Home » » இதய ரத்தக் குழாயில் முழு அடைப்பு: பை-பாஸ் இல்லாமல் நவீன சிகிச்சை

இதய ரத்தக் குழாயில் முழு அடைப்பு: பை-பாஸ் இல்லாமல் நவீன சிகிச்சை

சென்னை அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில் 
இதய ரத்தக் குழாய் நவீன சிகிச்சை 
கருத்தரங்கை முன்னிட்டு 
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட
 மருத்துவமனையின் இதய மருத்துவ இதழுடன்
 (இடமிருந்து) டாக்டர்கள் மதுசங்கர், அப்ரஹம், ஆனந்த் ஞானராஜ், மசாஹிசா யாம்னே (ஜப்பான் நிபுணர்), சத்யபாமா.

இதய ரத்தக் குழாய் முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு ஜப்பான் மருத்துவ நிபுணர் மசாஹிசே யாம்னே உதவியுடன் சென்னை அயனம்பாக்கம் அப்பல்லோ இதய மருத்துவ நிபுணர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை இதய மருத்துவ நிபுணர்கள் ஆனந்த் ஞானராஜ், மதுசங்கர், இயக்குநர்கள் சத்யபாமா, அப்ரஹம் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஜப்பானியர்களின் அச்சம்
 
உடல் முழுவதுக்கும் ரத்தத்தை விநியோகிக்கும் இதயம் செயல்படத் தேவையான ரத்தத்தை மூன்று கரோனரி ரத்தக் குழாய்கள் எடுத்துச் செல்கின்றன. இதய கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நிலையில் அடைப்பின் சதவீத அளவுக்கு ஏற்ப ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அல்லது இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை குறித்து இதய மருத்துவ நிபுணர்கள் தீர்மானிக்கின்றனர். ஆனால், ஜப்பான் நாட்டினர் இதய கரோனரி ரத்தக் குழாயில் முழுமையான அளவில் (100 சதவீதம்) அடைப்பு ஏற்படும் நிலையில் மார்பைத் திறந்தால் தங்களது உடலை விட்டு ஆன்மா சென்றுவிடும் எனக் கருதி இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதில்லை.

இதையடுத்து ஜப்பானில் பை-பாஸ் அறுவைச் சிகிச்சையின்றி முழு அடைப்பை நீக்கும் வகையிலான சிறப்பு கதீட்டர் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நவீன உத்திகளுடன்கூடிய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை முறை கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.

ஜப்பான் இதய மருத்துவ நிபுணர் மசாஹிசே யாம்னே இந்த நவீன சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உதவியுடன் அம்பத்தூர் அருகே உள்ள அயனாம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில் முழு இதய ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது ஆண் நோயாளி மற்றும் 29 வயது ஆண் நோயாளிக்கு வெள்ளிக்கிழமை ஆஞ்சியோபிளாஸ்ட்டி நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளும் நலமாக உள்ளனர்.

இந்த நவீன சிகிச்சை முறை விடியோ மூலம் விளக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள அப்பல்லோ குழுமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இதய மருத்துவ நிபுணர்கள் பலன் அடைந்தனர்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.                                                                                                                                    

நன்றி :-தினமணி, 03-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger