முத்துப் புலவர் அரியகுட்டி
நாட்டார் பாடல்கள் எனப்படும் பாடல்களை இயற்றியவர் அரியகுட்டிப் பாவலர். இவர் தந்தையார் பெயர் நாகப்பர். இவர் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு அயலில் வாழ்ந்தவர். அரிவுவெட்டுக் காலங்களில் பாடப்படுவதற்கான பாடல்களை இயற்றியுள்ளார். காதுக்கு இனிமை தருவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.
இவர் தான் இயற்றிய பாடல்களை 1937ம் ஆண்டு தொகுத்து ஒரு நூல் வடிவில் தொகுத்துத் தந்துள்ளார். இந்தப் பாடல்கள் இன்றும் வன்னிப் பிரதேச வயல்களில் நெல் அறுவடையின் போது பாடப்படுகின்றன.
இவர் இயற்கையிலேயே புலமை நிறைந்தவராக விளங்கினார். யாரிடமும் இலக்கணம் கற்றுக்கொள்ளாத இவர் செவிவழி கேட்ட ஞானத்தைக் கொண்டு பாடல்களை எமக்குத் தந்துள்ளார்.
கார்சேரும் சோலைக் கதிரையின் வேலாயுதர்மேல்
சீர்மேவும் பல்லினிசை செப்பவே
கூர்சேரும் கொம்பு ஒருகைக் கொண்டதொரு
குடவயிறனே அரியின் ஐந்துகர தும்பிமுகன் காப்பு
என இவரின் பாடல் ஆரம்பிக்கின்றது.
0 comments:
Post a Comment