சிந்தனைக்கும் அறிவுக்கும் வேலைதராமல்
வெறும் உணர்ச்சிகளையும், கவர்ச்சிகளையும் கலவையாக்கி 3 மணிநேரம் முடங்க
வைத்து மக்களை முட்டாளாக்கி வெளியேற்றும் திரைப்படத் துறையினர் மத்தியில்,
அவ்வூடகத்தின் வலிமையைக் கைப்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் படமாக்கி
வருணாசிரமத்தாலும், பண்ணையடிமைத்தனத்தினாலும் சேரி வாழ் மனிதனின் வாழ்வு
சின்னாபின்னப்படுவதை “ராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படத்தின் மூலம்
காட்சியாக்கி இருக்கிறார் திரைப்பட இயக்குநர் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.
1968இல் தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணி என்ற
ஊரில் நிகழ்ந்த கொடுமையான சாதிப்படு கொலையைப் பற்றி எத்தனையோ பேர்
புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த
அச்சம்பவத்தைக் காட்சிப்படுத்தி, நம் கண்முன் திரையிட்டுக் காட்டிக்
கண்கலங்க வைத்துவிட்டார் இயக்குநர் சாதியக் கட்டமைப்பில் கடைநிலையில்
இருக்கிறவன் தாழ்த்தப்பட்டவன். அவன் கூலியாகவே பிறந்து கூலியாகவே
மடிவதற்குப் பண்ணையடிமை முறைதான் காரணம். அதிலிருந்து அவர்கள் விடுதலையடைய
சாதி ஒழிந்த பொதுவுடைமையின் தேவையை வலியுறுத்தியுள்ளது நம்
பாராட்டுக்குரியது.
காலங்காலமாக
நிலவுடைமையாளர்களிடம் அடிமைப் பட்டுக்கிடந்த பண்ணையடிமைகளின் இரத்தக்
கண்ணீரையும் ஆதிக்கச் சாதியினரால் அவலப்பட்டுக் கிடக்கும் அவர்களின்
வாழ்க்கை முறையையும் திட்டமிட்டே மறைத்து வந்திருப்பதை இந்த ஆவணப்படம்
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தஞ்சை மாவட்டத்தின் விளைநிலங்களில் –
வெறும் 5 விழுக்காடு அளவுக்கே வாழும் நிலவுடமையாளர் களிடம் 30 விழுக்காடு
விளைநிலங்கள் உரிமைப் பட்டுக்கிடந்தது. விவசாயத்தோடு தொடர்பே இல்லா
தவர்களிடம், 55 விழுக்காடு விளைநிலங்கள் குத்தகைச் சாகுபடி முறையில்
சிறைப்பட்டுக் கிடந்தன..
பொதுவாகத் தஞ்சை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர்
விளைநிலைங்கள் கோயில்களுக்குச் சொந்தமாக உள்ளன. சாதாரண சாமான்ய மக்களுக்கு
ஒரு குழி நிலம் கூடச் சொந்தமில்லை. நிலவுடமை ஆதிக்கமும், வருணாசிரம
ஒடுக்குமுறையும் ஒன்றுசேர்ந்து இந்த மண்ணின் மைந்தர்களை எப்படி நடத்தியது
என்று அப்பகுதியில் வாழும் முக்கிய தலைவர்களும், உழைப் பாளி மக்களும்
கண்களில் நீர்வழிய வேதனையுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதைப் படமாக்கியி
ருப்பது வரலாற்று ஆவணங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
இப்போராட்டத்தின் தனிச்சிறப்பாகத்
தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும்
ஒன்றிணைத்து நடந்த இயக்கம் என்பதுதான் எனப் பெருமதிப்படுகிறார் இப்பட
இயக்குநர். தாழ்த்தப்பட் டோர் பண்ணையடிமைகளாகவும், பிற்படுத்தப்பட்டோர்
பண்ணையார் வீடுகளில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களாகவும், குத்தகை
விவசாயிகளாகவும் இருந்தனர். இந்த இரு வகுப்பு மக்களும் ஒருவர் வீட்டு
விழாவில் மற்றொரு வகுப்பார் கலந்து கொள்வது தஞ்சையின் தனிச்சிறப்பு.
1952ல் தமிழக அரசு தஞ்சாவூர் பண்ணையாள்
பாதுகாப்புச் சட்டம் என்று தஞ்சைக்கு மட்டும் அமலாக்கக் கூடிய ஒரு சட்டத்தை
அறிமுகப்படுத்தியது. அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இராஜாஜி,
‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்ற பேய்பிடித்து ஆட்டுகிறது.
அந்தப் போயிடமிருந்து விடுவிக்கத்தான் இந்த சட்டம்’ என்று பேசினார்
என்றால், பார்ப்பனர்களுக்கும் பண்ணையார்களுக்கும் கம்யூனிஸ்ட் என்றவுடன்
அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என் பதற்கு இது ஒரு சான்று.
அச்சட்டம் அமலுக்கு வந்தவுடன் பண்ணையாள்
முறை ஒழிந்து, தினக்கூலித் தொழிலாளர்களாக மாறியவுடன் வேலை நேரத்தை நிர்ணயம்
செய்கிற கோரிக்கை வலுக்கிறது. இரவு, பகல் பாராமல் உழைத் தவர்கள் இனிக்
குறிப்பிட்ட மணிநேரம் தான் உழைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள்.
பரந்து விரிந்து கிடந்த இலட்சக்கணக்கான விளைநிலங்களில் உழைத்த
ஆயிரக்கணக்கான கூலி விவசாயத் தோழர்களுக்கு வேலை நேரம் முடிந்த நேரத்தை
எப்படி அறிவித்திருப்பார்கள் என்பது மிகவும் கவனிக் கப்பட வேண்டியது.
மரத்தின் உச்சி மீது ஏறி தப்பட்டை அடிப்பதும், சில இடங்களில் சிவப்புக்
கொடியைத் தூக்கி அசைத்துக் காட்டுவதும், மேலும் சில வழிமுறைகளை யும்
கையாண்டார்கள். அதைக் கண்டு தொழிலாளர்கள் கரையேறுவார்கள். இப்படி
ஒழுங்குபடுத்துவது நிலவுடைமையாளர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சங்கம்
அமைத்து கோரிக்கை வைப்பதைத் தடுப்பதற்காக வேண்டி, சங்கம் வைக்கிறார்கள்
நிலக்கிழார்கள். அதன் பெயர் “உணவு உற்பத்தியாளர் சங்கம்”. பிறகு “நெல்
உற்பத்தியாளர் சங்கம்” என்று பெயரை மாற்றி வைக் கிறார்கள். அதன் முதல்
தலைவராகிறார் எஸ்.எஸ். ராமநாததேவர். நாகையில் நெல் உற்பத்தியாளர் சங்கம்
நடத்திய முதல் பொதுக்கூட்டத்திற்குத் திரைப்பட நடிகர் திரு.சிவாஜி கணேசன்
தலைமை தாங்கியிருக்கிறார். எந்த நிலையில் இருந்தாலும் சாதிப்பாசம் மட்டும்
போகாது என்பதற்கு இந்த நடிகர் ஒரு நல்ல முன்மாதிரி.
இப்போராட்டத்திற்கு இரு கம்யூனிஸ்டுகள்
தவிர்த்துப் பிற கட்சிகள் எல்லாமே நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கு
ஆதரவாகவே இருந்தனர் என்றால் சில்லறையைக் கண்டுவிட்டால் நாயாகக்
குரைப்பதற்கு, நடிகனைவிட அரசியல்வாதி பல படி மேலே போய் விடுவான் என்பதைக்
காட்டுகிறது.
‘உள்ளூரில் வேலைக்கு ஆள் இருக்கும்போது
வெளியூர் ஆட்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது’ என்பது அரசின் ஆணை.
நிலக்கிழார்கள் அதை மீறு கிறார்கள். அரசும் காவல்துறையும் அதைக்கண்டு கொள்
ளாமல் ஆதரித்தன. உள்ளூர்த் தொழிலாளர்களுக்குக் கூலியாக நெல் அளந்து
போட்டவர்கள். வெளியூர்த் தொழிலாளர்க்கு அரிசி அளந்து போட்டார்கள். அவர்
களைத் தடுப்பதற்காக, நிலத்திற்கு நியாயம் கேட்கச் சென்ற உள்ளூர் கூலி
தொழிலாளர்களை விரட்டியடித் தனர். பாதுகாப்புத் தரவேண்டிய காவல்துறை, துப்
பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பக்கிரி என்ற கூலித் தொழிலாளி படுகொலை
ஆனார்.
அப்படுகொலை நடந்த சில நாட்கள் கழித்து மன்னார்குடியில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது தமிழக அரசு.
நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்குப் புதிய தலைவராக இருஞ்சியூர்
கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் பொறுப்பேற்கிறார். அவர்தான் கீழ் வெண்மணி
படுகொலைச் சம்பவத்திற்கே சூத்திரதாரி. அவர் உருவத்தில் மட்டுமல்ல
உள்ளத்திலும் படுபயங்கர மானவர். அவரைப் பார்த்தாலே மிரட்சியாக இருக்கும்
என்கின்றனர் நேரில் பார்த்த அவ்வூர் மக்கள்.
