தொல்காப்பிய உயிரியலில் ,முளைவிட்டு நிகண்டுகளாக அரும்பி தமிழ் அகராதிகளாக மலர்ந்தன. முதல் தமிழகராதி 1732-இல் ஆக்கப்பட்டது. ஆக்கியவர் தமிழரல்லர். மதுரை மாநிலத்தில் மறைப்பணி புரிந்த இயேசு சபையைச் சேர்ந்த கொன்ஸ்டான்ஸியுஸ் ஜோஸப் பெஸ்கி என்பவராவார். இவரே பின்னாளில் வீரமாமுனிவர் என்று தமிழில் பெரும்புகழ்பெற்று அழிக்கப்பட்ட அடிகளாவார். முதற்றமிழ் அகராதியை உருவாக்கிய வீரமாமுனிவருக்கு மேனாட்டு மொழிப்பரப்பும், தமிழ்நாட்டு இலக்கியப் புலமையும் பின் புலங்களாக அமைந்தன. முதற்றமிழ் அகராதி பல பதிப்புக்களைக் கண்டன. பின்னர் 1928-இலும் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஆனால் கிடைப்பதற்கு அரிதாயிற்று.
பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர்.சூ.இன்னாசி,(எம்.ஏ.பி.எச்.டி.) அவர்கள் வீரமாமுனிவரின் சதுரகராதி குறித்து பட்ட ஆய்வை ( Ph.D. ) மேற்கொண்டார். ஆய்வில் பத்துப் பதிப்புக்கள் வெளிவந்திருக்கக் கூடும் எனத் தெளிந்தார். 1819-இல் சதுரகராதியின் பொருட்பகுதி மட்டும் அச்சிடப்பட்டுள்ளது என்றாலும், அதன் பிற பகுதிகளும் இணைக்கப் பெற்ற முழுமையான முதல் அகராதி 1824-இல்தான் வெளிவந்துள்ளது. பிற பதிப்புக்கள் முறையே 1835, 1845, 1848, 1860, 1872, 1875 ( பாண்டிச்சேரி ), 1875 ( சென்னை ), 1876, 1928 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.1835, 1860 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தவை ஆங்காங்கே பயன்பட்டவையாயினும், நிகண்டுகளும், மதுரையில் 1929-இல் வெளிவந்த பதிப்பும், தமிழ்ப் பேரகராதிகளும் பேரளவில் துணை நின்றதாக டாக்டர் இன்னாசி தெரியப்படுத்துகின்றார்.
அன்பன்,
சூ.இன்னாசி,
பாளையங்கோட்டை,
18-01- 1979 ( பதிப்புரையிலிருந்து )
1824-ஆம் ஆண்டின் முதற் பதிப்பில் இடம்பெற்ற முன்னுரையின்
இறுதிப்பகுதி ;-
.................. பின்னர் தோலாவிறலுள கோலானரசு செயமேலானிசை திகழ் நாலான் சார்ச்சி நாளில், நன்றா மனுமுறை குன்றாவகையிவண் மன்ரோவதிபதி நின்றாளுகையினில், கிரிஸ்து 1824 ஆம் வருஷத்துச் செல்லா நின்ற சக வருஷம் 1746-இல் நிகழா நின்ற தாரண வருடத்தின் கல்விச் சங்கத்துத் தலைவராகிய, ம-ரா-ரா-ஸ்ரீ.ரிச்சார்டு கிளார்க்குத் துரையவர்கள் அனுமதிப்படி, தமிழ்ச் சங்கத் தலைமைப் புலமை நடாத்துத் தமிழ்ப் பண்டிதர்களாகிய, தாண்டவராய முதலியார், இராமச்சந்திரக் கவிராயர் இவர்களால், சதுரகராதியில், மற்றைப் பெயர், தொகை, தொடை என்னுமிம் மூன்றகராதிகளும் பரிசோதிக்கப் பட்டுக் கல்விச் சங்கத்துத் துரைகளான் மேற் சொல்லிய சென்னைச் சங்கதிலச்சிற் பதிப்பிக்கப்பட்டன.
( கையெழுத்துப் படி ஒன்றின் முதற் பக்கத்தில் இருந்த பிரெஞ்சு மொழி நூற்குறிப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பு உள்ளது )
தலைப்புப் பக்க ( முகவுரை ) இறுதியில் பெஸ்கி ( வீரமாமுனிவர் ) எழுதியுள்ளது
இந்தியர்கள், பகுத்தறிவின் காரணகாரிய முறைக்கு இசைவதைவிட, பெரியோர் நூலின் பிரமாணங்களுக்கு இசைவு தருவர். யாரையும் நம்ப வைக்கும் உறுதியான வழி, பழைய நூல்களிலிருந்து மேற்கொடுப்பதாகும்.
