இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்
பிரபாகரனின் பதுங்கு குழியை அந்நாட்டு ராணுவம் வெடிவைத்துத்
தகர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ராணுவத்துடன் 2009இல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பிரபாகரனும் அவரது மூத்த சகாக்களும் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து முல்லைத் தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
அதன்பின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் பகுதிகளில் ஒன்றாக அது மாறியது.
இந்நிலையில், முல்லைத்தீவில் உள்ள பிரபாகரனின் பதுங்கு குழியை இலங்கை ராணுவம் வியாழக்கிழமை மாலை 6.40 மணியளவில் குண்டு வைத்துத் தகர்த்ததாக கொழும்பு டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அந்தப் பதுங்கு குழிக்கு அருகில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் சென்று தங்குமாறு ராணுவம் கேட்டுக் கொண்டதாகவும் இதற்கு பதுங்கு குழிக்குள் வெடிபொருள்கள் இருந்ததே காரணம் என்று ராணுவம் தெரிவித்ததாகவும் அந்தப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.
எனினும், பிரபாகரனின் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ராணுவம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி, 05-10-2013

0 comments:
Post a Comment