25 பைசா நாணயம் ஒழிக்கப்பட்டு விட்டதே! 25 பைசாவிற்கு என்ன கிடைக்கும்? நிச்சயமாக தபால் துறையின் மேக்தூத் தபால் கார்டு 25 பைசாவிற்கு கிடைக்கும். தபால் கார்டு அறிமுகமான வரலாறு மிகவும் ருசிகரமானது. பாமர மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய தபால் கார்டு முறை 144 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டால் வெளியிடப்பட்ட து.
டாக்டா. இம்மானுவேல் ஹெர்மன் என்ற வியன்னா ராணுவ கழகத்தைச் சேர்ந் தவர் தான் இந்த தபால் கார்டை வடிவமைத்தார். 1875–ல் சர்வதேச அமைப்பாக உருவான போது அப்போதைய இந்திய தபால் தலை டைரக்டர் ஜெனரலாக இ ருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் ஜீலை 1–ம் தேதி 1879 ஆண்டு தபால் கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது.இதே ஆண் டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தபால தலைகள் அறிமுகமாயின.
இங்கிலாந்தில் 1870–ல் தபால் கார்டு அறிமுகமானது. ராணியின் தலை உருவத்தை பழுப்பு நிறத்துடன் அச்சிட்ட உள்நாட்டு தபால் கார்டுகளின் விலையை காணலாம்.ஒன் றரை அணா மதிப்புள்ள வெளி நாட்டு உபயோகத்திற்கான நீல நிற கார்டுகளும் அவ்வாண்டு வெளியிடப்பட்டன. இந்த இரண்டு தபால் கார்டுகளும் லண்டனில் உள்ள தாமஸ்–டி லாரு நிறுவனத்தால் ஜீலை 1ம் தேதி 1879–ல் வெளியிடப்பட்ட து.
அரசுப் பணிகளுக்கு என1880–ல் சேவை தபால் கார்டுகள் அறிமுகமாயிற்று. 1883–ல் பதில் அனுப்பும் தபால் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட் டது. 1922 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 24–ந் தேதி ஒரு கார்டின் விலை கால் அணாவிலிருந்து அரை அணாவாயிற்று. 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந் தேதி முதல் விலை முக்கால் அணாவாயிற்று. 1931 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 24–ந் தேதி விமான சேவை தபால் கார்டுகள் அறிமுகமாயிற்று.சுதந்திரத்திற்கு முன் ராணி உருவம் பொறித்த தபால் கார்டுகளும், ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த தபால் கார்டுகளும் வெளியிடப்பட்டன.சுதந்திரத்திற்கு பின் சில மாதம் வரை ஜார்ஜ மன்னர் உருவம் பொறித்த தபால் கார்டு அரை அணா மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
1949–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி 9 பைசா மதிப்புடைய திருமூர்த்தியின் சித்திரத்தை பச்சை நிறத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.1955–ல் பழுப்பு நிற அரை அணா உள்ளூர் கார்டுகள் வெளியிடப்பட்டன.1957–ல் அசோக சக்கரம் முத்திரை கொண்ட தபால் கார்டுகள் வெளியிடப்பட்டன.1957 ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட பின் கார்டின் விலை 5 நயா பைசா எனவும் 1965 ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் 6 நயா பைசாவாகவும்,1968 மே மாதம் 15–ந் தேதிலிருந்து 10 நயா பைசாவாகவும் விலை உயர்த்தப்பட்டது.
19 வருடங்கள் 1978 முதல் 1997 வரை 15பைசாவிற்கு விற்கப்பட்ட தபால் கார்டு 1997 ஆம் ஆண்டு ஜீன் 1–ந் தேதி 25 பைசாவாக விலை உயர்த்தப்பட்டது.
1979 ஆம் ஆண்டு ஜீலை 1–ந் தேதி தபால் கார்டின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரேத்யேக தபால் கார்டை வெளியிட்டது.போட்டிகளுக்கான தபால் கார்டுகளும் வெளியிடப்பட்டன.
3 பைசாவிற்கு அறிமுகமான தபால் கார்டு தற்போது 50 பைசாவிற்கு விற்கப்படு கிறது.தபால் கார்டை அச்சடிக்க அரசுக்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகக் குறைந்த விலைக்கு தபால் கார்டுகள் விற்க்கப்படுகின்றன
.இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேக்தூத் தபால் கார்டுகளை ஆகஸ்டு
2002–ல் அறிமுகப்படுத்தியது.இதில் விலாசத்திற்கு இடது புறம் உள்ள பகுதியில் விளம்பரத்தை பெற்று அக்கார்டை 25 பைசாவிற்கு விற்பனை செய்து வருகிறது.
இந்த கார்டில் முதன் முதலில் இடம் பெற்ற விளம்பரம் ரஜினியின் பாபா திரைப்படம் ஆகும்.
நன்றி :- தினத்தந்தி
0 comments:
Post a Comment