Home » » அண்ணாவின் முதல் பிழை ! கலைஞரின் அடுத்த பிழை !- தென்னன் மெய்ம்மன்

அண்ணாவின் முதல் பிழை ! கலைஞரின் அடுத்த பிழை !- தென்னன் மெய்ம்மன்






செம்மொழித் தமிழுக்கு முண்டக உபநிடதம்தான் முகவரி தர வேண்டுமா என்பது முதல் வினா ?

”சத்யமேவ ஜய” என்றால் “வாய்மையே வெல்லும் “ என்பது சரியான பொருள்தானா? என்பது அடுத்த வினா ? 



”சத்யமேவ ஜயதே ந அன்ரிதம்” 
( முண்டக உபநிடதம் 3.6.1. பக்கம் / இராமகிருட்டின மடம் வெளியீடு )

satyameva jayate nānṛtaṁ
satyena panthā vitato devayānaḥ |
yenākramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṁ nidhānam ||[3]

 ( விக்கிபீடியாவிலிருந்து )

என்ற முழு வரிக்கும் வாய்மையை ஒழுங்கற்ற வழிகளில் வெல்ல முடியாது என்பதே பொருள். அதாவது “சத்யமேவ - ந - ஜதே - அன்ரிதம் - என்பதே பொருள் கொள்ளும் முறை. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நான்கு வரிகளைக் கொண்ட அந்தப் பாடலில் பரமம் - நிதானம் - சத்யம் - அதாவது மேலானதை, அமைதியானதை, வாய்மையை ஒழுங்கற்ற வழிகளில் வெல்ல முடியாது என்பதே அதன் முழுச் செய்தி.

”சத்ய மேவ ஜயதே” என்பதை “ வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும்படி, வடமொழி இலக்கணப்படி எழுத வேண்டுமானால், “சத்யைவ ஜயதே” என்றுதான் எழுத வேண்டும்,

மாறாக ”சத்ய அம் ஏவ ஜயதெ” என்று எழுதிப் பொருள் கொள்ள வேண்டுமாயின் “ வாய்மையை மட்டுமே வெல்லுகிறது” என்பதே பொருள் ஆகிறது வாய்மையை எது வெல்கிறது என்பதே நமது இன்றையக் கேள்வி ? 

இவற்றைத் தவிர்த்துவிட்டு ' தூய்மையே வெல்லும்' என்று பொறிக்கலாம்.

நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில் மானமும் மற உணர்வும் உயிர் கொடுக்கும் ஈகமும் செறிந்த உண்மைத் தமிழர் இருக்கவே செய்கின்றனர்.

வாழ வந்த வந்தேறிகள் பொய்யம்பின் கூர்ங்க்குறும் புழுகுக் குப்பிகள்போல் அப்பிக்கொண்டு முதன்மை நிலைபெறத் துடிக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் உண்மை வரலாற்றைப் பதிவு செய்யும் நினைவிடமாக அமைய மூன்று செயல்கள் தேவை.

01. வட்டாரத் தனித்தன்மைப் பாதுகாப்புச் சட்டம்.

02. அரசுக் கட்டங்க்களை வெளிநாட்டவர் வகுதி செய்யக் கூடாது என்ற சட்டம்.

03. தமிழக அரசு முத்திரையின் பெருமையைக் காப்பது. அதிலுள்ள வாய்மையே வெல்லும் என்பதை நீக்கிவிட்டு தூய்மையே வெல்லும் என்று பொறிப்பது.

"வான் தடவி முகில் முட்டும் கலைகள் எங்கே ?" தூய்மை எங்கே என்ற பெருஞ்ச்சித்திரத் தேடல் ஓர் அழகிய சட்டப்பேரவைக் கட்டிட வடிவைப் பெற்றுத் தருமானால் பெருஞ்சித்திரனாரின் கனவு நனவாகும்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger