ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் அறக்கட்டளை சார்பில் சலுகை கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைக்கிறார் ஆளுநர் ரோசய்யா.
சென்னை மகாலிங்கபுரத்தில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் டயாலிசிஸ் மையத்தை ஆளுநர் ரோசய்யா திறந்து வைத்தார்.
ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட இந்த மையத்தில் டயாலிசிஸ் சிகிச்சை செய்வதற்கு ஒரு தடவைக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மையத்தை ஆளுநர் ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பேசியது:
இன்றைய சூழலில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மருத்துவத்துறைக்கு சவாலாக விளங்குகின்றன. அவற்றை கண்டறியவும் அதிக செலவாகிறது. இந்தியாவில் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவர்களில் பெரும்பான்மையினர் அதிக கட்டணம் காரணமாக டயாலிசிஸ் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், சலுகை கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சை வழங்குவதன் மூலம் ஏராளமான ஏழை மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும் என்றார் ரோசய்யா.
தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.எம்.கே ரெட்டி, ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் டயாலிசிஸ் மையத் தலைவர் ஹரீஷ் எல்.மேத்தா, அறக்கட்டளை நிர்வாகி கமலேஷ் நாகர், செயலர் பிரகாஷ் லோதா உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
தினமணி, 28 - 10 -2013
0 comments:
Post a Comment