தமிழகத்தில் தஞ்சையில் மட்டுமே உருவாகி
யிருந்த தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைக்க, சாதி எனும் கோடாரியைப்
பயன்படுத்தியது – நெல் உற்பத்தியாளர் சங்கம். வர்க்க ரீதியில் அணிதிரண்டி
ருந்த அடிமை மக்களிடம் சாதி வேற்றுமையை ஊதி விட்டு, தாழ்த்தப்பட்டோர்
குடிசைகளைக் கொளுத்தும்படியான சம்பவங்களை உருவாக்கினர். இன்னொரு புறம்
நிலக்கிழார்களும், காவல்துறையும் சேர்ந்து சட்டரீதியான தாக்குதல்களைத்
தொடுத்தனர். விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு
மேற்கொண்ட முயற்சிகளனைத்தும் தோற்றுபோன தால், முக்கிய ஊழியர்களின்
உயிருக்கு வலை விரித்தது நெல் உற்பத்தியாளர் சங்கம்.
முதல் பலி, இருஞ்சியூரில் சின்னப்பிள்ளை
கடத்திக் கொலை செய்யப்பட்டார். 1968 அக்டோபர் 15 அன்று சின்னப்பிள்ளை,
ராமச்சந்திரன் ஆகியோர் படுகொ லையைக் கண்டித்து நாகையில் கண்டனப் பொதுக்
கூட்டம் நடத்துகிறது. அதேநாளில் நெல் உற்பத்தி யாளர் சங்கம் சிக்கலில் ஒரு
அவசரக் கூட்டம் நடத்து கிறது. விவசாயத் தொழிலாளர்கள் நாகையில் கூட்டம்
முடித்து திரும்பும் போது, சிக்கல் பக்கிரிசாமி என்பவர் படுகொலை
செய்யப்படுகிறார். அண்ணா தலைமை யில் ஆட்சி மாற்றம் நடந்த பின்பும்,
காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றமில்லை. காவல் துறைக்கும்
மனிதநேயத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
30.11.1968ல் நெல் உற்பத்தியாளர் சங்கம்
ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் ஒன்றில் கீழ்வெண்மணிச் சேரியைத் தீ வைத்து
கொளுத்தப் போவதாக சாதி ஆணவத்தோடு பகிரங்க மிரட்டல் விடப்படுகிறது. இதை
யறிந்த அப்பகுதிவாழ் மக்கள் சேரியைப் பாதுகாக்கும் வண்ணம் டிசம்பர் 21, 22,
23 ஆகிய மூன்று நாட்கள் இரவு பகலாக செங்கொடியை ஏந்தியபடித் தீவிரப்
பாதுகாப்பில் இருக்கிறார்கள்.
சேரியின் தலைவர், நாட்டாண்மை ஆகியோரை அடித்து
உதைத்துத் தங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்வது நெல் உற்பத்தியாளர்
சங்கத்தின் வழக்கம். தலைவரும், நாட்டாண்மையும் ஒப்புக்கொண்டால் சேரியே
ஒப்புக்கொண்டதாகக் கருதப்படும் என்பது ஆதிக்கவாதிகளின் கணக்கு.
வெண்மணிச் சேரியின் தலைவரான
முத்துசாமியின் டீக்கடைக்கு வந்த நிலக்கிழாரின் அடியாட்கள் தங்கள்
சங்கத்தில் வந்து சேருமாறு மிரட்டுகிறார்கள். மறுத்ததால் அவரை அடித்து
இழுத்துக் கொண்டு போய் ராமானுஜ நாயுடு என்பவரின் வீட்டில் கட்டி
வைத்துவிட்டு, வெளியில் பூட்டுப்போட்டுவிடுகிறார்கள். அதைக்
கேள்விபட்டவுடன் ஊரார் சிலர் அவ்வீட்டுக்குப் போய்ப் பூட்டை உடைத்து, கட்டை
அவிழ்த்து முத்து சாமியை மீட்டுக்கொண்டு வந்துவிடுகிறார்கள். கொல்லைப்புறம் வந்து நிற்கவே அனுமதி மறுக்கப்பட்ட கூட்டம், தங்கள் தலைவரை வீடு
புகுந்து மீட்டுச் சென்றது அதிர்ச்சி தந்தது ஆதிக்க சக்திக்கு. இதையே
காரணமாக்கி ஊரைக் கொளுத்தத் தயாராகிவிட்டனர்.
இரண்டு, மூன்று நாட்களாக இரவு பகல் தூங்
காமல் செங்கொடிக்குக் காவல் போட்டு ஊருக்குப் பாதுகாப்புக் கொடுத்துக்
கொண்டிருந்த வேளையில், 25.12.1968 இரவு நடுநிசி ஊர் மக்கள் எல்லாம் கழி,
கம்பு, கற்கள் போன்ற தற்காப்பு ஆயுதங்களோடு காத்திருக்கிறார்கள்.
