நெல்லை சு.முத்து
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன
முன்னாள் அறிவியலாளர்
கொள்கை பரப்புதல்' அறிவியல் துறைதான். அதையே முன்னாளில் "கணக்கு' என்ற சொல்லாலும் குறித்தனர். அதிலும் சமயக் கணக்கு என்பது அயிவை, ஆசீவகம், சாங்கியம், சைவம், நிகண்டம், பிரமம், பூத (பௌதிக) வாதம், பௌத்தம் (புத்தி), மந்திரம், வைதிகம், நியாயம், வைசேடிகம், வைணவம் போன்ற பல சிந்தனை வாதங்களைப் பதிவு செய்கிறது மணிமேகலைக் காவியம்.
கொள்கை பரப்புதல்' அறிவியல் துறைதான். அதையே முன்னாளில் "கணக்கு' என்ற
சொல்லாலும் குறித்தனர். அதிலும் சமயக் கணக்கு என்பது அயிவை, ஆசீவகம்,
சாங்கியம், சைவம், நிகண்டம், பிரமம், பூத (பௌதிக) வாதம், பௌத்தம் (புத்தி),
மந்திரம், வைதிகம், நியாயம், வைசேடிகம், வைணவம் போன்ற பல சிந்தனை
வாதங்களைப் பதிவு செய்கிறது மணிமேகலைக் காவியம். "கணக்கர்' எனும் சொல் -
மொழி, இலக்கியம், சமயக் கொள்கை பரப்புவோரைக் குறிப்பதாகவே விளங்கிற்று.
நீதி இலக்கியங்களான "பதினெண் கீழ்க் கணக்கு' நூல்கள் வேறு என்னவாம்?
ஆசீவகவாதியின் கொள்கையைப் பாருங்கள். வண்மையுடைய நில அணு, நிலம் சேர்ந்து ஆழும் நீர் அணு, குறுக்கிட்டு அசைதலை உண்டாக்கும் காற்று அணு, எரிந்து மேல் நோக்கி எழும் நெருப்பு அணு ஆகிய நான்கும் ஒருவித ஆதியும் அந்தமும் அற்றுவிளங்கும் "பரமாணுக்கள்' என்கிறது. திட, திரவ, வாயு, "பிளாஸ்மா' ஆகிய நான்கு இயற்பியல் நிலைகள் இவை.
ஒவ்வொரு அணுவையும் சிறப்புத் தன்மையுடன் ஆராயாதவர்கள் பஞ்ச பூதங்களையும் அறிய மாட்டார். பூதம் என்றால் பேய், பிசாசு என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்துக்கொண்டு இருக்கிறோம். "பொருள்' என்பதே அதன் பொருள். பூத அறிவியலே பௌதிகம். இதனை உணராமல், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர், ""..ஒரு மயிர் அறியார், சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்'' (மணிமேகலை 27: 148 - 149) என்கிறார் சீத்தலைச் சாத்தனார் ("ஷீர்' - ஸ்ரீதலை சாத்தனார்?). அதாவது தனித் தனி உரோமத்தையும் இழைபிரித்து அறியாமல், மொத்தத் தலைமுடியையும் கொத்தாகப் பார்ப்பது முறை அல்ல என்பது அவர் அறிவியல் பார்வை. அற்புதமான அறிவியல் பகுதிறன் சிந்தனை.
அணுக்கள் ""..ஒன்றி ரண்டாகிப் பிளப்பதும் செய்யா;/ அன்றியும் அவல் (நெல் பதர்) போல் பரப்பதும் செய்யா;/ உலாவும், தாழும், உயர்வதும் செய்யும்..'' (மணிமேகலை 27: 127 - 132). நிலையாக ஓரிடத்தில் நில்லாது. அங்கிங்காக இடம்பெயரும் என்பதே இன்றைய இயற்பு வேதியியலில் "பிரௌனியச் சலனம்'. தாழும், இறங்கும் அலைவு நிலை.
