|
20:55 (10 hours ago)
| |||
|
21 ஆம் நூற்றாண்டில் திருவாளர். உதயக் குமாரும், செல்வக் குமாரும்
முதலாகக் கதிரியக்கத் தீங்குகளைக் கண்டுபிடிக்க வில்லை.
கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரியே அதற்கு முதல் பலியானார்.
ஹிரோஷிமா - நாகசாக்கி அணு ஆயுத மரணங்கள் யாவரும் அறிந்ததே !
கடந்த 50 ஆண்டுகளில் 30 மேற்பட்ட நாடுகள் செர்நோபில், புகுஷிமா தவிர 400
மேற்பட்ட அணுமின் உலைகளைப் பாதுகாப்பாய் இயக்கி வருகின்றன.
சுடுகாடான ஹிரோஷிமா-நாகசாக்கி இப்போது சுவர்க்க பூமியாய்ப் புத்துயிர்
பெற்று ஒளிர்கின்றன.
செர்நோபில்
அருகில் கட்டப் பட்ட [அதே மாடல்] மற்ற மூன்று பிற்போக்கு
அணுமின் உலைகள்
2004 ஆண்டு வரை பாதுகாப்பாய் அதே இடத்தில் இயங்கி
இப்போது ஆயுள் முடிந்து
மூடப் படுகின்றன.
செல்வக் குமார் "சுடுகாடு" என்று உயர்வு நவிற்சியில்
பட்டம் சூடும்
கனடாவின் அணுமின் சக்தியில் உண்டு உறங்கி, உயிர்த்துக் கணனி
தட்டி
வருகிறார். உலகிலே பெரிய 20 அணுமின் உலைகள் கனடாவில் கடந்த 50
ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன.
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++
0 comments:
Post a Comment