1. எச்சில் :-
வியப்பினைத் தருகின்றதா? சிறிது சிந்தித்தால் எளிதில் புரியும். அதிகாலையில் நாம் அருந்தும் காப்பியில் கலக்கப்படும் பால் எப்படிக் கிடைக்கின்றது ? கன்றுக்குட்டி தாய்ப் பசுவின் மடிக்காம்புகளில் முட்டி முட்டிப் பால் குடித்தபின் கிடைக்கும் மிச்சமுள்ள பாலைத்தானே நாம் பயன்படுத்துகின்றோம். விரும்பி அருந்தும் பாலில் உள்ள எச்சில் புனிதமானதுதானே ?
2. வாந்தி:-
பல்வேறு மலர்களினின்றும் சேகரிக்கும் தேனைத்தானே, தேனீக்கள், வாந்தி எடுத்துக் கூடுகளாகக் கட்டுகின்றன. அந்தத் தேன் கூடுகளிலிருந்து எடுக்கப்படும் தேன் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதல்லவா? அவற்றை மனிதன் விரும்பித்தானே ப்யன்படுத்துகின்றான். இவ்வாறு மனிதன் விரும்பிப் பயன்படுத்தும் தேனீக்களின் எச்சில் புனிதம் தானே?
3. இறந்தவற்றின் உடை :-
பட்டுத்துணிகள் நெய்வதற்கு பட்டுப்பூச்சிகள் முக்கிய காரணம். நன்கு வளர்நத பட்டுப் புழுக்கள் தங்களைச் சுற்றி, அவைகளின் வாயிலிருந்து வரும் ஒரு விதமான நூலினால் கூடுகளை அமைக்கும். அந்த நூல்களே பட்டு நூல்கள். அக்கூடுகளிலிருந்து பட்டுப்பூச்சிகள் வெளிவரும் முன்னரே அவற்றிலிருந்து பட்டினை நாம் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதாவது பட்டுப்பூச்சிகளைக் கொன்றால்தானே பட்டுநூல் கிடைக்கும்?
பட்டுப் புடவைகளில்தான் எத்தனை எத்தனை விதங்க்கள்; எத்தனை எதனை கடைகள். திருமணம் மற்றும் விழாக்காலங்க்களில் பட்டாடைகள் மனித வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன. உயிரைக் கொன்று அதனால் தயாரிக்கப்படும் பட்டாடைகள் தேவையில்லை என்போருக்கு இது பொருந்தாது. ஆனால் எப்படியோ பட்டாடைகள் மானுட வாழ்வில் அழியா இடம் பெற்றுவிட்டன. மிகச் சாதாரனக் குடும்பங்களில் கூட 50,000/- ரூபாய் மதிப்புள்ள முகூர்த்தப் பட்டுச் சேலைகள் வாங்குவது தற்காலத்தில் சர்வசாதாரணமாகிவிட்டது. உடுத்திய ப்டவையை காற்றாட உலர்த்திவிட்டு நீரில் நனைக்காமலேயே பல்லாண்டுகள் பயன்படுத்தும் கலையைப் பெண்கள் கடைப்பிடிப்பதும் வழக்கமாகிவிட்டது. தலைமுறை கடந்தும் முகூர்த்தச் சேலைகள் பயணிக்கின்றன. இறந்த பட்டுப் பூச்சிகளின் நூல்கொண்டு தயாரிக்கப்படும் பட்டாடைகளை மானுடம் பெரிதும் நேசிக்கின்றது. எனவே இறந்தவற்றின் உடையும் புனிதம்தானே ?
நேற்று விநாயகர் சதுர்த்தி. சாலையோரக் கோவிலொன்றில் ஒரு ஆன்மிகப் பேச்சாளர் பேசிய உரையே ஆதாரம். ஏற்றுக்கொள்ளச் சற்றுக் கசப்பாக இருந்தாலும் உண்மை- உண்மதானே ?
0 comments:
Post a Comment