அதேநேரத்தில் நிலக்கிழாரின் அடியாட்களால் துப்பாக்கி, தீப்பந்தம்
போன்றவைகளுடன் ஊர்சுற்றி வளைக்கப்படுகிறது.
எல்லாக் குடிசைகளுக்கும்
தீவைத்துக் கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஊருக்குள் வருகிறார்கள்.
மக்கள் பல திசைகளில் பதறிதெறித்து ஓடுகிறார்கள். இருட்டு வேளையான தால்
தப்பிக்க வழி தெரியவில்லை. வழி தெரியாத சிலர் உடனே தப்பிக்க வேண்டி
அங்கிருந்த ஒரு சிறிய குடிசை வீட்டுக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறார்கள்.
இதைக் கவனித்துவிட்ட வெறிகும்பல் அந்தக் குடிசையை வெளியில்
சாத்திவிட்டு நெருப்பு வைத்து விடுகிறார்கள். அந்தக் குடிசை நின்று
எரிகிறது. வன் முறையாளர்களான சாதிவெறிபிடித்த கும்பல் குடிசையைச் சுற்றி
நிற்கிறார்கள். எரிந்து சாம்பலான அக்கு டிசையின் அளவு வெறும் 10 அடிக்கு 7
அடிதான் இருக்கும். அந்தக் குடிசைதான் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத,
“ராமையாவின் குடிசை” எனத் தலைப்பிட்டு ஆவணப்படமாக வெளிவந்த
அந்தச் சிறிய
குடிசை. பொழுது விடிந்தது; காலையில்தான் காவல்துறை வந்து பார்க்கிறது.
குடிசைக்குள் ஓடி ஒளிந்தவர்கள் மணல் குவியல்போல் ஓருவர் மேல் ஒருவர்
சாய்ந்தும், படுத்தும் ஆணும், பெண்ணும், குழந்தையுமாக கருகிய உடல்
குவியல்கள் தெரிந்தன. பின்னர் எடுத்து அடுக்கி வைத்த போதுதான் இறந்தவர்கள்
எத்தனைப் பேர் எனப் பல குழப்பங்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. முதல்வர்
அண்ணாவுக்கே முதலில் 28 என்றுதான் அறிவிக்கப்படுகிறது. பின்னர்தான்
இறந்தவர்கள் 44 பேர் என்று தெரிவிக்கிறார்கள்.
கரிக்கட்டையாய்க் கருகிப்போன இந்த
மனிதர்கள் என்ன குற்றம் புரிந்தார்கள்? சேரியில் பிறந்ததைத் தவிர, தமது
உரிமையைக் கேட்டதை தவிர, எனப் பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. இப்படம்
பார்க்கும்போது, வர்க்கப் போராட்டமும், வருணப் போராட்டமும் வேறு வேறு அல்ல
என விவரிக்கிறார்
இப்படத்தை எடுத்துப் பாடம் புகட்டும் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.
இப்படத்தை எடுத்துப் பாடம் புகட்டும் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.
இக்கொடுமையான படுகொலை நடந்து 43 ஆண்டு கள்
ஆன பிறகும், எந்தக் கட்சித் தலைவர்களும் திருந்தியதாகத் தெரியவில்லை.
வர்க்கப் போராட்டத்தையும் வருணப் போராட்டத்தையும் வரப்புப் போட்டு பிரித்து
வைத்து, கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வெத்து வேட்டுப்
பேச்சினாலே நாட்டை மாற்றி விடலாம் எனத் தப்புக்கணக்குப் போட்டுக்
கொண்டிருக் கிறார்கள், அதிகாரத்தில் அமருவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.
பாராளுமன்ற ஜனநாயகம் இருக்கும் வரை, வருண
வேறுபாட்டைப் பாதுகாக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் இருக்கும் வரை, இவைகளைத்
தாங்கி பிடிக்கின்ற இந்து மதம் இந்தியாவில் இருக்கும் வரை இன்னும் ஏராளமான
கீழ்வெண்மணிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். ‘ராமையாவின் குடிசைகள்’
ஏராளமாக எரிந்து கொண்டுதான் இருக்கும்.
http://www.periyarthalam.com/2011/08/27/கீழ்வெண்மணி--44 பேர்கள்-கர.html
http://www.periyarthalam.com/2011/08/27/கீழ்வெண்மணி--44 பேர்கள்-கர.html
மதங்கள் என்பதே அன்பை போதிக்கத்தான். ஆனால் நடப்பதோ,,,
ReplyDelete