திருவள்ளுவர் மாலையில்
திருவள்ளுவரைச் சிறப்பிக்கும்
தொடர்களில் சில.:-
01. தெய்வத் திருவள்ளுவர்
02. திருத்தகு தெவத் திருவள்ளுவர்
03. தேவர் திருவள்ளுவர்
04. தேவிற் சிறந்த திருவள்ளுவர்
05. வாலறிவன் வள்ளுவர்
06. வாய்மொழி வள்ளுவர்
07. தமிழ்த் திரு திருவள்ளுவர்
08. தெய்வத் திருமலர் ( குறள் )
"தெய்வம் யார்" என்று நமக்குக் காட்டியதாலும், வையத்துள் வாழ்வாங்க்கு வாழும் தெவமாக
விளங்குவதாலும் திருவள்ளுவரைத் தெய்வப் புலவர் என்கிறோம்.
சொல்லாட்சியால் காட்டும் தெய்வம் :-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். ( 50 )
ஐயப்படா அது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்புக் கொளல். ( 702 )
குடிசெயல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடி தற்றுத்தான் முந்துறும் ( 1023 )
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றுஆங்கு
ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை. ( 43 )
தெய்வம் தொழாஅள் கொழுநற்தொழுது எழுவாள்
"பெய்"எனப் பெய்யும் மழை. ( 55 )
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் ( 619 )
வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவன் மண்ணுறையும் தெய்வம். வானுறையும் தெவம் நமக்குத் தெரியாது. பிறர்மீது சந்தேகப்படாமல் அவரது உள்ளக் கிடக்கையை உணர்ந்து ஒத்துப் போவது தெய்வத் தன்மை.
'குடும்பத்தை மேலோங்கச் செய்வேன்' என்று பாடுபடுபவனுக்குத் தெய்வம் ( ஊழ் ) வரிந்து கட்டிக்கொண்டு வந்து வழிகாட்டும் அறிவாளிகள், பண்பாளர்கள் ( தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐந்து வழியில் உதவி செய்து கொண்டு வாழ்வது தலைமையான இல்லறம்.
இத்தகைய சிறப்புடன் விளங்கும் கணவனை மனைவி தெய்வம் என்று தொழுவாள். அவள் வானுறையுந் தெய்வத்தைத் தொழமாட்டாள். இவள் 'பெய்' என்னும்போது பெய்யும் மழைக்குச் சமம்.கணவன் போற்றும் தெய்வம். மனைவி உதவும் மழைத் தெய்வம்.
தாய் தந்தையரின் பிறவிக் கூறும், பிறந்து வாழும் இடமும், காலமும்தான் ஊழ். இந்த ஊழால் செய்ய முடியாததை உழைப்பு செயுது முடிக்கும். ஊழால் வந்த சர்க்கரை நோயை உடற் பயிற்சியாலும், காச நோயை மூச்சுப் பயிற்சியாலும் தீர்வு கண்டு பயன் பெறலாம்.
ஊழ் விளக்கம்
வெடித்துச் சொய்தறும் உளுந்தை "உந்தூள்" என்பர். குறிஞ்சிப்பாட்டு (65 ). மலைபடுகடாம் ( 113 ) எனவே, தாய் தந்தையரிடமிருந்து உந்தி ஊழ்ந்தது ஊழ்.
"இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று குறள் குறிப்பிடுகிறது. ( 650 )இதில் 'ஊழ்த்தல்' என்பது மலர்தல் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதனால் உயிருடலில் மலர்வது ஊழ் என்று தெரியவரும்.
காளை மாட்டுக் கொம்பு சப்பாத்தி முள்போல வளைந்திருந்தது என்னும் செய்தியை " உழுது ஊர் காளை ஊழ்கோடு அன்ன "சுவைமுள் கள்ளி" என்று புறநாநூறு ( 322 ) குறிப்பிடுகிறது. இதனால் ஊழ் என்பது முயற்சிக்கு வளைந்து கொடுக்கும் என்பது தெரிய வருகின்றது. இங்கு தெய்வம் என்பது ஊழ்.
தெய்வ அலை - தெய்வீக அலை
சித்தர் வழியில்
செங்கைப் பொதுவன்
புலவர், M.A.M.Ed.Ph.D.
வீடு 22, தெரு 13, தில்லை கங்கா நகர்,
சென்னை-600 061
-----------------------------------------------------
கிடைக்குமிடம்
வசந்தா பதிப்பகம்
மனை எண் 9, கதவு எண் 26, ஜோஸப் குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை-600 088
-----------------------------------------------------------------
தொலைபேசி எண் 044- 2253 0954, 2353 3667
------------------------------------------------------------------
நல் முயற்சிக்கு நன்றி.
ReplyDelete