சிரித்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரித்திரன் | |
---|---|
இதழாசிரியர் | சி. சிவஞானசுந்தரம் |
துறை | நகைச்சுவை |
வெளியீட்டு சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | 1963 |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | {{{இதழ்கள் தொகை}}} |
வெளியீட்டு நிறுவனம் | சி. சிவஞானசுந்தரம் |
நாடு | இலங்கை |
வலைப்பக்கம் | [] |
சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த "மாத்திரைக் கதைகள்" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை இவற்றுள் சில.
அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகியன புகழ் பெற்றவை.
0 comments:
Post a Comment