தூறல்களாக எல்லாத் திசைகளிலும் சிதறி விழுகின்றது. அந்தத் தருணத்தில் சூரியனின் கதிர்கள் அவற்றில் படுவதால் அங்கே அழகிய வானவில் தோன்றிவிடுகின்றது. இதனைக் கண்ட மகிழ்ச்சியின் தேடலில் கட்டுரையாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் திரட்டிய தகவல்களின் தொகுப்பே இந்த வலைப்பதிவு.

நன்றி :- குமுதம் சிநேகிதி , மாதம் இரு முறை - அக்டோபர் 16 - 31 -2013 தீபாவளி மலர்  - ( இரு மலர்கள் )                             

இன்று உலக போஸ்டல் தினம் -தினத்தந்தி தரும் ருசிகரத் தகவல்கள் !



25 பைசா நாணயம் ஒழிக்கப்பட்டு விட்டதே! 25 பைசாவிற்கு என்ன கிடைக்கும்? நிச்சயமாக தபால் துறையின் மேக்தூத் தபால் கார்டு 25 பைசாவிற்கு கிடைக்கும். தபால் கார்டு அறிமுகமான வரலாறு மிகவும் ருசிகரமானது. பாமர மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய தபால் கார்டு முறை 144 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டால் வெளியிடப்பட்ட து.

டாக்டா. இம்மானுவேல் ஹெர்மன் என்ற வியன்னா ராணுவ கழகத்தைச் சேர்ந் தவர் தான் இந்த தபால் கார்டை வடிவமைத்தார். 1875–ல் சர்வதேச அமைப்பாக உருவான போது அப்போதைய இந்திய தபால் தலை டைரக்டர் ஜெனரலாக இ ருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் ஜீலை 1–ம் தேதி 1879 ஆண்டு தபால் கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது.இதே ஆண் டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தபால தலைகள் அறிமுகமாயின.

இங்கிலாந்தில் 1870–ல் தபால் கார்டு அறிமுகமானது. ராணியின் தலை உருவத்தை பழுப்பு நிறத்துடன் அச்சிட்ட உள்நாட்டு தபால் கார்டுகளின் விலையை காணலாம்.ஒன் றரை அணா மதிப்புள்ள வெளி நாட்டு உபயோகத்திற்கான நீல நிற கார்டுகளும் அவ்வாண்டு வெளியிடப்பட்டன. இந்த இரண்டு தபால் கார்டுகளும் லண்டனில் உள்ள தாமஸ்–டி லாரு நிறுவனத்தால் ஜீலை 1ம் தேதி 1879–ல் வெளியிடப்பட்ட து.

அரசுப் பணிகளுக்கு என1880–ல் சேவை தபால் கார்டுகள் அறிமுகமாயிற்று. 1883–ல் பதில் அனுப்பும் தபால் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட் டது. 1922 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 24–ந் தேதி ஒரு கார்டின் விலை கால் அணாவிலிருந்து அரை அணாவாயிற்று. 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந் தேதி முதல் விலை முக்கால் அணாவாயிற்று. 1931 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 24–ந் தேதி விமான சேவை தபால் கார்டுகள் அறிமுகமாயிற்று.சுதந்திரத்திற்கு முன் ராணி உருவம் பொறித்த தபால் கார்டுகளும், ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த தபால் கார்டுகளும் வெளியிடப்பட்டன.சுதந்திரத்திற்கு பின் சில மாதம் வரை ஜார்ஜ மன்னர் உருவம் பொறித்த தபால் கார்டு அரை அணா மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

1949–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி 9 பைசா மதிப்புடைய திருமூர்த்தியின் சித்திரத்தை பச்சை நிறத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.1955–ல் பழுப்பு நிற அரை அணா உள்ளூர் கார்டுகள் வெளியிடப்பட்டன.1957–ல் அசோக சக்கரம் முத்திரை கொண்ட தபால் கார்டுகள் வெளியிடப்பட்டன.1957 ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட பின் கார்டின் விலை 5 நயா பைசா எனவும் 1965 ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் 6 நயா பைசாவாகவும்,1968 மே மாதம் 15–ந் தேதிலிருந்து 10 நயா பைசாவாகவும் விலை உயர்த்தப்பட்டது.

19 வருடங்கள் 1978 முதல் 1997 வரை 15பைசாவிற்கு விற்கப்பட்ட தபால் கார்டு 1997 ஆம் ஆண்டு ஜீன் 1–ந் தேதி 25 பைசாவாக விலை உயர்த்தப்பட்டது.

1979 ஆம் ஆண்டு ஜீலை 1–ந் தேதி தபால் கார்டின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரேத்யேக தபால் கார்டை வெளியிட்டது.போட்டிகளுக்கான தபால் கார்டுகளும் வெளியிடப்பட்டன.

3 பைசாவிற்கு அறிமுகமான தபால் கார்டு தற்போது 50 பைசாவிற்கு விற்கப்படு கிறது.தபால் கார்டை அச்சடிக்க அரசுக்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகக் குறைந்த விலைக்கு தபால் கார்டுகள் விற்க்கப்படுகின்றன

.இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேக்தூத் தபால் கார்டுகளை ஆகஸ்டு
 2002–ல் அறிமுகப்படுத்தியது.இதில் விலாசத்திற்கு இடது புறம் உள்ள பகுதியில் விளம்பரத்தை பெற்று அக்கார்டை 25 பைசாவிற்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த கார்டில் முதன் முதலில் இடம் பெற்ற விளம்பரம் ரஜினியின் பாபா திரைப்படம் ஆகும்.

நன்றி :- தினத்தந்தி

தகவல் தொழில் நுட்பவியலில் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள் !




Contact address
National Informatics Centre
 
Ground Floor, Multi-Storeyed Building,
 
Namakkal Kavignar Maaligai,
 
Fort St. George,Chennai 600 009
 
e-Mail:webadmin.tn@nic.in
 
தகவல் தொழில் நுட்பவியல் (அநமு) துறை


1. திறன் கட்டமைப்பிற்கான சிறப்பு மையம்  (Centre of Excellence for Capacity Building)
 

 அரசுத்துறைகள்  மின்  ஆளுமை  திட்டங்களை  நடைமுறைப்படுத்துவதில்
மென் பொருள் மேலாண்மை ஒரு முக்கியமான அம்சமாகும். அரசுத்துறைகளில்  மென்பொருள் மேலாண்மை செயல்பாட்டு திறமைகளை வளர்ப்பதற்கும், மின் ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்தும் அரசுத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவும், தகுதி சான்றுகளை  வழங்கவும்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி  ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில்  “திறன் கட்டமைப்பிற்கான சிறப்பு மையம்” ஒன்று உருவாக்கப்படும். இம்மையம் திறன்
மேம்பாட்டிற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பாகத் திகழும்.


2. மேகக் கணினி வழி  மின் அலுவலக சேவைகள்  (Cloud based e-Office Services)   

    மின் அலுவலக மென்பொருள் (e-Office Software)  என்பது  காகிதங்கள் அல்லாத மின்னணு முறையில் கோப்புகளை கையாள உதவும்  பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி ‘மின்னணு  அலுவலகம்’ மென்பொருள் சேவை  மாநில தரவு மையத்தில் மேகக் கணினி  முறையில் நிறுவப்படும். இம்மென்பொருளை விரும்பும் அரசுத் துறைகள் தங்களது அலுவலகப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக எந்த புவிப்பரப்பு எல்லைகளிலிருந்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோப்பினை கையாள முடியும்.  

 3. மென்பொருள் சோதனைக்கான   மூலக்கணினி பண்ணை  (“Server 
     Farm”  for Software Testing " )   

         தகவல்  தொழில்  நுட்ப    மென்பொருளை  உருவாக்கும்  போது
அதனைஇணையதளத்தில் வெளியிடுவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்புதணிக்கை மற்றும் சோதனை புரிய ஒவ்வொரு துறையும்
தங்களதுமூலக்கணினிகளை (Server Farm) தற்காலிகமாக மாநில தரவு மையத்திற்குகொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது.

எனவே இந்த இடர்ப்பாட்டினைk களையும் வகையில் அரசுத் துறைகள் தங்களது மின்ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்தும் போது பாதுகாப்பு
சோதனைகளுக்காகவும், இணையதளங்களின் உறுதித் தன்மையைs  சோதிக்கஏதுவாகவும்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி மாநிலத்தரவு மையத்தில் நிரந்தர மூலக்கணினி பண்ணை -“Server 
     Farm”  for Software Testing " - 
கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும். 


4. குறுந்தகவல் சார்ந்த சேவைக் கண்காணிப்பு (SMS Based Service Tracking)   

 அரசுத்  துறைகள்  மின்  ஆளுமை  சேவைகளை  மக்களுக்கு  வழங்கி
வருகின்றன. தமிழ்நாட்டில் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதால் அரசு சேவைகளை கைப்பேசியின் வாயிலாகவும்
வழங்குவதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.  பொது மக்களுக்கு தகவல்களை
அனுப்பவும், அவர்களிடமிருந்து தேவையான தகவல்களை பெறவும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் ஆணையின்படி குறுந்தகவல் சார்ந்த இரு வழி தகவல் தொடர்பு
நிலை அறியும் வசதி ஒன்று ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அரசின்
சேவைகளை பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரடியாக கொண்டு செல்ல
இயலும்.

5. பொதுச் சேவை மையங்கள் ("Common Service Centre") விரிவாக்கம்

பொதுமக்களுக்கு  அரசின் சேவைகளை பொதுச் சேவை  மையங்கள்
மூலம் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பதற்கு அரசு
முயற்சிகளை எடுத்து வருகிறது. இம்மையங்கள் மூலம் மின் ஆளுமை
அரசுசேவைகள் மற்றும் இதர தனியார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை விரிவு படுத்தும் வகையில்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி
மாநிலம்முழுவதும் கூடுதலாக 2280 பொதுச் சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இதன் மூலம் கிராமப்புற மக்கள்  அரசின் சேவைகளை பெற அரசு
அலுவலகங்களை நாடி பயணம் மேற்கொள்வது பெருமளவில் தவிர்க்கப்படும்.

உதவி :- தமிழக அரசின் இணையதளம்.

கோரிக்கை :- யூனிகோடு முறை பின்பற்றப்பட வேண்டும். copy & paste 

                             தமிழைப் படிக்க இயலவில்லை. எமது நண்பர்  

                            வின்மணியின்  உதவியால்தான், இந்தப் பக்கத்தைப் பதிவு 

                            செய்வது சாத்தியமாயிற்று

உலகை மாற்றிய புத்தகத்துக்கு 50 வயசு !



கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கிய புத்தகங்களில், ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு:

ரேச்சல் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring). இந்தப் புத்தகம் வெளியானபோது, ‘அர்த்தமற்ற புத்தகம்’என்று விமர்சித்திருந்தது 
‘டைம்’பத்திரிகை. ஆனால், அந்த ‘டைம்’பத்திரிகையே பின்னாளில், ‘20-ம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய 100 முக்கிய ஆளுமைகள்’என்று வெளியிட்ட பட்டியலில் ரேச்சல் கார்சனுக்கு இடம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது வரலாறு.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சிபற்றிப் பேசும்போது, ரேச்சல் கார்சனைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க முடியாது. அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எப்படிப் பகுப்பாய்வது என்பதைக் கற்றுத்தந்தவர் ரேச்சல் கார்சன்தான்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான அமைப்புகள் அதிகம் வெறுக்கும் புத்தகங்களில் ஒன்று ‘மௌன வசந்தம்’. அது வெளியான நாள் செப்டம்பர் 27, 1962. வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பிரதிகள் விற்றன. புகழ்பெற்ற பிறகு, ‘நியூயார்க்கர்’வார இதழில் தொடராகவும் வெளியானது.

ரேச்சல் கார்சனின் தோழி ஓல்கா ஓவன்ஸ் ஹக்கின்ஸ், 1958-ல் ரேச்சலுக்கு எழுதியிருந்த கடிதத்தில் ‘எனது ஊரில் வசந்தம் மௌனித்து, நிலம் வாழ்விழந்துபோனது’குறித்து வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்ட காலமாகவே அக்கறை கொண்டிருந்த கார்சனின் கவனத்தை அது கூர்மையாக்கியது. 1952-ல் அரசுப் பணியில் இருந்து வெளியேறி, அடுத்த 10 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு ‘மௌன வசந்தம்’ நூலை அவர் வெளியிட்டார்.

இந்தப் புத்தகம்தான் ‘சூழலியல் தொகுதி’ (ecosystem) என்ற சொல்லை, அதாவது உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பதை முதன்முதலில் எடுத்துச் சொன்ன புத்தகம். இப்படி ஒன்றையொன்று சார்ந்து வாழும் நமது உயிர்க்கோளத்தில் வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று போன்றவற்றை மாசுபடுத்தி, பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்று ‘மௌன வசந்தம்’ ஆதாரங்களுடன் விளக்கியிருந்தது.

பூச்சிக்கொல்லிகள் மீதான வழக்கமான பரிசோதனைகள் கீழ்க்காணும் முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாததை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஒரு ஏரியில் 0.02 பி.பி.எம். (கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) வேதி மாசுப்பொருள் கலந்தாலும், அது உணவுச் சங்கிலியின் ஒரு நிலைக்கு மேல் உள்ள ஒரு பறவையிடம் வந்து சேரும்போது, அதன் ரத்தத்தில் 1,600 பி.பி.எம். என்ற பூதாகர அளவுக்கு, அதாவது அப்பறவையைக் கொல்லும் அளவுக்குப் போய்விடுகிறது என்பதை ரேச்சல் விளக்கினார்.

 அவரது இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னர்தான் உயிர் உருப்பெருக்கம் (Biomagnification) என்ற வார்த்தையும் மனித உடல்நலனில் அது ஏற்படுத்தும் பெரும் ஆபத்தும் உணரப்பட்டன. இன்றைக்குப் பல்வேறு நச்சுப்பொருள்கள் இந்த வகையில்தான் நம்மைப் பாதிக்கின்றன என்றும் அவற்றால் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன என்றும் தெரியவந்திருக்கிறது.

வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு நச்சு வேதிப்பொருள்கள் ஒன்றுசேரும்போது, அவை தனித்தனியாக ஏற்படுத்தும் பாதிப்புகளைவிட, கூட்டாக ஏற்படுத்தும் பாதிப்பு பல மடங்கு அதிகம். அவை நீண்ட காலத்தில் செல்களைப் பாதித்து மரபணுப் பண்புகளைச் சிதைப்பதாகவோ புற்றுநோயை உருவாக்கக்கூடியதாகவோ அமையும்.


 அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டைக் கழுகுகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிவதற்கான காரணம், வேளாண் பூச்சிக்கொல்லிகளே என்று அவர் விளக்கினார். மொட்டைக் கழுகுகளின் உடலில் சேர்ந்த நச்சால், அவற்றின் முட்டை ஓடு வலுவிழந்து, முட்டை உடைந்துபோவதே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதால் வேளாண் விளைச்சல் கூடுவதில்லை. மனிதர்களைப் போன்ற பெரிய உயிரினங்கள் தகவமைத்துக்கொள்வதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும்போது, பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி மிகக் குறுகியது. 


எனவே, பூச்சிகள் மிகக் குறைந்த காலத்திலேயே இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு எதிர்ப்புச் சக்தியைப் பெற்று பெருகிவிடுகின்றன என்கிறார் கார்சன். மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட பூச்சியின் இயற்கை எதிரியையும் பூச்சிக்கொல்லி கொன்றுவிடுவதால், அந்தப் பூச்சி அடுத்த தலைமுறையில் மிக மோசமாக உருவெடுக்க வழிவகுக்கிறது. 


‘டி.டி.ட்டி.’ போன்ற பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக அவர் அறிவியல் ஆதாரங்களுடன் முன்வைத்த வாதம், வேதிப்பொருள் தொழிலுக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக அந்தத் தொழிலைச் சார்ந்தவர்கள் ரேச்சலை கம்யூனிஸ்ட் என்றும், “பைத்தியக்காரத்தனமான வாதங்களை முன்வைக்கிறார் என்றும் தூற்றினார்கள்.

ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 1972-ல், ‘டி.டி.ட்டி.’ பூச்சிக்கொல்லி அமெரிக்க அரசால் தடைசெய்யப்பட்டது. கார்சனின் புத்தகத்துக்குப் பின்னரே அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (US EPA) தொழிற்சாலைகள், விவசாயத்துக்கு ஆதரவாகச் செயல்படாத வகையில் தனிப்பொறுப்பு கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. மிகத் தாமதமாக என்றாலும், 2004 ஸ்டாக்ஹோம் சாசனத்தின்படி, ஒட்டுமொத்த உலகிலும் வேளாண் பயன்பாட்டுக்கு ‘டி.டி.ட்டி.’ உள்பட பல்வேறு வேதிப்பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஒரு பெண், ஒரு புத்தகம், எப்பேர்ப்பட்ட தலைகீழ் மாற்றம்!

இந்த இடத்தில், வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியையும் தொழில் நிறுவனங்கள் எப்படிக் காய்நகர்த்தித் தங்கள் லாபத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கார்சனின் புத்தகம் அமெரிக்காவில் ஏகபோக வரவேற்பைப் பெற்ற அதே காலத்தில்தான், ‘பசுமைப் புரட்சியின் தந்தை’நார்மன் போர்லாக், இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தினார்.

அதாவது, ‘நமது பாரம்பரிய விவசாய முறைகள் தேறாது’என்று முத்திரை குத்தி, வேதிப் பூச்சிக்கொல்லிகள் வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட்டன. நார்மன் போர்லாக்குக்கு 1970-ல் நோபல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

ரேச்சலின் ஆய்வுகள் மற்றொரு விஷயத்தை யும் நமக்கு வலியுறுத்துகின்றன. அவரது ஆராய்ச்சிகள் கண்மூடித்தனமாக அறிவியல் முன்னேற்றங்களையோ லாபத்தைப் பெருக்கு வதையோ மையமாகக் கொண்டிராமல், வளம்குன்றாத வளர்ச்சியை (Sustainable development) வலியுறுத்தின.

இயல்பிலேயே பெண் அனைத்தையும் மறுஉற்பத்தி செய்பவள். தனக்காக மட்டுமின்றி எதிர்காலத் தலைமுறைகளுக்காகச் சிந்தித்து, இயற்கையைச் சிதைக்காமல் வளம்குன்றாத வளர்ச்சியை வலியுறுத்துபவள்.

பாரம்பரியமாகப் பெண்ணிடம் இருந்துவரும் இந்தப் பண்புகளின் நீட்சியைத்தான் ரேச்சலின் ஆய்வுகளில் பார்க்க முடிகிறது.   
                               
தி இந்து-03-10-2013

இலங்கை-முல்லைத்தீவில் இருந்த பிரபாகரனின் பதுங்கு குழி தகர்ப்பு ?




இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழியை அந்நாட்டு ராணுவம் வெடிவைத்துத் தகர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்துடன் 2009இல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பிரபாகரனும் அவரது மூத்த சகாக்களும் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து முல்லைத் தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அதன்பின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் பகுதிகளில் ஒன்றாக அது மாறியது.

இந்நிலையில், முல்லைத்தீவில் உள்ள பிரபாகரனின் பதுங்கு குழியை இலங்கை ராணுவம் வியாழக்கிழமை மாலை 6.40 மணியளவில் குண்டு வைத்துத் தகர்த்ததாக கொழும்பு டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அந்தப் பதுங்கு குழிக்கு அருகில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் சென்று தங்குமாறு ராணுவம் கேட்டுக் கொண்டதாகவும் இதற்கு பதுங்கு குழிக்குள் வெடிபொருள்கள் இருந்ததே காரணம் என்று ராணுவம் தெரிவித்ததாகவும் அந்தப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

எனினும், பிரபாகரனின் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ராணுவம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.                   

தினமணி,  05-10-2013

சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு: நிகழாண்டு ஜெர்மனி பேராசிரியருக்கு வழங்க முடிவு !





நிகழாண்டுக்குரிய சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு ஜெர்மனி பேராசிரியர் பீட்டர் ஷோல்ஸþக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சீனிவாச ராமானுஜன் ஆய்வுப் பாதையில் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டி அதில் பாராட்டத்தக்க அளவுக்குப் புதிய கருத்துகளை வழங்கும் இளம் கணிதவியல் அறிஞர்களுக்கு இப்பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இப்பரிசை வழங்குகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் அறிஞருக்கு 10,000 அமெரிக்க டாலரை பரிசாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்குரிய வயது வரம்பு 32 என வரையறுக்கப்பட்டது. அந்த வயதில் தான் ராமானுஜன் வியக்கத்தக்க சாதனையைப் புரிந்தார்.

இந்தப் பரிசு கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் நிகழாண்டு டிச. 21-22 ஆம் தேதியில் நடைபெறவுள்ள பன்னாட்டு எண் கோட்பாடு மற்றும் கலாய் பிரதியீடு கருத்தரங்கில் வழங்கப்படும்.

பேராசிரியர் ஷோல்ஸ் புரட்சிகரமான புதுமைக் கருத்துகளை எல்லாம் பல்வேறுபட்ட துறைகளில் வழங்கியிருக்கிறார். எண் கணிதம், அல்ஜீப்ரா சார்ந்த வடிவக் கணிதம், தன் வடிவப் படிவக் கோட்பாடு ஆகியவற்றில் தனித்துவக் கருத்துக்களைக் கூறியுள்ளார். கலாய் பிரதியீடுகளில் அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார்.

முதுநிலை ஆய்வேட்டிலேயே புதிய நிரூபணங்களைத் தந்துள்ளார். அவருடைய அணுகுமுறை போற்றும் வகையில் வித்தியாசமாக இருப்பதோடு முந்தைய அணுகுமுறைகளைவிட எளிமையானதாகவும் உள்ளன. இதுவரை விடை காணமுடியாத வினாக்களுக்கெல்லாம் தீர்வு கண்டுள்ளார்.

இவர் ட்ரெஸ்டனில் 1987 ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தார். கணித மேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட ஆண்டில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதைத் தாண்டிய இவர் உலகிலேயே மிகவும் மதிக்கத்தக்க கணிதவியல் வல்லுநராகத் திகழ்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

நிகழாண்டுக்குரிய சீனிவாச ராமானுஜன் பரிசுக் குழுவில் பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி (குழுத் தலைவர் - புளோரிடா பல்கலைக்கழகம்), காத்ரீன் பிரிங்மேன் (கோலோன் பல்கலைக்கழகம்), ரோஜர்ஹீத் ப்ரவுன் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்), டேவிட் மாசர் (பேசல் பல்கலைக்கழகம்) பேரிமசூர் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்), கென்ரிபே (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), வார்னரர் (க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்) ஆகியோர் இடம் பெற்றனர்.

தினமணி, அக்டோபர், 1, செவ்வாய், 2013

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம் !


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்
இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து அதை ஆகசுட்டு 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காகில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகசுட்டு 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் [29]. ஆகசுட்டு 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம் ஆகசுட்டு 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது [29]. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.[30][31]

ரெங்கோயி கோயில், யப்பான்
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின்

மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர்.[32][33]

மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார்.

 அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது.

அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார்.

1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.

இரகசியத் துறவி

உத்திரப் பிரதேசத்தில் 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர்.[34] நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின.[35] அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இவை பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்.[36][37] ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிகச் சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.

இறுதி உரை

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[38] அதன்படி இந்தியா,
"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

பாரத ரத்னா விருது

1992-ல்சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.[39]

போஸ் பற்றிய சித்தரிப்புக்கள்

திரைப்படங்கள்

  • 2010: கன்னடத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் உள்ள "சுப்பர்".
  • 2008: தெலுங்கு மொழித் திரைப்படம் "சுபாஷ் சந்திர போஸ்"
  • 2005: இந்தி மொழித்திரைப்படம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட கதாநாயகன்"
  • 2002: இந்தி மொழித்திரைப்படமான "பகத் சிங்கின் கதை" இல் போஸ் பற்றிய காட்சிகள்
  • 1966: வங்காளி மொழித்திரைப்படம் "சுபாஷ் சந்திரா"
  • 1950: இந்தி மொழித்திரைப்படமான "சமாடி" இல் போஸின் சிறு பாத்திரம்

ஆவணப்படங்கள்

  • இட்லருக்கும் காந்திக்குமிடையே - சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட சுதந்திரப் போராளி[40]

நூல்கள்

  • 1986: "பெரும் இந்தியப் புதினம்" (த கிரேட் இன்டியன் நோவல்) என்ற புதினத்தில் போஸ் பற்றிய கதாபாத்திரம்
  • 2012: கே.எஸ்.சிறிவஸ்டவா எழுதிய சுபாஷ் சந்திர போஸ்

படக் காட்சியகம்

வடக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாண சபைகளுக்கும் நில நிர்வாகம், போலீஸ் அதிகாரம் கிடையாது





இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாண சபைகளுக்கும் நில நிர்வாகம், போலீஸ் அதிகாரம் கிடையாது என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்தது.

இப்போது தரப்பட்டுள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டே மாகாண சபைகள் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் செய்தித்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான கெஹலிய ரம்புகவெல்லா இது பற்றி கூறியதாவது: தற்போது அமலில் உள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டே மாகாண சபைகள் செயல்படவேண்டும். வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்க உள்ளவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் இதை அறியாதவர் அல்ல என்றார் ரம்புகவெல்லா.
மாகாணங்களுக்கு நிலம், போலீஸ் அதிகாரம் இல்லை: இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு

மாகாண சபையின் எதிர்கால செயல்பாடு பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்திய நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிலம் மீதான அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால் நிலம் மீதான அதிகாரம் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அர்த்தம் இல்லை. நிலம் மீதான அதிகாரம் மாகாண அரசுகளுக்கு உள்ளது என கொழும்பில் உள்ள அப்பீல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதை மீறி நில அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க முடியாது என்றார் ரம்புகவெல்லா.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வடக்கு மாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வாரம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 36 இடங்களில் 30-ஐ கைப்பற்றி ஆட்சியை பிடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. 1987-ல் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசை நிர்பந்திப்போம் என்று வாக்காளர்களை அணுகி பிரசாரம் செய்தது தமிழ் தேசிய கூட்டணி.

மாகாண அரசுகளுக்கு வரம்பற்ற அதிகாரம் கொடுத்தால் அது இலங்கைத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கை நனவாக வழி செய்யும் என்று அதிபர் ராஜபட்சவின் தேசியவாதக் கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கின்றன
தி இந்து, திங்கள்,  செப்டம்பர் 30, 2013

தமிழ்விக்கி 10-ஆம் ஆண்டு விழாவில் சென்னையில் மயூரநாதன் ஆற்றிய உரை !


தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அஸ்திவாரமிட்ட முதல்வர்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து துபாயில் 
கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவரும்
கட்டிடக்கலைப் பொறியாளர்
மயூரநாதன்
-----------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2012 சனவரி மாதக் கணிப்பின் படி தமிழ் விக்கிப்பீடியாவின் 59வது இடத்தில் உள்ளது.[3] தமிழ் விக்கியில் இன்று வரை மொத்தம் 51,260 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில் மூன்றாவது இடத்திலும், திராவிட மொழி விக்கிகளில் இரண்டாவது இடத்திலும் தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள் தமிழ் இரண்டாவதாக உள்ளது. வரலாற்று நோக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.
பொருளடக்கம்

    1 தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
    2 இவற்றையும் பார்க்கவும்
    3 மேற்கோள்கள்
    4 வெளி இணைப்புகள்

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

    பக்கங்கள்= 1,41,898
    கட்டுரைகள்= 51,260
    கோப்புகள்= 8,713
    தொகுப்புகள்= 13,71,133
    பயனர்கள் = 47,579
    சிறப்பு பங்களிப்பாளர்கள்= 249
    தானியங்கிகள் = 93
    நிருவாகிகள் = 29
    அதிகாரிகள் = 4

Ind lang wiki.jpg
இவற்றையும் பார்க்கவும்

    தமிழ் விக்கிப்பீடியாவின் மைல்கற்கள்
    தமிழ் விக்கிப்பீடியா வரலாறு
    Tamil Wikipedia: A Case Study - 2009 விக்கிமேனியா மாநாட்டில் பயனர் சுந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது

மேற்கோள்கள்

    ↑ http://www.hindu.com/mp/2009/05/21/stories/2009052150760100.htm
    ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
    ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்

    தமிழ் விக்கிப்பீடியா
    தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்
----------------------------------------------------------------------------------------------------------------
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்

விக்கிபீடியாவின் 10-ஆம் ஆண்டுவிழா  நேற்று 30-09-2013ஞாயிறு முழுவதும்

கோலாகலமாக நிகழ்ந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம். பங்கேற்றோரில்

பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பதும் ஓர் சிறப்பம்சம். கூட்டத்தில்

தமிழ்விக்கியை முதன் முதலில் எழுதத் துவங்கிய - அஸ்திவாரமிட்ட  ஈழத்து

கட்டிடப்  பொறியாளர், மயூரநாதன் ஆற்றிய உரையிலிருந்து ஓர் பகுதி

பின்வருமாறு :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

 அனைவருக்கும் வணக்கம் .

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன், நான்.. காலத்தின் கட்டாயத்தால் புலம் பெயர்ந்தவன். கட்டிடப் பொறியாளரான எமக்கு உலகிலேயே முதலாவதான கட்டிடக்கலை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஆம்! கடந்த 20 ஆண்டுகளாகத் துபாயில் வாழ்க்கை தொடர்கின்றது. தமிழின்பால் கொண்ட ஈடுபாடும், துபாயில் கிடைத்த ஓய்வு நேரமும், ஆங்கில விக்கிபீடியாவின் தாக்கமும் தமிழ் விக்கியில் எழுதத் தூண்டியது.

எமக்கு IT குறித்த பயன்பாடு தெரியாது. இந்நிலையில் சுந்தர், IT பின்னணி கொண்டவரும் எம்முடன் தமிழ் விக்கி பணியில் இணந்து கொள்கின்றார். பின்னர் ரவி வருகின்றார். அவர் ஒரு செயல் வீரர். அவர் தமிழ் விக்கியில் எழுதிய கட்டுரைகளவிட, அவரது தூண்டுதலால் எழுதப்பட்ட கட்டுரைகள் 1000-க்கு மேல் இருக்கும்.


நக்கீரன், கனகு பின்னர்  தமிழ் விக்கியில் இணைந்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி வருகின்றனர். அதன்பின் கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வகுமாரின் வருகையால் தமிழ் விக்கி பெரிதும் விரிந்து குறிப்பிடத்தக்க அளவில் உலகில் தமிழுக்கென்று ஓர் முகமும்  ( அடையாளம் அல்லது முகவரி )கிடைத்தது.

தமிழ் விக்கியில் எழுதத் துவங்கியபோது, இந்திய மொழிகளில், சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு ஆகியவை விக்கிபீடியாவில் இடம்பெற்றிருந்தன, சமஸ்கிருதம்தான் முன்னணியில் நின்றது. 


எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே முதல், இரண்டாம் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் தரம் வாய்ந்த கட்டுரைகளே முக்கியம். தரமுள்ள கட்டுரைகள் தமிழில் அவதானமாகத்தான்  ( குறைந்த அளவில்தான் ) இடம்பெற்று வந்தன. ,

ஆனால், உறுதியான  விக்கிப்பீடியா சமூகத்தினரைத் தமிழர் உருவாக்கியுள்ளனர். 2010-க்குப்பின் சேர்ந்தோர்  தரத்துடன் கூடிய அதிகக் கட்டுரைகளைப் பங்களிப்புச் செய்து தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கையையும்  உயர்த்தியுள்ளனர். 

இத்தொண்டில் ஈடுபடுவோருக்குப் பண அளவில் எந்த லாபமும் கிடையாது. உலகளாவிய நிலையில் விக்கிமீடியாவை கூட்டுமுயற்சியில் வளர்ப்பது குறித்த ஆய்வு ,பின்வரும் முடிவுகளைத் தருகின்றன.

01. விழுமியம் - VALUES - அறம் சார்ந்த செயல்களை வளர்த்தல்

02. சமூகம் சார்ந்த மனத் திருப்தி கிடைத்தல்.

03. புரிதல், சார்ந்த விஷயம் -கட்டற்ற தகவல்களை அறிந்து கொள்ளுதல்

04. தொழில் மேம்பாட்டிற்காக ஈடுபட்டு உழைத்தல்

உலகின் மிகப்பெரிய NO 1 நிறுவனத்தில் விக்கிபீடியாவிற்காக விடுமுறை எடுக்கும்பொழுது ஓர் பெருமிதம் ஏற்படுகின்றது. எல்லோரையும் திரும்பிப்பார்த்து யோசிக்க வைக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காகக்கூட விக்கியில் பங்கேற்க வருகின்றனர். அவரவர் திறமை வெளிப்படுவதோடு மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. 


விக்கிப்பீடியா பயனர்களுக்கு குறிக்கோள் மிகவும் முக்கியமானது. கட்டற்ற முறையில் தமிழ்மொழி மூலமாக தமிழர்களின் அறிவு வளர்ச்சிக்கு  தொடர் பங்களிப்புச் செய்து ஊக்குவித்து விக்கிப்பீடியா உலகளாவிய அளவில் உதவி வருகின்றது.

நோக்கம் - ஃFUN - மகிழ்ச்சி !

ஊடகத்தின் POWER -தமிழ் மிக முக்கியமானது. அறிவு மேம்பாட்டிற்காக என்பது மட்டுமல்ல. உள்ளாற்றலைப் புரிந்துகொண்டு செயல்படவும் விக்கிப்பீடியா ப்யனர்களுக்கும் -பயன்படுத்துவோருக்கும் உதவுகின்றது.

எழுதும்போது கலைச் சொற்கள் பெரும் பிரச்சினையாக உள்ளன. வெவ்வேறு நாடுகளிலும் பயன்படுத்தும் கலைச் சொற்களை ஒன்றாக்கும் பெரும்பொறுப்பு நமக்கு உள்ளது.

விக்கி[ப்பீடியா எல்லோருக்கும் ஒரு மையதளமாக அமையக்கூடும்.

இந்தியாவில் எழுதும் கட்டுரைகளில் உள்ள வார்த்தைகள் இலங்கையில் படிக்கும் மாணாக்கனுக்குப் புரியுமா ?
இந்தியப் பயன்பாட்டுச் சொல்லின் பொருளையும் விளக்க வேண்டும்.

இவற்றிற்கெல்லாம் எந்த அரசையும் அல்லது எந்த நிறுவனத்தையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.

நன்றி, வணக்கம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விக்கிப்பீடியா 10-ஆம் ஆண்டு விழா நிகழ்வின் மாட்சிகளை எடுத்துரைக்க வார்த்தைகள் இல்லை. 29-09-2013
காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நிகழ்ந்த கூட்டத்திற் பங்கேற்றோர் புத்துணர்ச்சி பெற்றுத் திரும்பினர் என்று ஒரே வார்த்தையில் மட்டும் இங்கு குறிப்பாகக் கூறலாம்.


 இதர நிகழ்வுகள் கணினியில் இடம்பெற்றுள்ள  பலரது வலைப்பூக்களில் - வலைத்தளங்களில்- இணையங்களில்  முகநூல்களில் விரிவாகப் படங்களுடன் வெளிவரும்.  

உள்ளூர் மற்றும் அயல்நாட்டில் வாழும் விக்கிப் பயனர்கள் 28-09-2013 மேற்கொண்ட  மகாபலிபுரச் சுற்றுலாக் காட்சிகளையும் விரைவில் கண்டு மகிழலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------.

தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் தமிழ் விக்கிப் பயனர்களை
உருவாக்கிடும் நன்னோக்கில் ,  அமைப்புக்களை உருவாக்குவோம். வெற்றியும் ஈட்டுவோம். நாளை நமதே !

கன்னம் சிவக்கப் பெற்ற அறைக்கு கார் பரிசு சிவாஜிக்கு ! அதுவே அவரது முதல்கார் !

                                                                                                            அ.முத்துலிங்கம்
                                                                                                               amuttu@gmail.com
                                                          
சிவாஜியும் பத்மினியும் நடித்த திரைப்படம் எதிர்பாரதது 1950-ல் வெளிவந்தது. சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா இரண்டாம்தாரமாக பத்மினியை மணந்து கொள்கிறார். சிவாஜி நாகையாவின் மகன் என்பதால், பத்மினி சித்தியாகி விடுகின்றார். ஒரு கட்டத்தில் உணர்ச்சி வயப்பட்டு பத்மினியின் கையை சிவாஜி பிடிக்க, பத்மினி, சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அடித்துவிடுகின்றார். சிவாஜியின் கன்னம் வீங்கி மூன்று நாட்களாகப் படப்பிடிப்பிற்கு வர இயலாமற் போய்விடுகின்றது. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குச் செல்கின்றார். ஃபியட் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கின்றார். அதுதான் சிவாஜியின் முதல் கார். எதிர்பாராமல் கிடைத்த பரிசு.

