அம்பலவாணக் கவிராயர்
இவர் சீகாழி அருணாசலக் கவிராயரின் மகன். அறப்பள்ளீசுர சதகம் பாடியுள்ளார்.
சுப்பிரமணியக் கவிராயர்
இவர் திருக்கடவூர் கோயிலில் ஓதுவாராக விளங்கியவர். திருக்கடவூர் புராணம், திருக்கடவூர் உலா, மயிலைக் கோவை, மயிலை அந்தாதி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
உடுமலைப்பேட்டை கந்தசாமிக் கவிராயர்
இவர் கம்பராமாயணம் - ஆரணிய காண்டத்திற்கும், தமிழறிஞர் அரசஞ் சண்முகனார் இயற்றிய மாலைமாற்றுக்கும் உரை எழுதிப் பதிப்பித்தவர். அரிமழ தலபுராணம் பாடியுள்ளார்.
சுவாமி கவிராயர்
இவர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். "பொதிகை நிகண்டு' என்ற நூலை இயற்றியுள்ளார்.
கந்தசாமிக் கவிராயர்
வீராச்சி மங்கலத்தில் (கொங்கு மண்டலம்) வாழ்ந்தவரான இவர், சின்னக் கருப்பண்ண கவிராயரின் மகன். "வேளாளர் புராணம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.
நன்ரி :- தமிழ்மணி, தினமணி ,01-09-2013
0 comments:
Post a Comment