Home » » ஆஸ்திரேலியா :-மத்திய அரசுக்கும்- தேவாலயங்களுக்கும் சிக்கலை ஏற்டுத்தப்போகும் திருமணச் சட்டம் !

ஆஸ்திரேலியா :-மத்திய அரசுக்கும்- தேவாலயங்களுக்கும் சிக்கலை ஏற்டுத்தப்போகும் திருமணச் சட்டம் !

கான்பெர்ரா, அக். 22-

ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெர்ரா. இப்பிரதேச சட்டசபை முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து இன்று நடந்த விவாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விரும்புகிற ஒரு ஆண், மற்றொரு ஆணையும், அதுபோல் விரும்புகிற ஒரு பெண், மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேறியது.

2004-ம் ஆண்டு ஆண்-பெண் திருமணத்தை மட்டுமே ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. கடந்த வருடம் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான மசோதா தோல்வியை தழுவியது. ஆனால், இன்று ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேச சட்டசபை அளித்துள்ள இந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண ஒப்புதல், மத்திய அரசுக்கும் மற்றும் தேவாலயங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம் செய்துகொள்ள உடனடியாக பதிவு செய்துள்ளனர்.

சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தில் பங்கேற்ற ஓரினச்சேர்க்கையாளரும், அப்பிராந்தியத்தின் துணை முதல் மந்திரியுமான ஆண்ட்ரூ பார், “எங்கள் சமூகம் குறித்த தெளிவான அறிக்கைகளை சமர்ப்பித்து இருக்கிறோம். அதன்படியே நாங்கள் இங்கு வாழ விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய முதல் மந்திரி கட்டி கல்லாகர், “நமது சமுதாயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஏதேனும் அசாம்பாவித சம்பவங்கள் நடக்குமானால் அதற்கு இனி மன்னிப்பு இல்லை” என்று எச்சரித்தார்.

கூட்டணி ஆட்சி நடத்தி வரும் பிரதமர் டோனி அப்போட், ஓரினச்சேர்க்கை திருமணத்தை எதிர்க்கிறார். ஆனால் அவரது சகோதரி, மற்றொரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்ய நிச்சயம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.     

மாலை மலர் - 22-10 -2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger