Home » » யாழ்ப்பாணத்து சுவாமி – வியாபாரிமூலை சி.வே.அருளம்பலம்

யாழ்ப்பாணத்து சுவாமி – வியாபாரிமூலை சி.வே.அருளம்பலம்

யாழ்ப்பாணத்து சுவாமி – வியாபாரிமூலை சி.வே.அருளம்பலம்

இந்தியாவில் புதுவையில் வரகவி சுப்பிரமணிய பாரதியார் வர்ணித்த ஜகத்தினிலோர் உவமையில்லா யாழ்ப்பாணத்து சுவாமி (யாழ்ப்பாணம், அல்வாய் வடக்கு, வியாபாரிமூலை சி.வே.அருளம்பலம்) அவர்களது சுருக்கமான வரலாறு.
 
1880 : யாழ்ப்பாணம் மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயச் சேர்வு இடாப்பின் படியும், சுவாமிகள் தம் பெற்றோர் மீது பாடிய தோத்திரப் பாடற் பிரசுரத்தின் படியும், சுவாமிகளது கையெழுத்துப் பிரதியின் படியும் சுவாமிகள் 07.05.1880 இல் பிறந்ததாக கொள்ள முடிகிறது. சுவாமிகளது தாயார் வதிரியை சேர்ந்த இலட்சுமி அம்மாள், தந்தையார் வியாபாரிமூலையை சேர்ந்த சின்னையா. வேலுப்பிள்ளை சுவாமிகளது

உடன் பிறந்த சகோதரி பொன்னாச்சி. தந்தையார் சுவாமிகளது சிறுவயதில் காலமாகிவிட்டார். இலட்சுமி அம்மாள் மறுமணம் புரிந்து சின்னப்பிள்ளை, அன்னப்பிள்ளை என்பவர்களைப் பெற்றார். இவர்கள் இருவரும் சுவாமிகளது உடன்பிறவாச் சகோதரிகள்.
 
1894 : சுவாமிகள் சிறுவயதில் தந்தையின் தாயாரான காளியம்மையின் ஆதரவில் வியாபாரிமூலையில் வளர்ந்தார். யாழ்ப்பாணம் மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் 23.10.1894 வரை கல்வி கற்றார். சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
 
1910 : இளமையில் விவசாயம் செய்த சுவாமிகள் திரு.த.பரமுப்பிள்ளை அவர்களின் கம்பளைக் கடையில் அவருக்கு உதவியாளராக இருந்தார். பின் மட்டக்களப்பில் வியாபாரம் செய்து நட்டமடைந்தார். திருவருள் கூடவே நிஷ்டை கற்க சிதம்பரம் சென்றவர் நாகபட்டணத்து நாகை நீலலோசனி அம்பாள் ஆலயத்தில் தங்கினார். நீலலோசனி அம்பாளின் தரிசனப்பிரகாரம் அம்பாள் முன்பாக நான்கு ஆண்டுகள் நிஷ்டையில் இருந்தார். நிஷ்டை கைகூடியது. சித்தரானார்.
 
1914 : சுவாமிகள் நாகையில் “நாகப்பட்டணம் சுவாமி, நாகை மௌன சுவாமி, மௌனகுரு, யாழ்ப்பாணத்துச் சுவாமி, பூந்தோட்டத்து ஐயா” எனப்பலராலும் அழைக்கப்பட்டார்கள். இவர் தலயாத்திரையின் பொருட்டு வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயவரம், பாண்டிச்சேரி (புதுவை) ஆகிய இடங்களுக்குச் சென்றார். புதுவையில் தங்கினார்.
 
1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டுவரை வரகவி சுப்பிரமணிய பாரதியார் புதுவையில் வாசஞ்செய்தார். குவளைக்கண்ணன் சுவாமிகளுடன் நட்புப்பூண்டிருந்தார். புதுவையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை குவளைக்கண்ணன் சுவாமிகள் பாரதியாரிடம் அழைத்துச் சென்றார். பாரதியார் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் மௌன நிலையில் ஈர்க்கப்பட்டார்.
 
பாரதியார் பாடல், பாரதி அறுபத்தாறு எனும் பதியில், ( முதல் வரி )
 
1. குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்)
ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன் 

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger