Home » » முதுமலை மாயாற்றில் வரலாறு காணாத வெள்ளம் !

முதுமலை மாயாற்றில் வரலாறு காணாத வெள்ளம் !

முதுமலை புலிகள் காப்பகம், எம்.ஜி.ஆர்.டவர் பகுதியிலுள்ள 
மாயாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கரைபுரண்டு ஓடும் மாயாறு.
முதுமலை புலிகள் காப்பகத்தில் பாயும் மாயாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.


தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் வறண்டு கிடந்த மாயாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தெப்பக்காடு பகுதியில் ஆற்றங்கரையிலிருந்து வனத்துறையின் கிணறு, நீரேற்று நிலையம், பார்வையாளர்கள் மாடம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே போவதால் வெள்ளிக்கிழமை காலை ஓரு காட்டெருமை, மான் உட்பட வனவிலங்குகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதியிலிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் புலிகள் காப்பகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.டவர் அருகிலுள்ள மாயாறு நீர்வீழ்ச்சி, வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போகும் அளவுக்கு அப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.                                                                                                                              

நன்றி :- தினமணி, 03-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger