"மணநூல்' என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியே! விருத்தப்பாக்களால் ஆன முதல் காப்பியமான இந்நூலில், திருத்தக்கதேவர் பல்வேறு வாழ்வியல் பதிவுகளைப் பதிவுசெய்யத் தவறவில்லை. அதுவும் அழகு தமிழ்ச் சொல்லாடல் அணிபெறச் செய்த பாடலில் ஒன்றுதான் பிள்ளையான சீவகனை தொடக்கப்பள்ளியில் சேர்க்கும் பாடல்.
÷அக்காலத்தில் பிள்ளைகளைக் கல்விக் கூடங்களில் முதன் முதலாகச் சேர்க்கும்போது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குக் காணிக்கையாக குருணிகலை பொன்னும், மணியும், முத்தும், பொற்காசும் கொடுப்பது வழக்கம். அவற்றோடு அக்கால மரபுப்படி களத்திலே பதர்நீக்கப்பட்ட நெல்லிலிருந்து பெறப்பட்ட பிரப்பரிசியும் கொடுத்துள்ளனர். ஆசிரியர்க்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட பின் சீவகனின் வளர்ப்புப் பெற்றோர், சீவகன் எழுத பொன்னோலையும் பொன்னாலான எழுத்தாணியும் தந்தனர் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு:
""அரும்பொனும் மணியும் முத்தும்
காணமும் குறுணியாகப்
பரந்தெலாப் பிரப்பும் வைத்துப்
பைம்பொன் செய் தவிசினுச்சி
இருந்துபொன் னோலை செம்பொன்
ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொற் கண்ணி யாற்குச்
செல்வியைச் சேர்த்தினாரே!
தமிழ்மணி, தினமணி, 27 - 10 -2013
0 comments:
Post a Comment