Home » » 2-வயதுப் பேத்தியால் தெரிந்து கொண்ட மகாத்மா காந்தி கோவில் !

2-வயதுப் பேத்தியால் தெரிந்து கொண்ட மகாத்மா காந்தி கோவில் !


ஈரோடு; ஈரோட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியடிகள் கோவிலில், 15ம் ஆண்டு காந்தி ஜெயந்தி திருவிழா நடந்தது.

இந்திய அளவில், தேசப்பிதா மகாத்மா காந்திக்கு, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, செந்தாம்பாளையம் என்ற கிராமத்தில், 1997ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது.

இக்கோவிலில், காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் ஆகியோர் மூலவராக வீற்றிருக்க, ராஜகோபுரம், மகா மண்டபத்துடன் கூடிய கோவிலாக அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போலவே, இங்கும் தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று, காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்படும்..

காலையில் காந்தியடிகள் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.. காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய்க்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கும்..சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வேன் மூலமாக பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மகளிர் குழுவினர், குழந்தைகள் திரளாகப் பங்கேற்பர். குழந்தைகள் மற்றும் மாணவியர், தேசப்பற்றை வலியுறுத்தும் விதமாக, வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தி வருவர். பெண்கள்க பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளில் ஈடுவர்.

மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர், வையாபுரி முதலியார் மற்றும் பலர்  ஏற்பாடுகளைச் செய்வர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதும் வழ்க்கமாக உள்ளது..
---------------------------------------------------------------------------------------------------------------
நேற்று இரவு, புதிய தலைமுறையின் பழைய இதழொன்றைக் கொண்டுவந்த,
பேத்தி ஓவியா, குச்சியைப் பிடித்துக்கொண்டு நிற்கும் காந்தித் தாத்தா படம் இந்தப் புத்தகத்தில் உள்ளது. எடுத்துக்காட்டு என்றாள். பேத்தி சொன்னதை மட்டும் செய்தேன். அந்தப் பக்கத்தைப் படித்துக்கூடப் பார்க்கவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------
ஆனால், கணினியில், இருந்தபோது குஷ்பூவுக்குக் கோவில் கட்டிய தமிழகத்தில் மகாத்மா காந்திக்குக் கோவில் உள்ளதா ? என்று தேடினேன். தினமணி கோவிலின் புகைப்படங்க்களைத் தந்துவியது.
-----------------------------------------------------------------------------------------------------------------
தினமலர் திருக்கோவில்களின் பட்டியலில் காந்தி கோவிலும் இடம்பெற்றுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------
1997-ஆம் ஆண்டு கட்டப்பட்ட காந்தி கோவிலைப் பற்றிய தகவல்,

28 - 07 - 2013 -இல்தான் தெரியவந்தது குறித்து வருத்தம் கொண்டேன்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger