மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்
1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. `கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதி’யாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, `கச்சத்தீவு – தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்’.
ஆசிரியருக்கு இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழக அரசியலும், திராவிட இயக்கங்கள் குறித்த ஆய்வும் புதிதல்ல. அதற்கு இவர் எழுதியிருக்கும் `தமிழக அரசியல் வரலாறு’, `திராவிட இயக்கங்கள் வரலாறு’ ஆகிய நூல்களே சான்றுகள்.
தமிழகத்தையும், தமிழ்வாசகர்களையும் தாண்டி இந்தப் புத்தகத்தின் வீச்சு இருக்கவும், சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையவும் வேண்டுமெனில் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். கச்சத்தீவு விவகாரம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
(தியாகராயநகர் பேருந்துநிலையம் அருகில்)
தியாகராயநகர், சென்னை - 17.
தொடர்புக்கு: 7200050073
தி இந்து
0 comments:
Post a Comment