மதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்..... மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன... நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை. வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால்...

ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள். கானுயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கவலைப்படும் இவர்களுக்கு போக்குவரத்து நெரிசலால், தொழிற் பெருக்க புகையால் ஏழைகள் படும் அவதி தெரியாது. தெரிந்தாலும் எழுதி அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். Environmental Romanticism is much safer than Environmental Activism....

வெளிநாட்டு நன்கொடை ஏன்?

மத்திய புலனாய்வு துறை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெற்று, அவற்றை தவறான முறையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும் முறையிலும் பயன்படுத்தி வருகின்றன என்று குற்றம் சொல்லியிருக்கிறது. இதைப்பற்றி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது எதிர்பார்ப்பையும் கவலையையும் தெரிவித்துள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை தடுக்கவும், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும், அரசின் சில தவறான செயற்பாடுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர்க்கும் நோக்கத்துடன், மத்திய புலனாய்வு துறையின் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு துறையின் மீது சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்...

சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் சமூக சேவகனாக இருக்க முடிகிறது- விபத்தால் திசை மாறிய வெங்கடபூபதியின் வெற்றிப் பயணம்

‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி.  தேனியை அடுத்த வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடபூபதி. டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். தான் நினைத்ததற்கு மாறாக ராணுவ முகாம் இருந்தததால், ஏழே வருடத்தில் விருப்ப ஓய்வில் வெளியில் வந்து விட்டார்.  ராணுவத்தில் இருக்கும்போதே எம்.ஏ., சமூகவியல் முடித்திருந்த வெங்கடபூபதி, வெளியில் வந்ததும் சமூகத்தை பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஆனால், இயற்கை அவரது வாழ்க்கையில் வேறுமாதிரி விளையாடிவிட்டது. ஆனாலும், தான் நினைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து அவரே விளக்குகிறார்..  1993-ல்...

இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை: கோவை கால்டாக்ஸி டிரைவரின் கருணை நிறைந்த மனம்

நிழல் மைய அமைப்பாளர்களுடன் முருகன்.  (நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது.)   மரத்தை வெட்டாதீர்கள் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, முடிந்தவரை மரக் கன்றுகளை நட்டுப் பழகுங்கள்’என்கிறார் கால்டாக்ஸி டிரைவரான முருகன். கோவை பகுதியில் இவர் நட்டு வளர்த்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம்.  சென்னை சூளைமேடு ஏரியாவைச் சேர்ந்தவர் முருகன். 1992-ல் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர், குடிகாரத் தந்தையின் இம்சை தாங்காமல் வீட்டிலிருந்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்பினார். கண்காணாத் தூரத்தில் போய் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முருகனுக்குள் அப்போது இருந்த...

தமிழ் மண் தவழா மோடி அலை

மோடி அலை! இந்தியாவில் வீசியதா? இல்லையா? இது இந்துத்துவ அலை என்றால், இந்தப் பேராபத்தைத் தடுப்பதெப்படி? தமிழகத்தில் வீசியது என்ன அலை? திராவிடம் வளர்ந்த தமிழ் மண்ணில் பாஜக வெல்லுமா? எனப் பல கேள்விகளும், இதன் தொடர்விளைவாகப் பல விவாதங்களும் விளக்கங்களும் எழுந்த வண்ணமுள்ளன. மோடி என்னும் பெரு மனிதரின் அலைதான் பாஜகவை இந்தியக் கொடுமுடியில் அமர்த்தியுள்ளதாகப் பெருமைப்படுகிறது சங்கக் குடும்பம். இல்லை, இல்லை... மோடி என்னும் வெற்று மனிதரை பூதாகரப்படுத்திக் காட்டுவதில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டதாகச் சொல்கிறது இடதுசாரிக் குடும்பம். இது மோடி செய்த மாயம் என்கிறார்கள் வளர்ச்சி பஜனை பாடுவோர்....

சமூகக் கலை இலக்கிய இதழ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ‘அகநாழிகை’ இதழ், புதிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் எழுத்தாளர் பொன். வாசுதேவன். அகநாழிகையின் முதல் இரு இதழ்கள், இணையத்தில் காத்திரமாக எழுதத் தொடங்கிய படைப்பாளி களுக்கான களமாக இருந்தன. யாத்ரா, விநாயக முருகன், ச. முத்துவேல், காந்தி, நர்சிம், லாவண்யா சுந்தர்ராஜன், சுகிர்தா போன்ற இணைய எழுத்தாளர்கள் பலருக்கும் அகநாழிகை இதழ் அடுத்த பரிணாமத்திற்கான மேடையை அமைத்துத் தந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் பலரின் முதல் கவிதை, கதைத் தொகுப்புகளையும் அகநாழிகை வெளியிட்டது. இந்த இதழில், கட்டுரை களுக்கான சிறப்பிதழைப் போல் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவிஞர் ராஜசுந்தர்ராஜன், குட்டிரேவதி,...
Pages (38)1234 »
 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger