சந்தியா பதிப்பகம்
57-53-வது தெரு, அசோக் நகர்,
சென்னை-600 083
044 / 2489 6979 - 5585 5704
தமிழக எல்லைப் பரப்பைக் காத்திட்ட தலைமகன், தமிழகத்தின் முக்கிய பகுதிகளை ஒருபுறம் கேரளத்தவரும், இன்னொருபுறம் ஆந்திரத்தவரும் எடுத்துக்கொள்ளத் துடித்தபோது பதறியவர் ம.பொ.சி. மட்டும்தான்.
எங்கு இருந்தால் என்ன இந்தியாவிற்குள்தானே இருக்கப்போகின்றது என்று காங்கிரசாரும், இதை எல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் திராவிடநாடு கேட்கிறோம் என்று திராவிட இயக்கத்தவரும் காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது இப்போது இருக்கும் தமிழகத்துக்காக அப்போது போராடிய வாதாடிய முக்கியமானஆளுமை ம.பொ.சி.
தனது படைக்கலனாகக் கொண்டு ம.பொ.சி. தமிழக மக்களை விழிப்புணர்வூட்டச் செய்தனவற்றுள், தமிழ் முரசு ( 1946-51 ), தமிழன் குரல் இதழ் படைப்புகளை மட்டும் மூன்று தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளார் தி.பரமேசுவரி. இவர் ம.பொ.சி.யின் பேத்தி. இளமைக்காலத்தில் பள்ளியில் படிக்கும்போதே பரமேசுவரிதான் என் வாரிசு என்ற சிலம்புச் செல்வரின் கூற்றினை இதன் மூலம் மெய்ப்பித்திருக்கின்றார் என்பதே உண்மை.
ம.பொ.சிவஞானம் என்று சொன்னால் , சிவன் நினைவுக்கு வரமாட்டார் அவர் தமிழ்தான் நினைவுக்கு வரும் என்பது பாரதிதாசனின் கூற்று. அச்சகம் ஒன்றில் அச்சுக் கோப்பவராக வேலைக்குச் சேர்ந்த ம.பொ.சி.தன்னுடைய எழுத்துக்களும் பலநூறு புத்தகங்களாக வெளிவரும் என்று தொடக்க காலத்தில் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்,
தமிழினம் தனது தனது தனி நலன்களுக்காகப் போராட, புரட்சிப் பாதையில் படையெடுத்துவிட்டது. அந்தப் படையெடுப்பை எத்ர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது. வாழ்ந்தாலும் வளர்ச்சிக்கு வசதி இருக்காது.ஆகவே வயிறு தமிழகத்துக்கு, வாய் மலையாளத்துக்கு என்ற நிலையை விட்டொழித்து, வயிற்றுக்கு உணவளிக்கும் தமிழகத்தின் உங்கள் வாய்கள் பேசட்டும். இதுதான் ம.பொ.சி.யின் தமிழைப் படிக்கும்போது எழுந்து நிற்கத்தூண்டும் மொழிநடை.
பத்ம பூஷன், பாரத ரத்னா பட்டங்கள் சுதந்திர இந்தியாவில் வழங்கப்பட்டபோது அவற்றைக் கடுமையாக எதிர்த்து எழுதியிருக்கிறார்.,ம.பொ.சி. காந்தியமும் காங்கிரசும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகள் இன்றைக்கும் அப்படியே பொருந்துகின்றன. ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எழுத்தாளர் சொ.ம.வெ. எழுதிய கட்டுரையில், இலங்கை பற்றிய எல்லா முடிவுகளும் சென்னை அரசாங்கத்தின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும் என்ற குறிப்பைப் படிக்கும்போது ஏக்கமே ஏற்படுகிறது.
நடிப்பு டி.கே.ஷண்முகம், இசை எம்.எம்.தண்டபாணி தேசிகர், நாட்டியம் வழுவூர் இராமையாப் பிள்ளை, இலக்கியம் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை என பல ஆளுமைகளைத் தேடித் தேடி தனது இதழில் எழுத வைத்துள்ளார் ம.பொ.சி.
காலங்கள் கடந்தும் வரலாற்றுக்காகவும், தமிழுக்காகவும் பல தடவைகள் படிக்கத் தூண்டுகிறது. நன்றி :- புத்தகன், அலமாரி
--------------------------------------------------------------------------------------------------------------
ம.பொ.சி-இன் இரங்கற் கூட்டம் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அஞ்சல்- தணிக்கை வளாகத்தில் எமது முயற்சியால் நடத்தப்பட்டது. இதுவே தமிழகத்தில் நிகழ்ந்த முதல் இரங்கற் கூட்டமாகும்.எடுத்துக் கொண்ட தலைப்பு “என்றும் தமிழாய் வாழும் ம.பொ.சி.”
மக்கள் எழுத்தாளர் சு.சமுத்திரம், தமிழ்நாடு பாட நூல் குழுவைச் சேர்ந்த முனைவர் இ.கோமதி நாயகம், தமிழக ஆசிரியர் யுனெஸ்கோ கழகத்தைச் சேர்ந்த முனைவர் இரா.முத்துக் குமாரசாமி ஆகியோர் பங்கேற்றனர். திருமதி பொன்மணி வைரமுத்து எழுதித்தந்த கவிதையும் வாசிக்கப்பட்டது. தற்பொழுது மேற்படி கவிதை கைவசம் இல்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
தி.பரமேசுவரி சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
என்ற தலைப்பில் எழுதிவரும்
வலைப்பூ முகவரி
ம.பொ.சி.குறித்த தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்.
சமூகப் பிரச்சனைகளைக் கையாள
அவர் பயன்படுத்தும் வலைப்பூ
0 comments:
Post a Comment