அதுமட்டுமா, கருமை, கருநீலம், பசுமை, செம்மை, பொன்நிறம் (மஞ்சள்), வெண்மை ஆகிய ஆறு நிறங்களின் பிறப்பு பற்றிய செய்திகள் (27: 150-153) வானவில் வண்ணங்களைச் சுட்டுவன அல்லவா? மணிமேகலைக் காலத்தின் ஆசீவக வாத அறிவியல். அதனை இன்றைக்கு மதக்கொள்கை என்று தவிர்க்கிறோம்.
நிகண்ட வாதப்படி, ""காலம் - கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும், ஏலும் கற்பத்தினெடு நிகழ்ச்சியும்'' (மணிமேகலை 27: 191-192) என்பதில் "கணிகம்' என்பது சிறு இம்மி என்றும், "கற்பம்' என்பது அபிதான சிந்தாமணிப்படி கோடி கோடி கோடி அளவு என்றும் அறிகிறோம். அதனாலேயே "காலம்' என்பது அணு முதல் அண்டம் வரை பரவியது என்னும் கருத்துப் பெறப்படும். இன்றைய நவீன "கால - வெளி' பற்றிய அறிவியல் கொள்கை. இதனை மதத்தோடு பொருத்தி அங்கலாய்ப்பானேன்?
""பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய'' (27; 257) என்கிறது வைசேடிக வாதம். விஷ்ணு - வைஷ்ணவம் என்ற உரிச்சொல் ஆனது போல, விசேடம் இங்கு வைசேடிக(ம்) ஆயிற்று என்க. அதாவது சிறப்பு வாதக் கொள்கை இது. பொருளின் அளவு மற்றும் குணம் ஆகிய இரண்டுமே ஒரு வேதி வினை நடைபெற அவசியம் என்பதில் மதம் எங்கே இருக்கிறது?
வேதி இயக்கவியல் (கெமிக்கல் கைனட்டிக்ஸ்) படித்தவர்களுக்குத் தெரியும் எந்தவொரு வேதி வினை நடப்பதற்கும் போதிய பொருளும் தரமும் தேவை. அறிவியல் தேட்டத்தின் தொடக்கம் இது அல்லவா?
காலத்தோடு ஒத்து கருத்தான புதுச் சிந்தனைகள் மலரட்டும். அறிவியல் வளரட்டும். தமிழ் தொடரட்டும். மொழி அறிஞர்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். அழியும் மொழிகள் பட்டியலில் இடம்பெறாமல் காக்க இது ஒன்றே வழி.
""யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' (அகநானூறு 149) என்று எருக்காட்டூர் தாயங் கண்ணனார் பாடுகிறாரே. சேர நாட்டுச் சுள்ளி ஆற்றினில் ரோமானியர் கப்பலில் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றனர். யவனருடன் பேரம் பேசி உரையாடி அல்லவா வணிகம் செய்து இருக்க வேண்டும்? அப்படியானால் தமிழின் ஒலிவடிவத்திலும் புதிய சொற்கள் நடைமுறையில் இயல்பாக ஊடுருவி இருக்கும்.
இத்தனைக்கும் கன்னித் தமிழ் மாறாமல் காப்போம் என்று யாரேனும் குறுக்கிட்டுத் தடுத்து இருந்தால் கணினித் தமிழ் என்னவாகும்? சிந்துபாத்தின் லைலா மாதிரி தமிழ்த்தாய், பெட்டிக் குறளையாகவே முடங்கி இருப்பாள்.
அறிவியல் தமிழில் அவசரத் தேவைகளும் நடந்துள்ளன. சொல்லப்போனால், மின்னணு போன்ற பல கலைச்சொற்கள் கொஞ்சம் துல்லியம் அற்ற வகையிலும் உருவாக்கப்பட்டு விட்டன. இன்று மின்சாரம் தாங்கிய அணு ஒன்று மட்டுமா? பாரியான்கள், ஹேட்ரான்களில் எத்தனையோ உள்பிரிவுகள், நுண்துகள்கள், இம்மிகள். நேர் அல்லது எதிர் மின் அணு - அயனி என்பதே இயற்பியல் உண்மை.
ஆங்கிலத்திலும் இதே சிக்கல் உண்டு. "பிரிக்கப்பட முடியாதது' என பொருளில் "அ - டோமாஸ்' என்கிற கிரேக்கச் சொல் அடிப்படையில் "ஆட்டம்' (அணு) பிறந்தது. இன்று அணுவைப் பிரிக்கவும் பிளக்கவும் முடிகிறதே!
அவ்வாறே, காகிதத் துணுக்குகளைக் கவர்ந்து இழுக்கும் அரக்கு, லத்தீனில் கிரேக்கத்தில் "எலக்ட்ரா'. பிரகாசம் என்று பொருள். இதுவே மின் கவர்தலைக் குறிக்கும் கலைச்சொல். "எலக்ட்ரிசிட்டி' (மின்சாரம்), "எலக்ட்ரான்' (மின்னணு) ஆகி, மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) துறையும் ஆயிற்று. அன்றைய அரக்கு எங்கே? நவீன எலக்ட்ரானிக்ஸ் எங்கே?
ஒருமுறை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தினுள் கழிவறைக்கான இந்தி வாசகப் பலகை கண்டேன். "ப்ரசாதன் கக்ஷ'. அது என்ன, பிரசாதம் தரும் அறையா? பிறகுதான் புரிந்தது, கோயில் பிரசாத(ம்) வேறு. இச்சொல்லில் "த' என்பது இந்தியின் மூன்றாவது வர்க்க எழுத்து. கழிவறைச் சொல்லுக்கோ நான்காவது வர்க்க எழுத்து.
இன்னொரு "நல்ல' சுவையான சொல். நல்ல மிளகு, நல்லெண்ணெய் எல்லாம் உடலுக்கு நல்லவைதாம். அது என்ன, நல்ல பாம்பு? பஞ்சாமிர்தமா தருகிறது? உண்மையில் தெலுங்கு மொழியில் "நல்ல' என்றால் "கரிய' என்றே பொருள். நெடுநல் (நீண்ட இருள்) வாடை, நெடுநல் (நெடிய கரிய) யானை போன்ற சங்க காலக் கலைச்சொற்களுக்கும் தவறான பொருள் கொள்வானேன்?
"பொன்னிக் கரை கண்ட பூபதி' கட்டிய காவிரியின் வட கரைக்கு "கரிகாலக் கரை' என்பதே வழக்கு. கரிகால் சோழன் என்ற பெயரின் அடைமொழியுமே நாம் கொடுத்ததுதான். ""செல்குடி நிறுத்தப் பெரும்பெயர் கரிகால் வெல்போர்ச் சோழன்'' (அக நானூறு -141) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இடையில் "வெல்போர்' ஏன்? அப்படியானால் கரிகால் தனி உரிச்சொல்லோ? கருத்த கால் உடையவன் என்று சொல்லிப் பழகிவிட்டோம்
.
"கரி-கால'(ன்) என்பது ஒரு பொருள் குறித்த இருமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். கால(ô) என்றால் வடமொழியில் கரிய என்று பொருள். இன்றைய கேரளத்தின் மல-"பார்' (பஹார் என்றால் வடமொழியில் மலை), நடு - "சென்டர்' (ஆங்கிலத்தில் மையம்), "கேட்' - வாசல் போன்ற இருமொழிச் சொற்றொடர் அது.
ஆக, ராப்பாடி குடுகுடுப்பைக்காரன், "நல்ல காலம் பொறக்குது' என்று அச்சுறுத்துகிறான். ""உனக்கு கெட்ட காலம் பிறக்கிறது. அதனால் எனக்கு பிச்சை இட்டால் நன்மை உண்டாகும்'' என்கிறானோ என்னவோ? அதுவும் சரியாகத்தான் இருக்கும்.
பூமத்திய ரேகையில் உட்கார்ந்துகொண்டு ""சூரியன் உதிக்கும் திசை கிழக்கு'' என்று பாடம் சொல்லித் தரலாம். துருவப் பிரதேசங்களில் ஆறுமாத காலம் சூரியன் உதிப்பதே இல்லை. உதிக்கிற திசை கிழக்கும் அல்ல. ஆசிரியர் சொல்லித் தந்த முதல் வகுப்புப் பாடத்தை நம் நாட்டில் மட்டும் நெட்டுரு போட்டு ஒப்பிக்கலாம். மதிப்பெண் கிடைக்கும்.
அதிலும் வட துருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் மார்ச் 19 அன்று அடிவானில் சூரியன் உதிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உயர்ந்து எழும். ஜூன் 21 அன்று மட்டும் தலை உச்சிக்கு நேர் மேலாக நிற்கும். செப்டம்பர் 24 அன்று அடிவானில் மறையும். அவ்வளவுதான். அங்கு உதயமும், அஸ்தமனமும் எல்லாம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டுமே.
அதாவது வட துருவத்தில் பகல் என்பது ஆறு மாத காலம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்காதா பின்னே?
அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. மறுபரிசீலனைக்கு மடை திறந்து விடுவதே அறிவியல் சிந்தனையின் ஆரம்பம்.
வளர்ந்துவரும் புதிய துறைகளுக்கு ஏற்ப மொழியியலாரும் தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு துறைசார் அறிஞர்கள் மட்டும் மண்டிக் கிடக்கும் தனி அறைக்குள் கதவையும் உள்தாள் இட்டு, பல்துறை அறிவுக்கும் "நவதாள்' பூட்டுப் போட்டு அவஸ்தைப்படுவானேன்?
மொழி என்பது வெறும் ஒலியா, எழுத்தா? தொன்று தொட்டு பட எழுத்து, குறியீட்டுத் தமிழி (பிராமி), வட்டெழுத்து, கண்ணெழுத்து தொடங்கி, கணினி வரை தமிழின் வரிவடிவம் மாறி வந்திருக்கிறது. நெகிழும் மொழியே நிலைக்கும். இலக்கணம் என்ற பெயரில் இறுக்கிப் பிடித்தால் நொறுங்கிப் போகும்.
"கொங்குதேர் வாழ்க்கை' என்று சொன்னால் அந்நாளில் மன்னவருக்கே புரிந்தது. இன்று இது என்ன பங்குச் சந்தைக் குறியீடா என்றுதான் நம் பிள்ளைகள் கேட்கிறார்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தமிழ் முக்கியம். இன்று நடக்கும் தொழில்நுட்ப யுகத்தின் அறிவியல் தமிழே கால வெள்ளத்தில் தமிழ் மரபாக நிலைக்கும். இதுவரை பதிவாகாத அறிவுச் செய்திகளைத் தமிழில் முன்வைக்க வேண்டும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளுக்கு அப்பால் நவீனத் தொழில்நுட்பங்களையும், அறிவியல் சிந்தனைகளையும் உள்வாங்கிய புதிய இலக்கணங்களும் காலத்தின் கட்டாயம். அதனால் மொழி அறிஞர்களும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மொழி வளர்ச்சி என்பது வெவ்வேறு காலச் சூழலில் உள்வாங்கிய கலைச்சொற்கள், சிந்தனைகள், கருத்துகளின் சேர்மானங்களைப் பகுப்பாய்வு செய்வதும் ஆகும். வடசொல், திசைச்சொல், திரிசொல் எனப் பல்வேறு கலைச்சொற்களும் காலம் காலமாக தமிழில் கலந்தன. மொழியும் நிலைத்து வளர்ந்தது.
புரட்சிக் கவியே "தமிழ் வளர்ச்சி' வேகத்தில் தகத்தகாயத் தமிழை "(ஸ்)தாபிக்கிறாரே'!
நன்றி :- தினமணி, 29-07-2013

0 comments:
Post a Comment