இந்நூல்களில் பழந் தமிழர்கள் கடவுளைப் பற்ரியும் நற்பண்புகளைப்பற்றியும் உண்மையில் சிறப்பாகப் பேசியுள்ளனர். ஆனால் நூல்கள் செந்தமிழ் நடை தாங்கியிருக்க, செந்தமிழை முற்றிலும் அறியாதவர் என்ன செய்ய இயலும் ?
இதிலிருந்து இந்திய மக்களை அவர்களின் பழைய தவறான சிந்தனைகளிலிருந்து கிறிஸ்துவின் விசுவாசத்துக்கு அழைத்துவர அல்லது குறந்த அளவு அவர்களிம் பழைய காலத்துக் கதைகளிருந்து முற்றிலும் அவர்களைத் திருப்ப விரும்பும் இயேசு கிறிஸ்துவின் மறைத் தொண்டர்களும் மற்றவர்களுக்கும் இந்நூல் எவ்வளவு பயனுள்ளதாய், தேவையானதாய் இருக்கும் என்பது தெளிவாகும்.
மிக நல்லவரும் வல்லவருமாகிய கடவுள், உழைப்பும் களைப்பும் நிறைந்த இந்த நூலை, அவரது மிகு மகிமைக்காகத் தொடங்கிய இந்நூலை, தனி உதவியால் முடிவுக்குக் கொண்டுவரத் திருவுளங் கொண்டார். இதன் மிக நிறந்த, மிக இனிய கனிகளைச் சுவைக்க விரும்புவோர், தங்கள் அறிவுத் திறனையும் உள்ளத்தின் ஆர்வத்தையும் புறத்தே சேர்க்கத் தயங்காதிருப்பார்களாக.
இலத்தீன் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்ததாகக் குறிப்பு உள்ளது.
இவ்விரண்டும் ஜூலியன்வின்சனால் கூறப்பட்டுள்ளது.
சதுரகராதி உள்ளடக்கம் :-
முதல் கண்ணி - சந்தியா நசராஜன், சென்னை, 25-12-2015
1979 ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பில் இடம்பெற்ற டாக்டர் சூ. இன்னாசியின் பதிப்புரை , பாளையங்கோட்டை, 19 - 01- 1979
1824 ஆம் ஆண்டின் முதற்பதிப்பில் இடம் பெற்ற முன்னுரை
தலைப்புப் பக்கம், கொன்ஸ்டான்ஸியுஸ் ஜோஸப் பெஸ்கியின் ( வீரமாமுனிவரின் ) முன்னுரை
வீரமாமுனிவர் பாயிரம்
( பெயரகராதி தொடையகராதிகளில், ஏவல், வினைமுற்று, வினயெச்சம், வியங்கோள் முற்றெனக் காட்டியிருக்குஞ் சிலவற்றை வழியாகக் கொண்டு, இலக்கண நூல்களில் வினைச் சொற்களுக்குக் கூறிய யிறுதிநிலையுடைய வேலையை சொற்களையு மவ்வல் சொல்லெனக் கண்டுணர்க.)
முதலாவது பெயரஅகராதி , இரண்டாவது பொருளகராதி, மூன்றாவது தொகையகராதி
நான்காவது தொடையகராதி ( குறிற்கீழுதுகை , நெடிற்கீழுதுகை என இரு பிரிவுகள் )
ஒவ்வொரு பிரிவின் துவக்கத்திலும் நான்கு வரிப்பாடலாக அந்தப் பகுதியில் அடங்குவன பற்றியும் கூறியுள்ளார்.
ஈண்டுக்காட்டிய பற்பல தொடைப்பதமன்றி யடைமொழியானு மீரெச்சத்தானு மறுதொகையானு முற்றுவினையானும் வினக்குறிப்பானும் வேற்றுமை முதலிய விருபானுஞ் சங்கிருத முதலிய லெழுத்திதிரிபானு மோரளவின்றிச் சிறப்புள தொஐப்பதமாக வேண்டுவனவெல்லாங் கூட்டிக் கொள்க. அங்கனஞ் சிந்தாமணிமுதற் பல விலக்கியங்களில் வரும்படி, முதலாவது முதல், பதின்றாவது வரையான தொடைப்பதங்களுக்கான இலக்கணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
சந்தியா பதிப்பகம் , சென்னை - 600 083
044 / 2489 6979, 5585 5704
0 comments:
Post a Comment