Contact address
National Informatics Centre
Ground Floor, Multi-Storeyed Building,
Namakkal Kavignar Maaligai,
Fort St. George,Chennai 600 009
e-Mail:webadmin.tn@nic.in
தகவல் தொழில் நுட்பவியல் (அநமு) துறை
1. திறன் கட்டமைப்பிற்கான சிறப்பு மையம் (Centre of Excellence for Capacity Building)
அரசுத்துறைகள் மின் ஆளுமை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்
மென் பொருள் மேலாண்மை ஒரு முக்கியமான அம்சமாகும். அரசுத்துறைகளில் மென்பொருள் மேலாண்மை செயல்பாட்டு திறமைகளை வளர்ப்பதற்கும், மின் ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்தும் அரசுத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவும், தகுதி சான்றுகளை வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் “திறன் கட்டமைப்பிற்கான சிறப்பு மையம்” ஒன்று உருவாக்கப்படும். இம்மையம் திறன்
மேம்பாட்டிற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பாகத் திகழும்.
2. மேகக் கணினி வழி மின் அலுவலக சேவைகள் (Cloud based e-Office Services)
மின் அலுவலக மென்பொருள் (e-Office Software) என்பது காகிதங்கள் அல்லாத மின்னணு முறையில் கோப்புகளை கையாள உதவும் பயன்பாட்டு மென்பொருள் ஆகும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி ‘மின்னணு அலுவலகம்’ மென்பொருள் சேவை மாநில தரவு மையத்தில் மேகக் கணினி முறையில் நிறுவப்படும். இம்மென்பொருளை விரும்பும் அரசுத் துறைகள் தங்களது அலுவலகப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக எந்த புவிப்பரப்பு எல்லைகளிலிருந்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோப்பினை கையாள முடியும்.
3. மென்பொருள் சோதனைக்கான மூலக்கணினி பண்ணை (“Server
Farm” for Software Testing " )
தகவல் தொழில் நுட்ப மென்பொருளை உருவாக்கும் போது
அதனைஇணையதளத்தில் வெளியிடுவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்புதணிக்கை மற்றும் சோதனை புரிய ஒவ்வொரு துறையும்
தங்களதுமூலக்கணினிகளை (Server Farm) தற்காலிகமாக மாநில தரவு மையத்திற்குகொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே இந்த இடர்ப்பாட்டினைk களையும் வகையில் அரசுத் துறைகள் தங்களது மின்ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்தும் போது பாதுகாப்பு
சோதனைகளுக்காகவும், இணையதளங்களின் உறுதித் தன்மையைs சோதிக்கஏதுவாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி மாநிலத்தரவு மையத்தில் நிரந்தர மூலக்கணினி பண்ணை -“Server
Farm” for Software Testing " - கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
4. குறுந்தகவல் சார்ந்த சேவைக் கண்காணிப்பு (SMS Based Service Tracking)
அரசுத் துறைகள் மின் ஆளுமை சேவைகளை மக்களுக்கு வழங்கி
வருகின்றன. தமிழ்நாட்டில் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதால் அரசு சேவைகளை கைப்பேசியின் வாயிலாகவும்
வழங்குவதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தகவல்களை
அனுப்பவும், அவர்களிடமிருந்து தேவையான தகவல்களை பெறவும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் ஆணையின்படி குறுந்தகவல் சார்ந்த இரு வழி தகவல் தொடர்பு
நிலை அறியும் வசதி ஒன்று ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அரசின்
சேவைகளை பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரடியாக கொண்டு செல்ல
இயலும்.
5. பொதுச் சேவை மையங்கள் ("Common Service Centre") விரிவாக்கம்
பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொதுச் சேவை மையங்கள்
மூலம் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பதற்கு அரசு
முயற்சிகளை எடுத்து வருகிறது. இம்மையங்கள் மூலம் மின் ஆளுமை
அரசுசேவைகள் மற்றும் இதர தனியார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை விரிவு படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி
மாநிலம்முழுவதும் கூடுதலாக 2280 பொதுச் சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் கிராமப்புற மக்கள் அரசின் சேவைகளை பெற அரசு
அலுவலகங்களை நாடி பயணம் மேற்கொள்வது பெருமளவில் தவிர்க்கப்படும்.
உதவி :- தமிழக அரசின் இணையதளம்.
கோரிக்கை :- யூனிகோடு முறை பின்பற்றப்பட வேண்டும். copy & paste
தமிழைப் படிக்க இயலவில்லை. எமது நண்பர்
வின்மணியின் உதவியால்தான், இந்தப் பக்கத்தைப் பதிவு
செய்வது சாத்தியமாயிற்று
0 comments:
Post a Comment