அண்மையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ரொறொன்ரோவில் கம்பீரமான பொலீஸ்காரர் ஒருவரைச் சந்தித்தார். எதிர்பாராத சம்பவம் எப்போதாவது நடந்தது உண்டா என்று வினவினார். தினம் தினம் அப்படி ஒன்று நடக்கும் என்றார் பொலீஸ்காரர். "ஒரு ஆசிரியர். தன் மனைவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டது குற்றமானது. வழக்கு நடக்கிறது. ஆசிரியருக்கு இதுவே முதல் குற்றம். அவர் தண்டனை பெற்று ஜெயிலுக்குச் சென்றால் குடும்பம் வருமானமின்றிச் சீரழியும். எனவே மன்னித்து விட்டுவிடலாம் என்பதே நிலை. அச்சூழலில் ஆசிரியர் பேசினார். குழந்தைகளுக்கு சமைத்து உணவு போடாததால்தான் எண்ணேயை மனைவி மீது ஊற்றினேன் என்று காரணத்தைக் கூறினார். தீர்ப்பு திசை மாறியது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்கினார். நீங்க்கள் ஆங்கில ஆசிரியர். கனடாவின்  அரசியல் சட்டத்தை முறையாகக் கற்றுக்கொள்ள இந்த இரண்டு ஆண்டுக்காலம் போதுமென்றும் கூறினார். சோமாலியாவைச் சேர்ந்த, கனடாவில் வசித்துவந்த ஆங்கில ஆசிரியருக்கு இத்தண்டனையும், நீதிபதியின் விளக்கமும் எதிர்பாராதது.

1990-இல் ஓர் வழக்கு. உலகமே அவ்வழக்கினை உன்னிப்பாகக் கவனித்து வந்தது. குற்றவாளியின் பெயர் போல் பெர்ணாடோ. 30 பெண்களுக்கு மேல் வல்லுறவு கொண்டவன். மூன்று பெண்களைக் கொலை செய்தவன். இதற்கு அவனது மனைவியும் உடந்தை. கணவன் பெண்களைச் சித்திரவதை செய்யும்போது மனைவி அதை வீடியோ படம் எடுத்தாள். மனைவி செய்தபோது கணவன் வீடியோ படம் எடுத்தான். ஓய்வாக இருக்கும் சமயங்களில் இருவரும் கொடூரமான வீடியோக்களைக் கண்டுகளித்தனர்.

பெர்னாடோவைத் தினமும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரும் பொறுப்பு பொலீஸ்கார நண்பருக்கு. 1993-ஆம் வருடம் இவ்வழக்கு உச்சம் தொட்டது. தினமும் குற்றவாளி நீதிமன்றத்துக்கு வரும்பொழுது ஒரு குதிரை நடப்பதுபோலத் தலையைத் தொங்க்கப்போட்டுக்கொண்டுதான் நடப்பான். நீலக் கண்கள் ஒளிவீச , ஓர் அதிகாரிபோல சுற்றிலும் நோட்டம் விடுவான்.

எல்லோரும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை நிச்சயம் என்று எதிர்பார்த்தனர். அந்த வருடம்தான் ரொறொன்றோ ப்ளூஜேஸ் அணி பேஸ்பால் இறுதிப் போட்டிக்குத் தயாரானது.அன்றையப் போட்டியில் உலகச் சாம்பியன் யாரென்பது தெரியவரும்.

நீதிமன்றத்தை நெருங்கியபோது பொலீஸ்காரரைக் குற்றவாளி "நாய்க்குப் பொறந்தவனே " என அழைத்தான்.அப்படி அழைத்தால் எல்லாம் சுமுகமாக இருக்கிறதென்று அர்த்தம்." SIR"  என அழைத்தால்தான் ஆபத்து.

நாளைக்கு ப்ளூஜேஸ் அணியில் ஜோ கார்ட்டர் ஹோம் ரன் அடித்து வெற்ரி பெற்றுக் கொடுப்பானா? குற்றவாளிக்கு அது ஒன்றுதான் அன்றையக் கவலை. அடுத்த நாள் கடைசி நேரத்தில் ஹோம் ரன் அடித்து  உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது சரித்திரம். கனடிய நீதிமன்றங்க்களில்  எதிர்பாராத சம்பவம் நிகழ்பெறுவது உண்டு.

ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய சிறுகதையிலும் பாரெக்கச் சின்னதான ஒரு சிறுகதையைச் சமீபத்தில் ஓர் அமெரிக்க மாணவி எழுதியுள்ளார். ஐந்தே ஐந்து வார்த்தைகள்தான்.
"ஓ ! கடவுளே !நான் கர்ப்பமாகிவிட்டேன். யாராயிருக்கும் ?"

எதிர்பாராத சம்பவம் வாழ்க்கையைச் சில வேளைகளில் பின்னுக்குத் தள்ளும். சிலசமயம் முன்னுக்கு எடுத்துச் செல்லும். வாழ்க்கை பெண்டுலம்போலத்தான். முன்னுக்கும் பின்னுக்கும் நகர்வது.

தி இந்து - 27 - 09 - 2013

"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)"

 

 http://innovativeteach.blogspot.in/2013/05/fruits-name-in-tamil.html

 

"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)"

APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்

BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்

DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

EUGENIA RUBICUNDA - சிறுநாவல்

GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்

HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி

JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்

KIWI - பசலிப்பழம்

LYCHEE - விளச்சிப்பழம்

MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி

O - வரிசை
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்

PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்

QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்

TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்

UGLI FRUIT - முரட்டுத் தோடை

WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE - விளாம்பழம்

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger