"நான் ஆத்மாவே" என்று உணரச் செய்வதே சித்தநெறியின் சாரம்.
"நான் உண்மையில் இந்த சரீரம் அன்று;
இந்த மனமும் அன்று;
என்னைப் பொறுத்தவரையில் பாவமும் இல்லை; புன்ணியமும் இல்லை.
அவ்விதமாயின் உண்மையில் நான் யார் ?
அகண்ட சச்சிதானந்தமாய் என்றும் எதிலும் நிலைபெற்று விளங்கும் ஆத்மாவே நான்.
இந்த ஆத்மாவே எல்லாச் சரீரங்களிலும் தன்னைத் தோற்றுவிக்கிறது'
இதனை உணர்ந்தவனே ஜீவன் முக்தன்.
"நெஞ்சிற்பொரு எடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
நேசத்தோடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட வாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திதிருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே"
தன் இதயமாகின்ற புருவ மையத்தில் பரம்பொருளை அனுபவித்தபின் பகையில்லை. காம ஆசையில்லை. ஆணவமும் வீம்பும் கருகி விடுகின்றன. வாயால் சொல்லிக் கையால், தலையால், வ்பணங்குகின்ற மந்திரங்க்களும் வேத பாராயணங்க்களும், சடங்க்குகளுக் வீண் எனும் தெளிவேற்படுகிறது.
பிராணன் உள்ளில் அடங்க்கினால் ஐம்பூதங்களும் தனக்குள் அடங்க்குகின்றன. ஆசைத் தொடர்பு அற்று விடுகிறது. பஞ்ச்சபூதங்க்களாலாகிய உடல் பற்றிய உணர்வும் அற்று விடுகிறது. ஞானசாகரத்தில் மூழ்கி இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் அம்மனத்திற்கு ஏது சலிப்பு ?
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த ஞானத்தாழிசை ( 6-ஆம் பதிப்பு )
விளக்கவுரை :- சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி
சங்கராஸ்ரமம்
ஐந்தருவி
குற்றாலம் ( P.O. )
திருநெல்வேலி மாவட்டம்
627 802
------------------------------------
தொலைபேசி :- 04633-291166
0 comments:
Post a Comment